Friday, 25 October 2013

ஜெர்ஸிப் பசு: 


ஜெர்சிப் பசுவின் பூர்வீகம் இங்கிலாந்தின் ஜெர்சி தீவு. இது கருமையாகவோ அல்லது வெண்மையாகவோ இருக்கும். உடல் முழுதும் ஒரே நிறத்தைப் பெற்றிருந்தாலும் சில மாடுகளில் வெண்மைப் புள்ளிகளும் காணப்படும். நடுத்தர உடலும் சிறிய முன்னோக்கி வளர்ந்த கொம்புகளுடனும் காணப்படும். ஒரு கறவை காலத்தில் சுமார் 1735 முதல் 2237 கிலோ பால் வரை கொடுக்கும். தமிழகத்தின் தட்ப வெட்பத்தில் சிறப்பாக வளரக்கூடியது.

(தமிழக விவசாயி உலகம்)

சிந்திப்பசு:

சிந்தியின் தாயகம் பாகிஸ்தானில் உள்ள கராச்சி மற்றும் ஐதராபாத் மாவட்டங்கள். நடுத்தரமான உடலும் குட்டையான கொம்புகளும் கொண்டிருக்கும். இதன் நிறம் சிவப்பாக இருப்பதால் இது சிவப்பு சிந்தி என்றும் அழைக்கப்படும். ஒரு கறவைக் காலத்தில் 1250 முதல் 1800 கிலோ வரை பாலைத் தரும். எல்லா தட்ப வெப்ப நிலைகளிலும் சீராக வளரும் என்பதால் நமது நாட்டில் எல்லா இடங்களிலும் வளர்க்கப்படுகிறது

(தமிழக விவசாயி உலகம்)

மாட்டுக்கொட்டகை இப்படியும் போடலாம் :

மாட்டுக்கொட்டகை சற்று உயரமான இடத்தில் அமைக்கனும். சுவரின் உயரம் ஐந்தடி இருந்தால் நல்லது. கூரையின் உயரம் 10 முதல் 12 அடி இருக்கலாம். நல்ல காற்றோட்டம் இருக்கனும். தரை சொரசொரப்பா இருக்கறது முக்கியம். ஒரு மீட்டருக்கு 3 செ.மீ. வாய்வா இருக்கனும். பெரிய மாடுகளுக்கு 40 ச.அடியும் கிடேரிக்கன்றுகளுக்கு 30 ச.அடியும் சிறிய கன்றுகளுக்கு 20 சதுர அடியும் தேவை.

(தமிழக விவசாயி உலகம்)

பசுமாடும் பஞ்சகவ்யாவும் :

ஒரு வேளைக்கு 20 மில்லி வீதம் பஞ்சகவ்யாவைக் காலையிலும் மாலையிலும் கறவை மாட்டுக்குத் தீவனத்தில் கலந்து கொடுக்கலாம். இதனால் பாலின் அளவு அதிகரிக்கிறது. மடிவீக்க நோய் வருவது தவிர்க்கப் படுகிறது. தண்ணீருடன் பஞ்சகவ்யாவைக் கலந்து கன்றுகளுக்க் கொடுக்க உடல் வாளிப்புடனும் நல்ல வளர்ச்சியுடனனும் கன்றுகள் விளங்கும். கால்நடைகளுக்கு நோய் எதிர்ப்பாற்றலைப் பஞ்சகவ்யா பெற்றுத் தருகிறது


கறிக்கோழிக் கவனிங்க :

கறிக்கோழிகளை வாரந்தோறும் எடை போட வேண்டும். நாம் எதிர்பார்க்கும் எடையைக் கோழிகள் அடையாமல் இருந்தால் அதற்குரிய காரணத்தைக் கண்டு பிடிக்கவேண்டும். கோழிகளில் இறப்பு அளவு 2 விழுக்காட்டிற்கும் அதிகமாக இருந்தால் தீவனத்துடன் ஆண்ட்டிபயாடிக் மருந்துகளைக் கலந்து கொடுக்கலாம். இறப்பு அளவும் குறைவாக இருந்து தீவனத்தை இறைச்சியை மாற்றும் திறனும் கோழிகளிடம் குறைவாக இருந்தால் தீவனத்தின் தரத்தைச் சோதியுங்கள்.

0 comments :

Post a Comment