Thursday 19 December 2013


கீரை இல்லா சமையல் வேண்டாமே!


“காய்கறிகள் வாங்கச் செல்லும் நம்மை முதலில் கவர்ந்து இழுப்பது பச்சைப்பசேல் கீரைகள்தான். கீரை வளர்ப்பது மிக எளிது. மிகக்குறுகிய காலத்தில் அறுவடை செய்து விற்பனை செய்துவிடலாம். இதில் ஓர் அதிர்ச்சிச் செய்தியும் உண்டு. தமிழகத்தின் பல புறநகர் பகுதிகளில், கழிவுநீரில் சுகாதாரமே இல்லாமல் கீரை வளர்த்து, விற்பனை செய்து காசு பார்க்கிறார்கள்.

இதனால், நன்மை செய்ய வேண்டிய கீரையே பல நேரங்களில் வயிற்றுப்போக்கு, ஒவ்வாமை போன்ற பாதகங்களை ஏற்படுத்தி விடுகின்றன. இப்பிரச்னையைத் தவிர்க்கும் வகையில், கீரைகளை நம் வீட்டிலேயே எளிதாக வளர்க்கலாம். தானியக்கீரை போன்றவற்றை பெரிய பைகள் அல்லது தொட்டிகளிலும், அரைக்கீரை போன்றவற்றை கீரை படுகைகளிலும், பாலக் கீரையை உயரமான பைகளிலும் வளர்க்கலாம்.

கொத்தமல்லி, புதினா போன்றவற்றை சிறிய பைகளில் வளர்க்கலாம். கீரை விதைகளை நர்சரியில் வாங்கி விதைக்கலாம். அதிகபட்சம் 15 தினங்களில் கூட அறுவடை செய்யும் கீரை வகைகள் உள்ளன. உயிர்ச் சத்தான வைட்டமின்களும் தாது உப்புகளும் அதிக அளவு பச்சைக்கீரை வகைகளில் சேமித்து வைக்கப்பட்டுள்ளதால், இவை தொற்றுநோய்களிலிருந்து நம் உடலை பாதுகாக்கிறது. அதனால் கீரை ‘பாதுகாக்கும் உணவு’ (Protective Food) என்றழைக்கப்படுகிறது.

கீரை மகத்துவம்

அரைக்கீரை: தாது விருத்தி செய்யும். ரத்தத்தை உற்பத்தி செய்யும். கபத்தை உடைத்து வெளியேற்றும். வாத நோய் தணிக்கும்.

அகத்திக்கீரை: பித்தம் குணமாகும். ஜீரணசக்தி உண்டு பண்ணும். இழந்த பலத்தை மீட்டுத்தரும். மலத்தை இளக்கி வெளியேற்றும். வைட்டமின் ஏ மற்றும் கால்சியம் அதிக அளவில் இருப்பதால் உடல் வளர்ச்சியையும், கண் பார்வை தெளிவையும், எலும்பு பலமும் கொடுக்கும்.

தவசு முருங்கை: மூக்கு நீர்பாய்தல், இரைப்பு, இருமல் நீங்கும். கோழை அகற்றும் குணமுடையது.

லஜ்ஜை கெட்ட கீரை: சித்தர்கள் இக்கீரையை ‘வாத மடக்கி‘ என்று கூறுகிறார்கள். மூட்டுவலியும் மூட்டுவீக்கமும் நீங்கும். வாயுத் தொந்தரவுகள் குறையும்.

ஆரைக்கீரை: அளவு மீறிப் போகும் சிறுநீரை கட்டுப்படுத்தி சமநிலைக்கு கொண்டு வரும். பித்தக் கோளாறுகளையும் போக்கும்.

பொன்னாங்கண்ணி கீரை (பச்சை): மேனி பிரகாசிக்கும். தினசரி இக்கீரையை சூப் வைத்து அருந்தினால் உடல் வலு பெறும்.

மணத்தக்காளி கீரை: குடல்புண், வாய்ப்புண் ஆற்றும் சக்தி உள்ளது. சிறிய வெங்காயத்துடன் சமைத்து சாப்பிட்டால் புண்கள் விரைவில் ஆறும்.

முளைக்கீரை: அடிக்கடி உணவில் சேர்த்துக் கொண்டால் இளமையில் தலைமுடி நரைக்காமல் இருக்கும்.

கறிவேப்பிலை: நாள்தோறும் உணவில் ஏதாவது ஒரு வடிவில் சேர்த்துக் கொண்டால் இளமைத்தோற்றம் நிலைத்து நிற்கும்.

பொன்னாங்கண்ணி கீரை(சிவப்பு): பூண்டு சேர்த்து வதக்கி உணவுடன் உண்டால் மூலநோய், வாய்ப்புண், தொண்டைப்புண் நீங்கும்.

புதினா: இரும்புச்சத்து இருப்பதால் ரத்தத்தை சுத்தம் செய்வதோடு, புதிய ரத்தத்தையும் உண்டு பண்ணும். பற்களை கெட்டிப்படுத்தும். எலும்புகளை வளரச் செய்யும். புதினாவை நசுக்கிப் போட்டு கஷாயம் வைத்து சாப்பிட்டால் இளமையுடன் வாழலாம். 1/2 சங்கு புதினாக் கீரையை குழந்தைகளுக்கு கொடுக்க கபம் நீங்கும்.
மணத்தக்காளி கீரையின் மகிமை:-

கீரை வகைகளில் மணத்தக்காளி கீரையும் ஒன்று. இந்த கீரையில் இலை, காய், பழம் இருக்கும். இந்த மூன்றையும் சமைத்து சாப்பிடலாம். இதில் சிறிய அளவில் வெள்ளை பூக்களும் மலரும். மணத்தக்காளி கீரையின் காய்கள் மிக சிறியதாக கொத்து கொத்தாக காய்க்கும். காய் முற்றினால் கத்தரிகாய் நிறத்தில் இருக்கும். இதில் மற்றொரு வகை உள்ளது. அதில் பழம் இளம் சிவப்பாக இருக்கும்.

மணத்தக்காளி கீரையின் பழம் இனிப்பு புளிப்பு கலந்த சுவையாக இருக்கும். காய், பழத்தை பச்சையாகவும் சாப்பிடலாம். சட்டினி, பச்சடி, கூட்டு, பொரியல், ரசம் வைத்தும் சாப்பிடலாம். காய் மற்றும் பழத்தை புளிக்குழம்பு வைத்து சாப்பிடலாம்.

பலன்கள்:

1. மணத்தக்காளி கீரையை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் குடல் புண், மூலம் ஆகிய நோய்கள் குணமாகும். சளி, இருமல், போன்ற கப நோய்களைப் போக்கும் தன்மை கொண்டது. பிள்ளை பெற்ற பெண்களுக்கு மிகவும் நல்லது.

2. கண் பார்வை நன்றாக தெரியும்.

3. விட்டமின் ஏ, பி மற்றும் இரும்பு, சுண்ணாம்பு ஆகிய சத்துக்கள் மணத்தக்காளி கீரையில் அதிகம்.

4. குறைந்த விலையில் கிடைத்தாலும், மணத்தக்காளி கீரையில் போஷாக்கு அதிகம்.

5. குழந்தைகள், கர்ப்பிணிபெண்கள் சாப்பிட்டால் உடலுக்கு நல்லது. மணத்தக்காளி கீரைக் குழம்பு

மணத்தக்காளி கீரைக் குழம்பு

என்னென்ன தேவை?

மணத்தக்காளி கீரை- ஒரு கட்டு
துவரம் பருப்பு-100கிராம்
சிறிய வெங்காயம்-50 கிராம்
தக்காளி -3
பச்சை மிளகாய்- 6
பூண்டு-3சிறிய பல்
புளி- சிறிய எலுமிச்சை அளவு
மஞ்சள் பொடி-1ஸ்பூன்
எண்ணெய்-3டேபிள் ஸ்பூன்
கடுகு, உளுந்து-1 டேபிள் ஸ்பூன்
பெருங்காயம்- கால் டீஸ்பூன்
சீரகம்-1/2 டீஸ்பூன்
வரமிளகாய்- 1
கறிவேப்பிலை,உப்பு-தேவையான அளவு

எப்படி செய்வது?

முதலில் கீரையை ஆய்ந்து கழுவிக் கொள்ளவும். புளியை நூறு மில்லி தண்ணீரில் கரைத்து வடிகட்டி வைத்துக் கொள்ளவும். வெங்காயம், பச்சை மிளகாயை இரண்டிரண்டாக நறுக்கி வைக்கவும். ஒரு தம்ளர் தண்ணீர் விட்டு மஞ்சள் பொடி சேர்த்து துவரம் பருப்பை நன்றாக வேக வைக்கவும். பருப்பு வெந்ததும் அதனுடன் பெருங்காயம், பூண்டு, கீரை, உப்பு சேர்த்து கொதிக்கவிடவும். அடுப்பில் கடாயை வைத்து தேவையான அளவு எண்ணெய் ஊற்றி வெங்காயம், பச்சை மிளகாய், போட்டு வதக்கவும்.

வெங்காயம் பொன்னிறமாக வதங்கியதும் கூடவே தக்காளியைப் போட்டு எண்ணெய் பிரியும் வரை வதக்கவும். பின் கரைந்துள்ள புளிக்கரைசலை ஊற்றி பச்சை வாசனை போகும் வரை கொதிக்க விடவும். கொதிக்கும் புளிக்கரைசலுடன் கடைந்து வைத்துள்ள கீரையைக் கலந்து மேலும் பத்து நிமிடம் கொதிக்க விடவேண்டும். பின் கீரைக் குழம்பை இறக்கி வைத்து, ஒரு டீஸ்பூன் எண்ணெயில் காய்ந்த மிளகாய், கிள்ளிப்போட்டு கடுகு, உளுந்தம் பருப்பு, சீரகம், போட்டு தாளித்தால் ருசியான மணத்தக்காளி கீரை குழம்பு ரெடி..
தண்ணீர் கீரை - அனிமியா பிரச்சனைகளை தீர்க்கும் :-

கீரையின் பயன்களை பற்றி நாம் அறிந்திருப்போம். உடல் நலத்திற்கு ஆரோக்கியத்தை மட்டும் தரும் கீரையை தினமும் உணவில் கட்டாயமாக நாம் சேர்த்துக்கொள்ள வேண்டும். நாம் பார்க்க இருக்கும் தண்ணீர் கீரை ஆரோக்கியம் தருவதோடு மட்டுமல்லாமல் தோல் மற்றும் முடி பிரச்சனைகளையும் சரி செய்கிறது.

தண்ணீர் கீரையின் சுகாதார நன்மைகள்:

பச்சை நிறத்தில் இருக்கும் அனைத்து காய்கறிகளும், கீரைகளும் சத்துகளை தன்னகத்தே கொண்டிருந்தாலும் தண்ணீர் கீரையின் பயன்கள் மிகச்சிறந்ததாகவே விளங்குகின்றது.. தண்ணீர் கீரையில் வைட்டமின், தாதுக்கள் அதிகளவு கொண்டுள்ளதால் மிகச்சிறந்த கீரையாக விளங்குகின்றது. இந்தக் கீரையில் மிகச்சிறந்த வளங்களாக நார்சத்து உணவுகள், புரதம், கால்சியம், இரும்பு, வைட்டமின் ஏ மற்றும் சி யை கொண்டுள்ளது. ஆதலால் வாரத்தில் மூன்று நாட்களுக்கு கீரையை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

கொழுப்பை குறைக்கும்:

எடை பிரச்சனையால் அவதி படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதிக எடையுடன் அவதி படுபவர்கள் தங்கள் எடையை இயற்கையாகவே கட்டுபாட்டுக்குள் வைத்துக்கொள்ள தண்ணீர் கீரையை சாப்பிடலாம்.. தண்ணீர் கீரை கொழுப்பை குறைத்து எடையை கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொள்ளும். ஆதலால் தண்ணீர் கீரையை சூப் செய்தோ, சமைத்தோ எடுத்துக்கொள்ளலாம். தண்ணீர் கீரையை உபயோகப்படுத்தி எலிகளுக்கு சோதனை வைக்கப்பட்டது அதில் தண்ணீர் கீரையை உட்கொண்ட எலிகளின் கொழுப்பு அளவு குறைந்து காணப்பட்டதோடு மட்டுமல்லாமல் ட்ரைகிளிசரைடுகளையும் ஏற்படுத்தியுள்ளது.

மஞ்சள் காமாலை மற்றும் கல்லீரல் சிக்கல்:

மஞ்சள் காமாலை மற்றும் கல்லீரல் பிரச்சனைகளுக்கு சிகிச்சைக்காக ஆயுர்வேத மருத்துவத்தில் பயன்படுத்த படுகிறது தண்ணீர் கீரை. தண்ணீர் கீரையை கொண்டு ஆராய்ச்சி மேற்கொண்ட போது இலையின் சாறு கல்லீரல் மற்றும் மஞ்சள் காமாலைக்கு எதிராக செயல்படுகிறது என கண்டுபிடித்துள்ளனர்.

ரத்தசோகை:

ரத்தசோகையால் அவதிபடுபவர்கள் தண்ணீர் கீரையை உணவில் சேர்த்துக்கொள்ளலாம். ஏனெனில் தண்ணீர் கீரை இரும்பு சத்துகளை அதிகளவு கொண்டுள்ளதால் ரத்தசோகைக்கு எதிராக செயல்படும். கர்ப்பிணிபெண்கள் கீரையை சேர்த்துக்கொள்வது அவசியம். ஏனெனில் உடலுக்கு தேவையான ரத்த அணுக்களை உருவாக்கி ஹீமோகுளோபினை அதிகப்படுத்தும் முக்கிய பொருளாக இக்கீரை உள்ளது..

அஜீரணம் மற்றும் மலச்சிக்கல்:

ஃபைபர் சத்துகளை அதிகளவு கொண்டுள்ள தண்ணீர் கீரை செரிமானக் கோளாறுகளுக்கு நிவாரணம் வழங்குவதில் சிறந்து விளங்குகிறது.. மலச்சிக்கல் மற்றும் அஜீரண பிரச்சனையால் அவதி படுபவர்கள் கீரையை வேகவைத்த தண்ணீரை வடிகட்டி பருகினால் மலச்சிக்கல் பிரச்சனை தீரும். குடல் புழுக்கள், வயிறு பிரச்சனைக்கு இது பேதி மருந்தாகவும் பயன்படுகிறது. ஆகவே வாரத்தில் மூன்று நாட்கள் கீரையை உணவில் தவறாமல் சேர்த்துக்கொள்ளுங்கள்.
வயிற்று புண்ணை குணப்படுத்தும் முளைக்கீரை:-

கீரையை தினமும் உணவில் எடுத்துக்கொள்ள வேண்டியது அவசியம். முளைக்கீரை அதிக வைட்டமின் சத்துக்கள் நிறைந்த கீரை. இக்கீரையில் வைட்டமின் ஏ, வைட்டமின் பி6, வைட்டமின் கே, வைட்டமின் சி, போலேட் மற்றும் ரிபோப்லாவின் ஆகியவற்றை கொண்டுள்ளது.. நீர்சத்து அதிகமுள்ள முளைக்கீரை வயிற்றுப் புண்ணை குணப்படுத்தும் தன்மை கொண்டது.

உடலுக்கு பலம் கூட்டும் சக்தியை கொண்டது. சிறுவர்களுக்கு இந்தக்கீரையை தொடர்ந்து கொடுத்தால் நல்ல உடல் வளர்ச்சி அடைவார்கள். முளைக்கீரையில் கால்சியம், பொட்டாசியம், இரும்பு, தாமிரம், மெக்னீசியம், பாஸ்பரஸ், மங்கனீசு போன்ற கணிமங்களை கொண்டுள்ளது முளைக்கீரை. கோதுமை, அரிசி, ஓட்ஸ், ஆகியவற்றில் கொண்டுள்ள புரதத்தை விட 30% அதிகபுரதத்தை கொண்டுள்ளது. இதயநோய், உயர் ரத்தஅழுத்தம் உள்ளவர்களுக்கு முளைக்கீரை உதவுகிறது.

முளைக்கீரை மிளகூட்டல்

என்னென்ன தேவை

முளைக்கீரை-1கட்டு
துவரம் பருப்பு-100 கிராம்
துருவிய தேங்காய்-1மூடி
சீரகம்-1ஸ்பூன்
காய்ந்த மிளகாய்-3
உளுந்தம் பருப்பு-1ஸ்பூன்
தேங்காய் எண்ணெய்-1ஸ்பூன்
கடுகு- 1/2ஸ்பூன்
பெருங்காயம்- ஒரு சிட்டிகை
உப்பு-தேவையான அளவு

எப்படி செய்வது

முதலில் துவரம் பருப்பை மஞ்சள்தூள் போட்டு வேகவைத்து எடுத்துக்கொள்ள வேண்டும். கீரையின் மண் நிரம்பிய வேர் பகுதியை நறுக்கிப் போட்டு விட்டு மீதமிருக்கும் கீரையை தண்ணீரில் சுத்தமாக அலசி பொடிபொடியாக நறுக்கி கொள்ள வேண்டும். நறுக்கிய கீரையை தனியாக வேகவைத்து எடுத்துக்கொள்ள வேண்டும். அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் விடாமல் உளுத்தம் பருப்பு, காய்ந்த மிளகாயுடன் சீரகம், மற்றும் தேங்காய் சேர்த்து வதக்கி பின் மை போல மிக்ஸியில் அரைத்துக் கொள்ள வேண்டும். அடுப்பில் பாத்திரத்தை வைத்து ஒரு ஸ்பூன் எண்ணெய் விடவும். தீயை மிதமாக வைத்துக்கொள்ளவும். பின்னர் கீரையையும் துவரம் பருப்பையும் ஒன்றன்பின் ஒன்றாக போட்டு கிளறவும். அரைத்த விழுதையும் சேர்க்கவும். கொஞ்சம் தண்ணீர் சேர்த்து அனைத்தையும் ஒன்றாகச் சேரும்படி கிளறவும். எல்லாம் சேர்ந்து வந்ததும் இறக்கி வைத்து ஒரு டேபிள் ஸ்பூன் தேங்காய் எண்ணெயில் கடுகு, உளுத்தம் பருப்பு, பெருங்காயம், கறிவேப்பிலை சேர்த்து தாளித்து கொட்டவும். சுவையான முளைக்கீரை மிளகூட்டல் தயார்.
வல்லாரை கீரையும் அதன் பயன்களும்:-

வல்லமை மிக்க கீரை என்பதால் வல்லாரை எனப்பெயர் பெற்றது. காசம், மேகம், போன்ற நோய்களைக் குணப்படுத்துவதில் வல்லாரை கீரை நிகரற்றது. இந்த கீரையை பால் கலந்து அரைக்க வேண்டும். அரைக்கப்பட்ட விழுதை நெல்லிக்காய் அளவு திரட்டி உண்ண வேண்டும். இப்படி இந்த விழுதை தொடர்ந்து மாதக் கணக்கில் சாப்பிட்டு வந்தால் நரை மறைந்து இளமை தோற்றம் திரும்பும்.

எந்த விதமான காய்ச்சலாக இருந்தாலும் வல்லாரை இலையால் செய்யப்பட்ட மாத்திரை குணமாக்கும். உடலில் ஏற்படும் கட்டிகள் மற்றும் புண்கள் ஆகியவற்றை வல்லாரை சரிசெய்து விடும் ஆற்றல் வாய்ந்தது. வல்லாரை இலையுடன் மிளகு, துளசி இலை, ஆகியவற்றை சம அளவு எடுத்து மெழுகுபதமாக அரைத்து மாத்திரைகளாக உருட்டி நிழலில் உலர்த்தி வைத்துக்கொண்டு சுடுநீரில் சாப்பிட்டால் காய்ச்சல் குணமாகும்.

யானைக்கால் நோய் உள்ளவர்கள் இந்த இலையை தொடர்ந்து காலில் வைத்து கட்டி வந்தால் யானைக்கால் நோய் எளிதில் குணமாகும். வல்லாரை இலையை அரைத்து உள்ளுக்குள் கொடுத்தால் விரை வீக்கம், வாயுவீக்கம், தசை சிதைவு, போன்றவை குணமாகிவிடும். இக்கீரையில் இரும்புச்சத்து, சுண்ணாம்புச்சத்து, உயிர்சத்து 'எ', உயிர்சத்து 'சி' மற்றும் தாதுஉப்புக்கள் ஏராளமாக அடங்கியுள்ளன. இரத்தத்திற்க்கு தேவையான சத்துக்களை, சரிவிகித அளவில் கொண்டுள்ளது.

மூளை நன்கு செயல்படத் தேவையான ஊட்டச்சத்துக்களை, தகுந்தமுறையில் பெற்றிருக்கிறது. எனவே தான், இதனை சரசுவதிக் கீரை யென்றும் அழைக்கின்றனர். இரத்த சுத்திகரிப்பு வேலையைச் சிறப்பாக செய்கிறது. தொண்டைக்கட்டு, காய்ச்சல், உடற்சோர்வு, பல்நோய்கள் மற்றும் படை போன்ற தோல் நோய்களை வேரறுக்கும் வல்லமைக் கொண்டது. இக்கீரையை கொண்டு பல்துலக்கினால், பற்களின் மஞ்சள் தன்மை நீங்கும்.

வெந்தயக்கீரையின் பயன்கள் :-


வெந்தயக் கீரையைக் கொண்டு அல்வா தயாரித்துக் காலை மாலை கொட்டைப் பாக்களவு சாப்பிட்டு வந்தால் உடல் சூடு தணிந்து சமப்படும். சீதபேதி குணமாகும். வயிற்றுப் போக்கை நிறுத்தும். மாதவிடாய் தொல்லை நீங்கவும், உடலை வளர்க்கும் புதிய இரத்தத்தை உற்பத்தி செய்யும். உடலுக்கு நல்ல பலம் தரும்.

வெந்தயக்கீரையைக் கூட்டு வைத்துப் பகலில் சாப்பிட்டால் வாய்வு கலைந்து விடும். மூன்றே நாட்களில் வாயு முழுவதையும் கலைத்து விடும். வயிற்று உப்பிசம் இருந்தாலும் தணிந்து விடும். வெந்தயக் கீரையைப் பொடியாக நறுக்கி ஒரு சட்டியில் போட்டு வதக்கி, இரண்டு டம்ளர் தண்ணீர் விட்டு,ஒரு டம்ளர் அறவிற்குச் சுண்டக்காய்ச்சி, காலை மாலை அரை டம்ளர் வீதம் கொடுத்து வந்தால் நெஞ்சுவலி பூரணமாகக் குணமாகும்.

வெந்தயக் கீரையை ஆய்ந்து வேரை நீக்கி, கழுவி ஒரு சட்டியுல் போட்டுச் சிறிதளவு தண்ணீர் விட்டு நன்றாக வேகவைக்க வேண்டும். வெந்தயக்கீரை இருக்கும் அளவில் இரண்டு பங்கு கோதுமை ரவையை எடுத்து லேசாக வறுத்து இதில் கொட்டி, எல்லாம் எந்த அளவு இருக்கிறதோ அந்த அளவிற்கு சர்கரை சேர்த்து இலேசாகக் கிளறிக் கொண்டே இருந்தால் அல்வா போல வரும்.

வயதுக்கு வரும் பெண்கள் இதைச்சாப்பிட்டால் இரத்த விருத்தியுண்டாகும். வெந்தயக்கீரையில் ஏ வைட்டமின் சத்தியும், சுண்ணாம்புச்சத்தும் இருப்பதால் இதைப் சாப்பிடும் போது மாரடைப்பு, கண்பார்வை குறை, வாதம், சொறி சிரங்கு, இரத்தசோகை ஆகியவை குணமடையவும்,, பசியைப்போக்கவும் பயன்படுகிறது. வெந்தயக்கீரையில் 49 கலோரி சத்துள்ளது. வெந்தயக்கீரையுடன் பாசிப்பயிர் சேர்த்து குழம்பு வைத்துச் சாப்பிட்டால் கல்லீரல் பலப்படுகிறது வாய்ங்குவேக்காடு வராது.

சுக்கான் கீரை பயன்கள்:-


சுக்கான் கீரை மருத்துவப் பயன் கொண்ட கீரையாகும். இந்தக் கீரையின் மருத்துவக் குணம் பலருக்கும் தெரியாத காரணத்தால் இதை மக்கள் பயன்படுத்துவது குறைவு. இதனால் இதனை பயிரிடுவதில்லை.

ஆனால் இது தானாக பல இடங்களில் வளர்கிறது. தென்மேற்கு ஆசியாவிலும், வட ஆப்பிரிக்காவிலும் செழித்து வளருகிறது.

இதனை சுக்குக் கீரை, சொக்கான் கீரை என அழைக்கின்றனர்.

இந்தக் கீரையின் விதைகளை வாங்கி வீட்டுத் தோட்டத்தில் பயிரிட்டு வளர்க்கலாம்.

இது பலவித நோய்களை குணப்படுத்தும் தன்மை கொண்டது. இக்கீரையின் மருத்துவப் பயன்கள் பற்றி தெரிந்துகொள்வோம்.

குடற்புண் குணமாக

உணவுமுறை மாறுபாடு, வாயு சீற்றமடைதல், மன அழுத்தம் போன்ற காரணங்களால் குடலில் புண்கள் உருவாகின்றன. இவர்கள் சுக்கான் கீரையை புளி சேர்க்காமல் பாசிப் பருப்புடன் கலந்து வேகவைத்து மதிய உணவில் சேர்த்துக்கொண்டால் குடல்புண் குணமாகும். இதனை சட்னி செய்தும் சாப்பிடலாம்.

இதய பலவீனம் சரியாக

மனித இதயம் ஒரு நிமிடத்திற்கு 72 முறை சுருங்கி விரியும். இதில் மாறுபாடு ஏற்படுமானால் உடலில் ஏதோ நோய் ஏற்படுகிறது என்று பொருள். அதிக இரத்த அழுத்தம், குறைந்த இரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு இதயத் துடிப்பு சீராக இருக்காது.

இவர்கள் சுக்கான் கீரையை தொடர்ந்து உணவில் சேர்த்துக்கொண்டால் இதயம் நன்கு பலப்படும், சீராக இயங்கும் . தொடர்ந்து ஒரு மண்டலம் சாப்பிட்டு வருதல் நலம்.

பல்வலி குணமாக

சுக்கான் கீரையின் வேரை நிழலில் உலர்த்தி பொடி செய்து தினமும் காலையில் பல் துலக்கி வந்தால் பற்கள் பலப்படுவதுடன் பல் ஈறுகள் உறுதியாகும்.

மலச்சிக்கல் நீங்க

மலச்சிக்கலின்றி இருந்தால் நோய்கள் எளிதில் அணுகாது. இந்த மலச்சிக்கலைத் தீர்க்க சுக்கான் கீரை சிறந்த மருந்து.

சுக்கான் கீரையை ஏதாவது ஒரு வகையில் உணவில் தினமும்சேர்த்து சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் ஏற்படாது.

பசியைத் தூண்ட

சிலருக்கு சாப்பிட்ட உணவு எளிதில் சீரணமாகாது. மேலும் பசி என்பதே இவர்களுக்கு இருக்காது.

இவர்கள் சுக்கான் கீரையோடு பூண்டு, சின்ன வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கி சட்னிபோல் செய்து சாப்பிட்டு வந்தால் ஜீரண சக்தி அதிகரிக்கும். நன்கு பசியைத் தூண்டும் .

ஈரல் பலப்பட

மது, புகை, போதை வஸ்துக்கள் பயன் படுத்துபவர்களுக்கு ஈரல் வெகு விரைவில் பாதிக்கப்படும். இதனால் இவர்களின் உடலில் பித்தம் அதிகரித்து பல நோய்கள் ஏற்பட வாய்ப்பாகிறது.

இவர்கள் சுக்கான் கீரையை சூப் செய்து அருந்தி வந்தால் ஈரல் நன்கு பலப்படும்.

நெஞ்செரிச்லைத் தடுக்க

சிலருக்கு எது சாப்பிட்டாலும் ஜீரணமாகாமல் நெஞ்சில் எரிச்சலை உண்டாக்கும். இவர்கள் சுக்கான் கீரையுடன் பாசி பருப்பு சேர்த்து கூட்டு செய்து சாப்பிட்டு வந்தால் நெஞ்செரிச்சல் நீங்கும்.

இரத்தத்தைச் சுத்தப்படுத்த

இரத்தம் தூய்மையாக இருந்தால் தான் மனிதன் ஆரோக்கியமாக வாழ முடியும்.

சுக்கான் கீரை இரத்தத்தைச் சுத்தப்படுத்தும் தன்மை கொண்டது. சுக்கான் கீரையை நன்கு நீர்விட்டு அலசி அதனுடன் சின்ன வெங்காயம், பூண்டு, தேங்காய் சேர்த்து நன்கு வதக்கி பின் சட்னியாக அரைத்து காலை உணவில் சேர்த்து சாப்பிட்டு வந்தால் இரத்தம் சுத்தப்படும்.

தேள் கடிக்கு

தேள் கொட்டினால் விஷம் ஏறி கடுப்பையும், மூர்ச்சையையும் உண்டாக்கும்.

எனவே தேள் கடித்த உடனே கடி பட்ட இடத்தில் சுக்கான் கீரையின் சாறு விட்டு வந்தால் வலி குறையும், மூர்ச்சை ஏற்படாது. விஷமும் விரைவில் இறங்கும்.

மேலும் சில மருத்துவக் குணங்கள்

· வாந்தியைக் கட்டுப்படுத்தும்.

· வயிறு சம்பந்தப்பட்ட நோய்களைத் தீர்க்கும்.

· ஆஸ்துமாவின் பாதிப்புகளை குறைக்கும்.

· வாயுவைக் குறைக்கும்.

· நீர்க்கடுப்பைக் குணப்படுத்தும்.

100 கிராம் சுக்கான் கீரையில் உள்ள சத்துக்கள்

சுண்ணாம்புச் சத்து - 60 மி.கி.

இரும்புச் சத்து - 9 மி.கி.

மணிச்சத்து - 15 மி.கி.

வைட்டமின் ஏ - 6000 த

(அனைத்துலக அலகு)

வைட்டமின் சி - 13 மி.கி.

தயாமின் - 0.03 மி.கி.

ரைபோஃபிளேவின் - 0.066

இத்தகைய சிறப்புகள் கொண்ட கீரையை நாமும் சாப்பிட்டு நலமுடன் வாழ்வோம்.
கரிசலாங்கண்ணி:-

இது ஒரு கற்பகமூலிகையாகும். இதன் பொதுவான குணம் என்னவென்றால் கல்லீரல். மண்ணீரல். நுரையீரல், சிறு நீரகம், ஆகியவற்றைத் தூய்மை செய்கிறது. உடலை பொன்போல் மாற்றுகிறது. இரும்பு, தங்கச் சத்திக்களை உடையது. காமாலை எதுவாயினும் குணமாக்குகின்றது. நீரிழிவைக் கட்டுப் படுத்துகின்றது. சளி, இருமல், தோல்பற்றிய நோய்களுக்கும் மருந்தாகும்.

* தொந்தி கரைய -: இதனைக் கீரையாகச் சமைத்துச் சாப்பிடலாம். பொரியல். கூட்டு, கடைசல் செய்து சாப்பிட உடலிலிருந்து கெட்ட நீர் வெளியாகும். உடல் குளிர்ச்சி பெறும், மலச்சிக்கல் நீங்கும், அறிவு தெளிவுறும், நாளும்சாப்பிட்டு வர உடல் எடை குறையும். தொந்தி கரையும்.

* மஞ்சக் காமாலை -: மஞ்சள் பூவுடைய கரிசலாங்கண்ணி, தும்பை இலை, கீழாநெல்லி சம அளவில் அரைத்து நெல்லி அளவு பசும்பாலில் காலை வெறும் வயிற்றில் சாப்பிட்டு வர 7 அல்லது - 10 நாளில் மஞ்சள் காமாலை முற்றிலும் குணமாகும். ஆனால் புளி, காரம் நீக்கி பத்தியம் இருக்கவேண்டும்.

* காமாலை சோகை -: இதன் மஞ்சள் பூவுடைய இலை 10,வேப்பிலை 6, கீழாநெல்லி இரண்டு இணுக்கு துளசி 4,இலை சேர்த்து நன்றாக மென்று காலை மாலை வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டும். மோர் அரிசிக் கஞ்சி சாப்பிடலாம். 10 லிருந்து- 20 நாளில் காமாலை சோகை நீர் சுரவை வீக்கம், கண், முகம் வெளுத்தல் ஆகியன குணமாகும். ஊளைச் சதை குறையும், சிறுநீர்த் தடை, எரிச்சல், கை, கால், பாதம் வீக்கம் குணமாகும்.

* ஆஸ்த்துமா, சளி -: கரிசலைச் சாறு + எள் நெய் வகைக்குஒரு லிட்டர் கலந்து, இதில் அதி மதுரம்100 கிராம், திப்பிலி 50 கிராம் போட்டு சாறு சுண்டக் காய்ச்சி வடிக்கவும். இதில் 5 மி.லி, அளவு காலை மாலை சாப்பிட ஆஸ்த்துமா,சளி, இருமல், குரல்கம்மல் குணமாகும். தலைக்கும் தேய்க்கலாம்.

* குழந்தை இருமல் -: இதன் சாறு பத்துச் சொட்டு+ தேன் பத்து துளி கலந்து வெந்நீரில் கொடுக்க குழந்தையின் இருமல், சளி குணமாகும். காது வலி இதன் சாறு காதில் விட காதுவலி தீரும்.

* பாம்புக்கடி -: 200 மி.லி. மோரில் இதன் சாறு 50 மி.லி.கலந்து கொடுக்க பாம்புக் கடி விஷம் குறையும், நீங்கும். தேள் கடிக்கு இலையைத் தின்னவும். அரைத்துக் கடிவாயில் கட்டவும் விஷம் இறங்கும்.

* குட்டநோய் -: நூறு ஆண்டு ஆன வேப்பம் பட்டை உலர்த்திய சூரணத்தை ஏழு முறை கரிசலாங்கண்ணி சாற்றில் ஊறவைத்து உலர்த்திய பொடியை 5 கிராம் அளவு வெந்நீரில் சாப்பிட 48 - 144 நாளில் 18 வகை குட்டமும் குணமாகும்.

* முடிவளர -: எள் நெய் அல்லது தேங்காய் எண்ணையில் இதன் இலையை அரைத்துப் போட்டு கதிரொளியில் 8 நாள் புடமிட்டு வடித்துத் தலைக்குத் தேய்க்க முடி வளரும்.

* இதனால் குரலுறுப்பு நோய், குணமடைந்து குரல் இனிமையாகும். பல் நோய் குணமாகும். இதன் வேர் பொடி தோலைப்பற்றிய பிணிக்கும் கொடுக்கலாம்.

* மகோதர வியாதிக்கு: கரிசலாங்கண்ணியைச் சுத்தம் செய்து இடித்துச் சாரெடுத்து 100 மில்லியளவு தினமும் இரண்டு வேளை பதினைந்து தினங்களுக்குக் குறையாமல் சாப்பிட வேண்டும். உப்பு நீங்கி பத்தியம் இருந்தால் மிக விரைவில் நோய் நிவாரணம் அடையும். உப்பில்லாப்பத்தியம் கண்டிப்பாக இருக்க வேண்டும். கல்லீரல், மண்ணீரல் பாதுகாப்பு அடையும். மகோதர வியாதி குணமடையும்.

* ஆஸ்துமா குணமாக: கரிசலாங்கண்ணிச் சூரணத்தை நான்கு மாசத்துக்கு ஒரு பாகம் திப்பிலிச்சூரணம் சேர்த்து காலை, மாலை ஒரு தேக்கரண்டி தேனில் குழைத்து ஒரு மாத காலம் சாப்பிட்டு வந்தால் ஆஸ்துமாவின் தொல்லை குறையும்.

* சிறுநீர் எரிச்சல், பெண்களின் பெரும்பாடு நோய் நீங்க:கரிசாலைச் சாற்றை காலை வேளையில் தினம் 30 மில்லியளவு சாப்பிட்டு வந்தால் சிறுநீர் எரிச்சல் குணமாகும்.

* தலைப்பொடுகு நீங்க: கரிசலாங்கண்ணிச் சாறு 100 மில்லி, அறுகம்புல் சாறு 100 மில்லி, தேங்காய் எண்ணெய் 200 மில்லி சேர்த்து காய்ச்சி தைலப் பதம் வந்ததும் வடிகட்டி வைத்துக்கொண்டு தலைக்குத் தடவி வந்தால் பொடுகு நீங்கிவிடும்.

* பல் உறுதிக்கு!கரிசலாங்கண்ணி இலையை பல் துலக்கப் பயன்படுத்தினால், பற்கள் உறுதியாகும். ஈற்றில் உள்ள நோய்க் கிருமிகள் அழிந்து ஈறுகள் பலப்படும். தொண்டைச் சளி வெளியேறி விடும்.

* நாள்பட்ட புண் ஆற...கரிசலாங்கண்ணி மிகச் சிறந்த கிருமி நாசினியாக இருப்பதால் அழுகும் நிலையில் உள்ள புண்கள், வெட்டுக் காயங்களுக்கு இலையை அரைத்து சாறு பூசினாலும், புண்கள் மேல் வைத்துக் கட்டினாலும் மிக விரைவில் புண்கள் ஆறிவிடும்.

பொடுதலை கீரையின் மருத்துவ பயன்கள்:-


கிராமங்களில் அதிகம் காணப்படும் பொடுதலை பற்றி தெரிந்து கொள்வோம்.இது தரையோடு படர்ந்திருக்கும். ஆறு, குளம், குட்டை, வாய்க்கால் வரப்புகளில் இந்த கீரைகள் அதிகம் காணப்படும். பெரும்பாலானோர் இதனை அறிந்திருக்க வாய்ப்பில்லை. ஆனால் இது தென்னிந்தியா முழுவதும் அதிகம் காணப்படுகிறது.

இது வெப்பத் தன்மை கொண்டது.

இதனை பூற்சாதம், பொடுதலை என பல பெயர்களில் அழைக்கின்றனர்.

இதன் இலை, வேர் மருத்துவப் பயன் கொண்டது.

ஒற்றைத் தலைவலி நீங்க

தலைவலியால் பாதிக்கப்படாதவர்கள் யாரும் இருக்க முடியாது. உடலில் எந்தவகையான பாதிப்பு ஏற்பட்டாலும் தலைவலிதான் முதலில் உருவாகும். இதில் மன அழுத்தம் உருவானால் ஒற்றைத் தலைவலி உண்டாகும். இந்த தலைவலி பல வகையில் அல்லல்படுத்தும்.

இவர்கள் பொடுதலை இலைகளை அரைத்து தலைவலி உள்ள பகுதியில் பற்று போட்டால் ஒற்றைத் தலைவலி விரைவில் நீங்கும்.

இருமலை தடுக்க

இருமல் பாதிப்புள்ளவர்கள் பொடுதலை இலையை சுத்தம் செய்து அதனுடன் பாசிப்பருப்பு கலந்து வேகவைத்து கூட்டு செய்து சாப்பிட்டு வந்தால் இருமல் குணமாகும்.

நீரிழிவு நோயின் தாக்கம் குறைய

நீரிழிவு நோயின் தாக்கம் உள்ளவர்களுக்கு பொடுதலை சிறந்த மருந்தாகிறது. பொடுதலையை சுத்தம் செய்து அதனுடன் பூண்டு, சின்ன வெங்காயம் சேர்த்து நெய் விட்டு வதக்கி சட்னி செய்து சாப்பிட்டு வந்தால் நீரிழிவு நோயின் தாக்கம் வெகுவாக குறையும்.

அக்கிப் புண்ணை குணப்படுத்த

உடல் சூட்டால் உடலில் சிறு சிறு கட்டிகள் தோன்றி கொப்புளங்களாக உருவாகும். இதனை அக்கி என்பர். இது உடலில் அதிக எரிச்சலை உண்டாக்கும். பாதிக்கப்பட்டவர்கள், பொடுதலையை நன்கு மைபோல் அரைத்து அக்கியின் கொப்புளங்கள் மீது தடவினால் எரிச்சல் நீங்குவதுடன் கொப்புளங்கள் உடைந்து புண்கள் விரைவில் ஆறும்.

வயிற்று உபாதைகள் நீங்க

பொடுதலையை நிழலில் உலர்த்தி பொடியாக்கி வைத்துக்கொண்டு, காலை, மாலை என இருவேளையும் கஷாயம் செய்து இரண்டு நாட்களுக்கு அருந்தி வந்தால் வயிற்று உபாதைகள் நீங்கும்.

வெள்ளை படுதலை குணப்படுத்த

பெண்களை பெரிதும் மன உளைச்சலுக்கு ஆளாக்கும் நோயில் வெள்ளைப்படுதலும் ஒன்று. இந்த பாதிப்புக்கு உள்ளானவர்கள் பொடுதலையை நிழலில் உலர்த்தி பொடி செய்து தினமும் காலையில் 1 தேக்கரண்டி பொடியுடன் தேன் கலந்து சாப்பிட்டு வரவேண்டும். அல்லது காலை, மாலை இருவேளையும் கஷாயம் செய்து சாப்பிட்டு வந்தால் வெள்ளைப்படுதல் குணமாகும்.

பொடுகு நீங்க

இக்காலத்தில் ஆண், பெண் பாரபட்சமின்றி பொடுகுத் தொல்லையால்
பாதிக்கப்படுகின்றனர். இவர்கள் பொடுதலையை அரைத்து தலையில் தேய்த்து ஊறவைத்து குளித்து வந்தால் பொடுகு நீங்கும். அல்லது தேங்காய் எண்ணெயில் பொடுதலை இலைகளை போட்டு நன்றாகக் காய்ச்சி அந்த எண்ணெயை தினமும் தலையில் தேய்த்து வந்தால் பொடுகுத் தொல்லை நீங்கும்.

விரை வீக்கம் குறைய

சிலருக்கு வாயுவினாலோ அல்லது ஏதேனும் அடிபட்டாலோ விரைப்பையில் வீக்கம் உண்டாகும். இவர்கள் பொடுதலையை மைபோல் அரைத்து வீக்கம் உண்டான பகுதியில் பற்று போட்டால் விரைவீக்கம் குறையும்.

கருப்பை வலுப்பெற

சில பெண்களுக்கு கருப்பை வலுவில்லாமல் இருப்பதால் கருச்சிதைவு உண்டாகும்.இவர்கள் பொடுதலையை உணவில் அடிக்கடி சேர்த்துக்கொண்டால் கருப்பை வலுப்பெறும்.

கை கால் வீக்கம் குணமாக

கை, கால் கணுக்களில் வீக்கம் உள்ளவர்கள் இதன் இலையை அரைத்து வீக்கமுள்ள பகுதியில் பூசி வந்தால் கை கால் வீக்கம் குறையும்.

பலவித நோய்களையும் போக்கும் பொடுதலையை அடிக்கடி உண்ணாமல் மாதத்திற்கு ஒருமுறையோ அல்லது இருமுறையோ அளவோடு சேர்த்துக்கொள்வது நல்லது.

தோல் நோய்கள் அனைத்திற்கும் பொடுதலை சிறந்த மருந்தாகப் பயன்படுகிறது. தலையிலுள்ள பொடுகையும் நீக்கும். இச்செடியின் வேர், காய், பூ அனைத்துமே மருத்துவக் குணம் உடையது, எனவே இச்செடியை வேர், பூ, காயோடு பிடுங்கிக் கொள்ள வேண்டும். இதனுடன் சிறிதளவு நீர் விட்டு நன்றாக இடித்து சாறு எடுத்துக் கொள்ள வேண்டும். அதனுடன் சம அளவு நல்லெண்ணெய் சேர்த்து, அதிக நெருப்பில்லாமல் நன்றாகக் காய்ச்சி வாரம் இருமுறை தலையிர் நன்றாக அழுத்தித் தேய்த்து குளிக்க தலை மற்றும் உடல் தொடர்பான தோல் நோய்கள் அனைத்தும் குணமாகும்.


கீழாநெல்லிக் கீரையின் பயன்கள்:-



நீர் நிறைந்த சதுப்பு நிலங்களிலும், வயல் மற்றும் கால்வாய் ஓரங்களில் வளரும் இக்கீரை எளிதில் கிடைக்கும்.

கீழாநெல்லி, கீழ்க்காய் நெல்லி, கீழ்வாய் நெல்லி ஆகிய பெயர்களில் அழைக்கப்படுகிறது.

இக்கீரையில் கிட்டத்தட்ட அனைத்துச் சுவைகளும் அடங்கியுள்ளன. புளிப்பு, துவர்ப்பு, கசப்பு, இனிப்பு ஆகிய நான்கு சுவைகளும் உண்டு. இக்கீரை குளிர்ச்சித் தன்மை உடையது.

இக்கீரையின் தளிர்களை அரைலிட்டர் தண்ணீரில் இட்டுக் காய்ச்சி, வடிகட்டி தண்ணீரை மட்டும் குடித்து வந்தால் சீதபேதி உடனே மாறும். இரத்த சோகையால் உடல் வெளுத்துக் காணப்படுபவர், மேகநோயால் அவதிப்படுபவர் இதை நன்றாக அரைத்து பசுவின் தயிரில் கலந்து நாள்தோறும் காலையில் பருகி வந்தால் நல்ல பலன் கிட்டும்.
மஞ்சள் காமாலையைக் குணப்படுத்த இக்கீரையைத் தவிர வேறு மருந்து கிடையாது. கீழாநெல்லிக்காய்களே ஆங்கில மருத்துவத்திலும் மஞ்சள் காமாலைக்குப் பயன்படுத்தப் படுகிறது.

கீழாநெல்லி, தும்பை இலை, கரிசலாங்கண்ணி இவைகளை சம அளவு எடுத்து நன்றாக அரைத்து, காலை, மாலை சுமார் பத்து நாட்கள் உண்டு வந்தால் காமாலை நோய் பூரணமாகக் குணமாகும். பெரியவர்கள் நெல்லிக்காய் அளவும், சிறியவர்கள் சுண்டைக்காய் அளவும் உட்கொண்டால் போதுமானது. காரம், புளியைத் தவிர்த்து, வழக்கத்திற்கு பாதி உப்பு சேர்த்து, பால்சோறு அல்லது தயிர்சோறு மட்டும் சாப்பிட்டு வர வேண்டும்.

தாது பலம் இழந்து மனம் மற்றும் முகவாட்டத்துடன் இருக்கும் ஆண்கள் இக்கீரையுடன் ஓரிதழ் தாமரை இலையையும் சேர்த்து அரைத்து நெல்லிக்காய் அளவு தினமும் சுமார் நாற்பது நாட்கள் உண்டால் போதும். இழந்த உயிர்சக்தியை மீண்டும் பெறலாம். ஆண்மை மிகும்.
இக்கீரை பசியை நன்றாகத் தூண்டும்.

சொறி, சிரங்குகளுக்கு இக்கீரையை உப்புடன் சேர்த்து அரைத்துப் பூசினால் நல்ல பலன் கிட்டும். காயங்களுக்கு உப்பு சேர்க்காமல் வெறுமனே இக்கீரையை அரைத்து, பற்றுப் போட்டால் காயங்கள் விரைவில் ஆறும்.

மாதுளைக் கொழுந்தும், இக்கீரையையும் சம அளவில் கலந்து அரைத்து, பசுவின் தயிர் அல்லது மோரில் கலந்து ஓரிரு நாட்கள் குடித்தால் போதும், சீதபேதி குணமாகும்.

கண் பார்வை மங்குதல், மாலைக் கண் போன்ற கோளாறுகளுக்கு, கீழாநெல்லிக்கீரை, பொன்னாங்கண்ணிக் கீரையை சம அளவு எடுத்து நன்றாக அரைத்து காலை, மாலை புளித்த மோரில் கலந்து தொடர்ந்து நாற்பது நாட்கள் பருகினால் போதும். பார்வை மிகும். கண்பார்வை கூர்மை பெறும்.

தூதுவளை கீரையின் பயன்கள்:-

தூதுவளை ஓர் வகைக் கொடியாகும். தூதுவளையின் மறுபெயர் “கூதளம்” என்பதாகும். சிறு முட்கள் காணப்படும். இதன் வேரும் இலையும் கைப்பு (கசப்பு), கார்ப்பு சுவையுடையது. தூதுவளையை சமைத்துச் சாப்பிட கபத்தால் உண்டாகும் காதுமந்தம், காதெழுச்சி, காசம், நமைச்சல், அக்னி மாந்தம், தேக உட்குத்தல், விந்து நட்டம் ஆகியவை நீங்கும்.

இலையை சிறிய வெங்காயத்துடன் சேர்த்து நல்லெண்ணெயில் வதக்கி மூன்று நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டு பின்பு மூன்று நாட்கள் விட்டு மூன்று நாட்கள் சாப்பிட வேண்டும். இவ்வாறு தொடர்ச்சியாக 21 நாட்கள் சாப்பிட சுவாசகாசம் நீங்கும்.

இலையை அரைத்து அத்துடன் சம அளவு பசு வெண்ணெய், பின்பு 10 கிராம் பொடித்த அரிசித் திப்பிலி, ஓமம், கடுக்காய்த் தோல் சேர்த்துக் கலக்கி சூடு செய்து பிழிந்து கிடைக்கும் நெய்யைத் தேக்கரண்டியளவு தொடர்ந்து 40 நாட்கள் உள்ளுக்குச் சாப்பிட ஷயரோகம் குணமாகும்.

தூதுவளைப் பூவை நெய்யில வதக்கி தயிருடன் சாப்பிட விந்து கட்டும், அறிவு விருத்தியாகும். தூதுவளை இலையைத் துவையல் செய்து சாப்பிட மாந்தம், தாது நஷ்டம், இளைப்பு இவைகள் போகும். பருப்புடன் சேர்த்து இதைக் குழம்பு வைத்துச் சாப்பிட மகோதரம் (பெருவயிற்றுநோய்), கர்ண சூலை இவை குணமாகும். தூதுவளை இலைச் சாற்றை காதில் பிழிய காதடைப்பு, காதெழுச்சி முதலிய நோய்கள் குணமாகும்.

தூதுவளை காயின் வற்றலைக் குழம்பு செய்து சாப்பிட கப ரோகம், பித்த வாதம், வாயு மலபந்தம் இவைகளைக் கண்டிக்கும். தூதுவளையின் பழம் மார்ச்சளி, மார்பு வலி, பாம்பு விஷம், சயம் இவைகளைப் போக்கும்.

தூதுவளையை அடிக்கடி பயன்படுத்தினால் புற்று நோய் வராமல் தடுக்கலாம். தொண்டைப் புற்று, கருப்பை புற்று, வாய்ப்புற்று ஆகிய வற்றிற்கு தூதுவளை மருந்து மிக்க நல்ல பலன் கொடுத்துள்ளது. ஆய்வு மூலம் தொண்டைப்புற்று, வாய்ப்புற்றுக்கு நல்ல மருந்தென நிரூபிக்கப்பட்டுள்ளது.

புகைப்பழக்கம், மதுப்பழக்கம் போன்ற பின் விளைவுகளான புற்றுநோய் எனக் கண்டறியப்பட்டால் ஆரம்ப நிலையிலே தூதுவளை இலையைப் பயன்படுத்தி, பூரண சுகாதாரத்தைச் சில மாதங்களிலே மீண்டும் பெற்று விடலாம்.

சித்த வைத்திய முறையில் தயாரிக்கப்படும் தூதுவளை நெய் பல நோய்களுக்கு நிவாரணமளிக்கிறது. தூதுவளை நெய்யை 1 முதல் இரண்டு தேக்கரண்டியளவு சாப்பிட்டால், எலும்புருக்கி நோய்கள், ஈளை இருமல், கபநோய்கள், மேக நோய்கள், வெப்பு நோய்கள், இரைப்பு, இளைப்பு இருமல் நோய்கள், வாய்வு, குண்டல வாயு முதலியன தீரும்.

தூதுவளையை மிக எளிய முறை உபயோகத்திலேயே பல நன்மைகளை அடைய முடியும்.

இதே போல தூது விளங்காயையும் சமைத்துச் சாப்பிட்டால், கப ரோகம் தீரும். பித்தவாயு இவைகள் நிவர்த்தியாகும்.
முடக்கத்தான் கீரையின் பயன்கள்:-
 

முடக்கத்தான் வேலிகளில் காட்டுச் செடியாக வளர்ந்து கிடக்கும் ஒரு வகைக் கீரை. இதன் இலை துவர்ப்புச் சுவையுடையது.

முடக்கத்தான் கீரையை எண்ணெயில் வதக்கி மிளகாயும், உப்பும் சேர்த்துத் துவையல் அரைத்துத் தொடு கூட்ட¡கப் பயன்படுத்தினால் சுவையாக இருக்கும்.

இந்தக் கீரையைச் சன்னமாக நறுக்கி வெங்காயம் அதிகமாகச் சேர்த்துப் பொரியல் செய்தும் சாப்பிடலாம். கொடியை மிளகு, சீரகத்துடன் சேர்த்து ரசம் வைக்கலாம்.

துவரம் பருப்பு, பாசிப்பருப்பு மற்றும் வேறு பருப்புகளுடன் இந்தக் கீரையைச் சேர்த்துக் கூட்டும் செய்யலாம். அதோடு, அடை செய்வதற்கும், தோசை மாவை புளிக்க வைப்பதற்கும் இந்தக் கீரையை அரைத்துச் சேர்த்துக்கொள்ளலாம்.

முடக்கத்தான் கீரையில் வைட்டமின்களும், தாது உப்புகளும் குறிப்பிடத்தக்க அளவில் உள்ளன. முடக்கத்தான் கீரையைத் தொடர்ந்து உணவில் சேர்த்துக்கொள்வதன் மூலம் மலச்சிக்கல், மூல நோய், கரப்பான், கிரந்தி, பாதவாதம் போன்ற நோய்கள் குணமாகின்றன.

இந்தக் கீரையை விளக்கெண்ணெயில் வதக்கி உண்டால் மூட்டுவலி, கைகால் வலி, முதுகு வலி, உடல் வலி ஆகிய அனைத்து வலிகளும் அகலும். முடக்கத்தான் கீரையுடன் வெல்லம் சேர்த்து நெய்யில் வதக்கி உட்கொண்ட¡ல் கண் சம்பந்தப்பட்ட நோய்கள் குணமாகும்.

இந்தக் கீரையின் சாற்றைக் காதில் விட்டால் காது வலி நிற்கும். கட்டிகளில் வைத்து கட்டினால் அவை உடைந்து புண் ஆறும்.

வாய்வுத் தொல்லையுடையவர்கள் முடக்கத்தான் கீரையை சாப்பிட்டால் நல்ல பலன் கிடைக்கும். மாதவிடாய் நிற்கும் நிலையில் உள்ள பெண்களுக்கு இந்தக் கீரை நல்லது. பெண்களின் மாதவிடாய் தொடர்பான பிரச்னைகளுக்கு இந்தக் கீரையின் சாறு ஒரு மேஜைக்கரண்டி போதும். இந்தக் கீரையை அரைத்து கர்ப்பிணிப் பெண்களின் அடிவயிற்றில் கட்டினால் சுகப்பிரசவமாகும்.
கொத்தமல்லிக் கீரை பயன்கள்:-
 

கொத்தமல்லிக் கீரை வீட்டுத் தோட்டங்களிலும் மட்டுமின்றி சிறு தொட்டிகளில் கூட வளர்க்கலாம். வழக்கமாக ரசம், சாம்பார் போன்றவற்றில் மணத்திற்காக இக்கீரையைப் பயன்படுத்துவார்கள்.

கொத்தமல்லிக் கீரை உப்புச் சுவையுடையது. உஷ்ணமும் குளிர்ச்சியும் கலந்த தன்மை உடையது.

கொத்தமல்லிக் கீரையை உணவில் சேர்த்துக் கொள்வதால் காய்ச்சல் குணமாகும். வாதம், பித்தம் நீங்கும். உடல் பலம் பெறும். தாது விருத்திக்கும் நல்லது.

இக்கீரை பசியைத் தூண்டும் சக்தி படைத்தது.

இக்கீரையின் சாறு பிழிந்து பித்தத் தழும்புகள் மீது பூசினால் விரைவில் குணம் கிடைக்கும்.

இக்கீரையை எண்ணெயில் சிறிது வதக்கி, கட்டிகள், வீக்கங்களின் மீது வைத்துக் கட்டினால் குணம் கிட்டும்.

கொத்தமல்லிக் கீரையைத் துவையல் செய்து சாப்பிடலாம். தினமும் இக்கீரையை உணவில் சேர்த்து வந்தால் சிறுநீர் எளிதாய் பிரியும்.

பற்களுக்கு உறுதியை அளிக்கும். பல் சம்பந்தமான எல்லா நோய்களும் இக்கீரையை உண்டுவரக் குணமாகும்.

முதுமைப் பருவத்தில் ஏற்படும் தோல் சுருக்கத்தைப் போக்கி தேகத்திற்கு அழகையும் மினுமினுப்பையும் தரும்.

தினை அரிசியின் பயன்கள்:௦-


சிறு தானிய வகைகளில் ஒன்றுதான் தினை என்றும் அழைக்கப்படுகிறது. தொன்றுதொட்டு, மக்களால் அதிகளவில் விரும்பி, வரவேற்கப்பட்ட பலவகையான மூலிகைகள் நாட்கள் செல்லச் செல்ல தெய்வீக முக்கியத்துவம் பெற்றதாக வரலாறு கூறுகின்றது.தமிழகத்தின் பல கோயில்களில் பலவகையான மரங்கள் தரவிருட்சமாக வணங்கப்படுகிறது.

உண்மையில், இவை அனைத்தும் மருத்துவ குணங்கள் நிறைந்த ஒரு அரிய பொக்கிஷமாகும். மூலிகை மரங்களின் மருத்துவ குணங்களை அறிந்த அந்தக் காலத்திய மக்கள், அதன் பயன்களை பாமர மக்களும் அறிந்துகொள்ளும் பொருட்டு, அவற்றைப் புனிதமாக வணங்கப்படும் கோயில்களில் வளர்க்கத் தொடங்கினர்.

இதனால் அம்மரங்கள் தெய்வீக முக்கியத்துவத்துடன் போற்றி வளர்க்கப்பட்டது. நாளடைவில், இவை தெய்வீக மரங்களாக உருப்பெற்று, மக்கள் மத்தியில் ஆன்மீக அந்தஸ்துடன் போற்றப்படத் தொடங்கியது.பழங்காலத்தில் இருந்து உருவான இந்த தெய்வீக மரங்கள் பல கோயில்களில் சில முக்கியத்துவத்தின் தொடர்ச்சியாக, மரங்களை தலவிருட்சமாகக் கருதி மக்கள் வணங்குகின்றனர்.

இதன் மூலம் கொடிய நோய்களுக்கு நிவாரணம் கிடைப்பதாகவும் மக்கள் நம்புகின்றனர்.சின்னஞ்சிறு செடி கொடிகளை முதல் பெரிய பெரிய மரங்கள் வரை மருத்துவ குணங்கள் நிறைந்தவை. புனித மரங்களாக போற்றப்பட்டது. தானிய வகைகளில் தினையும் இவ்வாறு புனிதத்துவம் பெற்றது.

தினையின் வேறு பெயர்களாக இறடி, ஏனல், கங்கு என அழைக்கப்படுகிறது.

இது இந்தியாவில் பயிராகும் ஒருவகை உணவுப் பொருள் ஆகும். இனிப்புச் சுவை கொண்டது.

உடலை வலுவாக்கும், சிறுநீர்ப்பெருக்கும் தன்மைகள் உண்டு. இது மிகச்சூடு உள்ளது. வாயு நோயையும், கபத்தையும் போக்கும்.

ஆயினும் தீக்குற்றத்தைப் பெருக்கும். பசியை உண்டாக்கும் குணம் கொண்டது.

தினைமா - கஞ்சி - சாதம்

* தினையரிசி - உடலுக்கு வன்மையைக் கொடுக்கும். சாதம் - வலிமையைப் பெருக்கும், வாயுவைப் போக்கும், கஞ்சி - வீக்கங்களை ஒழிக்கும்.

* இதன் அரிசியைச் சிலர் சமைத்து உணவாகக் கொள்வர். இது வெப்பத்தை உண்டு பண்ணும். எனினும், உடலைக் காக்கும் தன்மையுடையது.

* இதன் கூழைப் பிள்ளை பெற்றவர்களுக்குக் கொடுக்கும் வழக்கம் நம் நாட்டில் இன்றும் உள்ளது.பண்டைக்காலத்திலிருந்தே தினை உணவு தானியமாக பயிரிடப்பட்டு வருகின்றது. இது ஐரோப்பாக் கண்டத்தில் கற்காலத்தில் அறிமுகமானாலும், கிழக்காசிய நாடுகளில் முக்கியமான சீனாவில் இருந்துதான் மற்ற இடங்களுக்குப் பரவியுள்ளது.

கி.மு. 2700களிலேயே சீனாவிலும் பின்னர் சுவிட்சர்லாந்து போன்ற நாடுகளுக்கும் பரவியதாகவும், பின்னர் இந்தியா, ஜப்பான், தென் அமெரிக்கா, வட அமெரிக்கா போன்ற இடங்களில் பயிரிடப்படுகின்றன.இந்தியாவில் மட்டும் ஆந்திரா, குஜராத், தமிழ்நாடு, மகாராஷ்டிரா மற்றும் மைசூர் போன்ற இடங்களில் தினை உணவு தானியமாக பயிரிடப்படுகிறது.

அமெரிக்கா, மத்திய ஐரோப்பாவில் தீவனப் பயிராகவும், வளர்க்கின்றனர். இது வறட்சியைத தாங்கும் பயிர். இதனை ஆண்டு முழுவதும் பயிரிடலாம் என்பது கூடுதல் தகவலாகும்.

சத்துக்கள்

ஈரப்பதம் - 11.2%
புரதம் - 12.3%
கொழுப்புச்சத்து - 4.3%
கனிமச்சத்து - 3.3%
நார்ச்சத்து - 8.0%
மாவுச்சத்து - 60.9%
எனவும் உமி 20% வரையிலுமாக உள்ளது என புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

புரதம்

தினையின் புரதம் கோதுமையின் புரதத்தின் அளவை ஒத்து இருந்தாலும் தரம் கோதுமையின் புரதத்தைவிடக் குறைவாகும்.

இருப்பினும் பயறு வகைகளைக் கலந்து உணவாக உட்கொள்ளும் பொழுது இந்தக் குறைபாடு நிவர்த்தியாகி விடுகின்றது.

இதனைத் தரம்பிரித்துப் பார்க்கும்போது அல்புமின் மற்றும் குளோபுலின் 13%, புரோலமின் 48%, குளுடலின் 37.0% உள்ளன. இதன் செரிப்புத் திறன் 77.0% ஆக உள்ளது.

மாவுச் சத்து

மாவுச்சத்து - 60%
ஸ்டார்ச்சு - 55%

சர்க்கரைசத்து - 2% வரை உள்ளன. ஸ்டார்ச்சின் குருனைகள் பல அமைப்புகளில் உள்ளன. சில வட்டமாகவும், சில முக்கோணமாகவும், சில எண்கோணத்திலும் உள்ளன.

கொழுப்புச் சத்து

தினையில் கொழுப்புச்சத்து 4.3 விழுக்காடு உள்ளது. இதிலிருந்து எடுக்கப்படும் எண்ணெய் மஞ்சளாகவும், ஒளி ஊடுருவக் கூடியதாகவும் உள்ளது.

உமியிலிருந்து எடுக்கப்பட்ட எண்ணெயில் பால் மிவுக், ஸ்டீரிக் என்ற நிறைவு பெற்ற கொழுப்பு அமிலங்கள் 10 சதம் வரையிலும் லினோலியரிக் அமிலம் 80% வரையிலும் ஒலியிக் அமிலம் 9% வரையிலும் உள்ளது.

கனிமச் சத்துக்கள்

இரும்புசத்தின் அளவு மற்ற தானியங்களைவிட குறிப்பாக அரிசியை,கோதுமை,ராகியைவிட இரண்டு மடங்கு அதிகமாக உள்ளது.கால்சியத்தின் அளவும் மற்ற தானியங்களை விட கொஞ்சம் அதிகமாக உள்ளது.

உயிர் சத்துக்கள்

தினை உயிர்ச்சத்துக்கள் அதிகம் கொண்ட தானியமாகும்.

தினையின் பயன்கள்

உமி நீக்கிய தினை உணவாகிறது. இதனை களியாகவும், கஞ்சியாகவும் செய்து சாப்பிடுகின்றனர். மாவாக அரைத்து சூடான பால் சேர்த்து, உடல் தளர்ச்சியடைந்தவர்களுக்குக் கொடுக்கின்றார்கள்.

பலநூறு ஆண்டுகளுக்கு முன்பாகவே இதனை முறுக்கு செய்யவும், தேனுடன் கலந்து சாப்பிட்டு வந்துள்ளனர். முளைக்க வைத்த தினையைப் பொரித்து சாப்பிடலாம்.

மேலும் இதனைக் கோழிகளுக்கும், கூண்டில் வளர்க்கும் பறவைகளுக்கும் கூடத் தீனியாக்கியுள்ளனர்.

தினையின் தாள்

* இதனைக் கால்நடைகளுக்குத் தீவனமாக்குகின்றனர். பூவிடும் பருவத்திலிருந்தும், தானியம் முற்றாமல் இளம் பருவத்தில் இருக்கும் வரை சத்துக்கள் அதிகம் கொண்டிருக்கும்.

* மேலும் இதனை வீடுகளுக்குக் கூரை வேயவும், படுக்கை தயார் செய்யவும் பயன்படுத்துகின்றனர். தானியம் நீக்கிய கதிர், எரி பொருளாகவும், மெத்தை, தலையணை போன்றவை தயாரிக்கவும் பயன்படுகின்றது.
சாமை அரிசியின் பயன்கள்:௦-
 

மருந்து செலவுக்காகவே சம்பாதியத்தில் ஒரு கனிசமான பகுதியை ஒதுக்கிடும் மக்களின் மத்தியில்,மருத்துவ செலவை குறைக்கலாம் என்றால் கசக்கவ போகிறது."நோய் நாடி நோய் முதல் நாடி" என்கிறது வள்ளுவம். வள்ளுவம் மட்டும்மில்லிங்க அனைத்து பாரம்பரிய வைத்திய முறைகளும் நோயினை வேரோடு பிடுங்கவே முயற்சிக்கின்றன.

நோய் என்பது என்ன? நம் உடல் பல நூறு கோடி செல்களால் ஆனது, பல உறுப்புகளைக் கெ¡ண்டது. உள்ளுறுப்புகளில் சிறு தோய்வு ஏற்பட்டால் அதை, நமக்கு உணர்த்தும் விதம் உபாதைகள் வருகிறது. அதற்க்கு பெயர்தான் நோய், அப்போ! உள்ளுறுப்புத் திறன்பட வேலை செய்ய வேண்டும், அதற்கு நூண்ணுட்டங்கள் அவசியம்.இதை எங்கிருந்து பெறுவது!

இதற்க்காக எங்கேயும் தேடித் திரிய வேண்டியதில்லை,நம் சமையலறையே போதும், ஆனால் எவ்வகை உணவு என்பதில் சிறிய கவனம் தேவை. அந்த வரிசையில் சிறுதானியங்கள் முக்கிய பங்கு வகிக்கிறது.புஞ்சைத் தாவரங்களில் (சிறுதானியங்கள்) சிறப்பிற்குரிய தானியமாக கருதப்படுவது சாமை.

சர்க்கரை நோயளிகள் அதிகம் உள்ள நாடாக இந்தியா கருதப்படுகிறது. சர்க்கரை நோயை கட்டுப்பாட்டில் கொண்டுவர முக்கிய பங்குவகிப்பது நார்சத்து. நெல்லரிசியைக் காட்டிலும் ஏழு மடங்கு நார்சத்து கொண்ட தானியம் சாமை.இதனை உணவாக உட்கொள்ளும் போது நீரழிவு நோயினை கட்டுப்படுத்தவும், வராமலும் தடுத்திட ஒரு சிறந்த வாய்ப்பாக அமையும்.

சாமையில் இரும்பு சத்து அளவிட்டால் மற்ற சிறு தானியங்களைக் காட்டிலும் அதிகம். இது இரத்தசோகை வருவதற்கான வாய்பினைக் குறைக்கிறது. இளம் பெண்களின் முக்கிய உணவாக சாமை அமைவது அவசியமான ஒன்று.

பொதுவாக முதியவர்களுக்கும், நோய்வாய்பட்டவர்களுக்கும் மலச்சிக்கல் ஒரு பெரும் பிரச்சனையாக உள்ளது. உடம்பிலிருந்து கழிவுகள் சரிவர வெளியேரவில்லை என்றாலே அது மற்ற நோய்களுக்கு மூல காரணியாக அமைந்து விடும். சாமை சோறு, சாமை பொங்கல், சாமை இட்லி, சாமை தோசை, சாமை உப்புமா, சாமை இடியாப்பம், சாமை புட்டு இவ்வாறு சாமை அரிசியில் செய்த பதார்த்தங்களை பசித்த பின்னர் உட்கொள்ளும் போது நோய்களுக்கெள்ளாம் மூலமாக கருதப்படும் மலச்சிக்கலிருந்து விடுபட முடியும். இதுமட்டுமல்லாமல் வயிற்றுக் கோளறுக்கு சாமை அரிசி நல்லதொரு மருந்தாகவும் திகழ்கிறது. தாது பொருட்களை உடலில் அதிகரித்து உயிரணுக்களின் எண்ணிக்கையை உயர்த்துவதில் சாமையின் பங்கு குறிப்பிடத்தக்கது.

இக்காலத்தில், அதிக அளவு தேவையில்லாத கொழுப்பையும்,சர்க்கரை பொருட்களையும் தரும் பீட்சா, பர்கர் மற்றும் மைதா பெ¡ருட்களை உண்பதைத் தவிர்த்து இம்மாதிரியான பாரம்பரிய தானியங்ளில் செய்த உணவினை உட்கெ¡ள்ளும் போது உடல் உரிதியாகவும், ஆரோக்கியமாகவும் இருக்கும் என்பது நிச்சையம்.

பாசன நிலங்கள் வறண்டு கிடக்கும் இந்த காலகட்டத்தில் இம்மாதிரியான புஞ்சை தவசங்கள் நமக்கெள்ளாம் ஒரு அட்சைய பாத்திரம். இது மழையை நம்பி மட்டுமே பயிராகிறது. நீரின் தேவையும் குறைவு, நிலத்தடி நீரை உறிஞ்சி அடுத்த தலைமுறைக்கு தண்ணீர் பற்றாக்குறையை ஏற்படுத்த வேண்டிய அவசயமும் இல்லை. சுற்றுச்சூழலுக்கும் ஏற்ற பயிற்வகை-சிறு தானியம்.

இதோ ஒரு சுவையான உணவு...

சாமை கல்கண்டு பாத்!

தேவையானவை:-

சாமை அரிசி ஒரு கப்
பயத்தம் பருப்பு : அரை கப்
நெய் : இரண்டு ஸ்பூன்
கல்கண்டு : முக்கால் கப்
திராட்சை, முந்திரி : ஒரு பெரிய ஸ்பூன்
தண்ணீர் : 4 கப்


எப்படி செய்வது:

பயத்தம் பருப்பை வெறும் வாணலியில் சிவக்க வறுக்கவும்
சாமையும் பருப்பும் கழுவி குக்கரில் 6 விசில் வேகவிடவும்
கல்கண்டை மிக்ஸியில் பொடித்து வைக்கவும்
வாணலில் நெய் காயவைத்து திராட்சை முந்திரியை வறுத்து எடுத்து வைக்கவும்
சாமை சாதத்துடன் கல்கண்டு பொடியும் போட்டு நன்கு கிளறவும், முந்திரி திராட்சை சேர்க்கவும். தேவைப்படின் இன்னும் சிறிது நெய் சேர்க்கவும். சூடாக பரிமாறவும்

குறிப்பு:
தண்ணீருக்கு பதில் தண்ணீரும் பாலுமாக சேர்த்து வேக விட்டால் இன்னும் சுவை கூடும்
கம்பு தரும் நோய் எதிர்ப்பு சக்தி:-
 

இந்தியாவில் விளையும் தானிய வகைகளில் கம்பும் ஒன்று. வறட்சி தாண்டவம் ஆடும் காலங்களில் மக்களின் பசியைப் போக்கும் பொருளாக கம்பு இருந்து வந்துள்ளது. இது இந்தியா முழுவதும் பயிராகும் செடிவகையாகும். வறட்சியான பகுதிகளிலும்
விளையக்கூடிய கம்பு பற்றியும் அதன் மருத்துவக் குணத்தையும் காண்போம்.

நம் முன்னோர்கள் தங்களுடைய உணவில் அதிகளவு தானிய வகைகளை சேர்த்து வந்தனர். காலையில் கம்பை கஞ்சியாக்கி அருந்தினர். சிலர் அரிசி உபயோகப்படுத்துவது போல் வேகவைத்து வடித்து சாப்பிட்டனர். ஆனால் இடைப்பட்ட காலத்தில் இந்த தானிய வகைகளை மறந்து சத்தற்ற உணவுகளை சாப்பிட்டு வந்தனர். நாவின் சுவையை அதிகம் விரும்பியதால் நோய்களின் வாழ்விடமாக நம் உடல் மாறிவிட்டது.

இரவு நேரங்களில் துங்காமல் கண் விழிப்பவர்கள், அதிக நேரம் ஒரே இடத்திலிருந்து வேலை செய்பவர்கள், அதிக சூடுடைய பகுதிகளில் வேலை செய்பவர்கள், அதிக மன அழுத்தம் கொண்டவர்களின் உடலானது அதிக உஷ்ணமடையும். இவர்கள் கம்பை கஞ்சியாகக் காய்ச்சி காலை வேளையில் அருந்தி வந்தால் உடல் சூடு குறையும்.

* மனச் சோர்வு இருந்தால் உடல் சோர்வு உண்டாகும். அதுபோல் வெயிலில் அதிகம் அலைகிறவர்கள், கடின வேலை செய்பவர்கள் அதிகம் சோர்வடைகின்றனர்.

* இவர்கள் புத்துணர்வு பெற கம்பை கூழாக்கி, அதனுடன் மோர் கலந்து மதிய வேளையில் அருந்தி வந்தால் உடல் சோர்வு நீங்கி புத்துணர்வு அடைவர். இன்றும் சில இடங்களில் இதுபோல் கூழ் செய்து விற்பனை செய்து வருகிறார்கள்.

* அஜீரணக் கோளாறு கொண்டவர்கள் கம்பங் கஞ்சியை அருந்தி வந்தால் அஜீரணக் கோளாறுகள் நீங்கி நன்கு பசியெடுக்கும். வயிற்றில் புண்கள் உண்டானால் வாயிலும் புண்கள் ஏற்படும். மேலும் வயிற்று புண்களை குணப்படுத்தும் குணம் கம்புக்கு உண்டு.

* கம்புடன் அரிசி சேர்த்து நன்கு குழையும்படி சோறாக்கி மதிய உணவில் சேர்த்துக் கொண்டால் குடல்புண், வயிற்றுப்புண், வாய்ப்புண் குணமாகும்.

* உடல் வலுவடைய கம்பு மிகச் சிறந்த உணவாகும். அடிக்கடி கம்பங்கஞ்சி சாப்பிட்டு வந்தால் உடல் வலுவடையும்.

* கண் நரம்புகளுக்கு புத்துணர்வு கொடுத்து பார்வையை தெளிவாக்கும். இதயத்தை வலுவாக்கும். சிறுநீரைப் பெருக்கும். நரம்புகளுக்கு புத்துணர்வைக் கொடுக்கும். இரத்தத்தை சுத்தமாக்கும்.

* உடலில் தேவையற்ற நீரை வெளியேற்றும். நோய் எதிர்ப்பு சக்தியைத் தூண்டும். தாதுவை விருத்தி செய்யும். இளநரையைப் போக்கும்.

அதிகமாக கம்பங்கஞ்சி அருந்தினால் சில சமயங்களில் இருமல், இரைப்பு போன்றவற்றை உண்டாக்கும். அதனால் அளவோடு சாப்பிட்டு ஆரோக்கியமாக வாழலாம்.

கேழ்வரகு - கம்பு கூழ்: ஒரு பார்வை

தேவையானவை:

கேழ்வரகு மாவு - 1/2 கப்
கம்பு மாவு - 1/2 கப்
உப்பு - தேவைக்கு

செய்முறை:

* முதல் நாளிரவே கேழ்வரகு மாவில் தண்ணீர் விட்டு கட்டிகளில்லாமல் தோசை மாவு பதத்தைவிட கொஞ்சம் நீர்க்க கரைத்து,புளிக்க வைக்கவும். காலையில் பார்த்தால் மாவு புளித்து,பொங்கினாற்போல் இருக்க வேண்டும். இட்லி மாவை புளிக்க வைப்பதுபோல் செய்ய வேண்டும்.உப்பு போட வேண்டாம்.

* காலையில் ஒரு பாத்திரத்தில் நான்கைந்து கப்புகள் தண்ணீர் விட்டு சூடேற்றவும்.

* அது கொதி வருவதற்குள் கம்பு மாவில் தண்ணீர் விட்டு நீர்க்க கரைத்து வைக்கவும்.

* தண்ணீர் கொதி வந்ததும் கம்பு மாவை ஊற்றிக் அடியில் பிடிக்காமலும்,கட்டி விழாமலும் கிண்டிவிடவும்.

* சிறிது நேரத்தில் கம்புமாவு பொங்கி வரும்.

* அப்போது கேழ்வரகு மாவைக் கரைத்து ஊற்றி தேவையான உப்பு சேர்த்துக்கொள்ளவும். மீண்டும் கட்டிகள் வராதவாறு விடாமல் கிளர வேண்டும்.

* 5 நிமிடம் கழித்து தீயை மிதமாக்கி மூடி மேலும் ஒரு 5 நிமிடம் வைக்கவும்.

* இப்போது இரண்டு மாவும் கலந்து கொதித்தபிறகு நல்ல வாசனை வரும். கெட்டியாகவும் இருக்கும்.

* விருப்பப்படி சூடாகவோ அல்லது ஆறியபிறகோ சாப்பிடலாம்.

உயிர் வாழ உணவு தேவை என்பது சாதாரண வாக்கியம். வெறும் வாழ்தல் என்பதனைத் தவிர்த்து, ஆரோக்கியமாய் வாழ்தல் வேண்டும் என்றால் நமக்கு நிச்சயம் தேவை
“ஆரோக்கிய உணவு”.
ஆரோக்கிய உணவு என்றால் பெரும்பான்மையானவர்களுக்கு நினைவுக்கு வருவது, வீட்டில் அம்மா வற்புறுத்திக் கொடுத்து வேண்டாவெறுப்பாய் சாப்பிடும் பெயர் தெரியாத கீரைகள் போன்ற ஒரு சில உணவு பதார்த்தங்கள்தான்.
கட்டாயப்படுத்தலின் பேரில் உண்ணப்படும் ருசியற்ற உணவுகள் தான் ஆரோக்கிய உணவா? என்றால் நிச்சயம் இல்லை. பின் எவை தான் ஆரோக்கிய உணவு?
நாம் உண்ணும் அனைத்திலும் ஏதேனும் ஒன்று அல்லது பலச் சத்துக்கள் மலிந்துள்ளன. நம் உடல்நிலைக்கு ஏற்ற, நமக்கு தேவையான சத்துக்களைத் தரக்கூடிய உணவுகளை போதுமான அளவிற்கு உண்பதுதான் ஆரோக்கிய உணவு என்பதாகும்.
நாம் விரும்பி உண்ணும் உணவினையே, அதில் சேர்க்கப்படும் பொருட்களின் அளவினை கூட்டுதல் அல்லது குறைத்தல் மூலம் ஆரோக்கிய உணவாய் மாற்றிக் கொள்ள இயலும். ஆரோக்கிய உணவின் அடிப்படை அம்சங்கள் இந்த மூன்றுதான்,
1. நம் உடல்நிலைக்கு ஏற்றது.
2. தேவையான சத்துக்கள் நிறைந்தது.
3. அளவோடு உண்பது.
என்னுடைய உடல்நிலைக்கு ஏற்ற உணவு எது என்று யாரேனும் கேள்வி எழுப்பினால் அதற்கு பதில் அளிப்பது மிகவும் சிரமம். ஒவ்வொருவர் உடல்நிலையும் ஒவ்வொரு விதத்தில் இருக்கும்.
கீரைகள், காய்கறிகள், பழங்கள் போன்றவற்றை பொதுவில் எல்லா தரப்பினருக்கும் பரிந்துரைக்கலாம். ஆனால் குறிப்பாக இவைதான் உங்களுக்கு பொருத்தமான உணவு என்று சொல்லவேண்டும் என்றால் தங்களுடைய உடல்நிலை குறித்த முழுமையான விபரங்கள் தேவைப்படும்.
ஆகையால் ஒவ்வொருவரும் தங்களது உடல் குறித்த உண்மையான நிலையினை மருத்துவரின் உதவியோடு அறிந்து வைத்து இருத்தல் மிகவும் அவசியம்.
உங்களது எடை மற்றும் உயரத்தினை அவ்வப்போது சோதித்து நினைவில் வைத்துக் கொள்ளவும். இது மிகவும் முக்கியமானது.
பிறகு தங்களது எடை தங்களது உயரத்தினைப் பொறுத்து ஆரோக்கியமானதுதானா என்பதனை தெரிந்து கொள்ளவும். இதற்கு உடல் பருமன் சுட்டினை(Body Mass Index) பயன்படுத்துங்கள்.
உங்களது உடல்நிலை ஆரோக்கியமாக சாதாரண நிலையில் உள்ளதா என்பதனை மருத்துவரின் உதவியோடு அறிந்துகொள்ளவும். வெளியில் தெரியாத நோய்கள், பரம்பரை நோய்களின் தாக்கத்திற்கான வாய்ப்பு முதலிய விபரங்களையும் தெரிந்து வைத்திருத்தல் அவசியம்.
நோய்கள் ஏதேனும் இருப்பின் நோயின் தீவிரம், என்ன வகை, அதனால் தவிர்க்க வேண்டிய உணவுகள் எவை என்பது போன்ற கேள்விகளுக்கும் பதில் அறிந்துகொள்ளவும்.
உங்களது உடல் குறித்த விபரங்கள் தெரிந்து கொண்டபின் உணவு மற்றும் உணவுபொருட்கள் குறித்த சில அடிப்படை விசயங்களைத் தெரிந்து கொள்ளுதல் மிகவும் அவசியம்.
உணவுப்பொருட்களில் அடங்கியுள்ள சத்துக்கள், அவற்றின் பயன்கள் ஆகியவற்றைப் பற்றின தெளிந்த அறிவு, ஆரோக்கிய உணவினைத் தேர்வு செய்ய மிகவும் உதவியாய் இருக்கும்.
ஒருவர் எத்தனை முறை உண்ணவேண்டும், எவ்வளவு உண்ணவேண்டும் என்பது அவரது வயது, பால், எடை, உடல் உழைப்பு இவற்றைப் பொறுத்தது.
ஒருவருக்கு நாள் ஒன்றுக்கு எவ்வளவு சக்தி(கலோரி) தேவைப்படுகின்றது என்பதனைப் பொறுத்து அவரது உணவுப்பழக்கத்தினை அமைத்துக் கொள்ளலாம்.
கலோரிகள் குறித்த பக்கத்தில் இதற்கான விளக்கங்கள் உள்ளன. கலோரி கணிப்பானைக்(Calorie Calculator) கொண்டும் தங்களுக்கு தேவையான கலோரிகளின் உத்தேச அளவினைக் கணக்கிட்டுக் கொள்ளலாம்.
இத்தனை விசயங்களைத் தெரிந்து கொண்டுதான் சமைக்க வேண்டுமா? உண்ணவேண்டுமா? என்ற கேள்வியை எழுப்பினால் அவசியம் இல்லை என்றுதான் பதில் சொல்லவேண்டி வரும்.
காலம் காலமாக பழக்கத்தில் இருந்து வரும் ஒரே மாதிரியான உணவிற்கு உடலை பழக்கப்படுத்தி கொள்வதின் மூலம் ஆரோக்கியமாக வாழ இயலும். ஆனால் இன்றைய அவசர யுகத்தில் அது பெரும்பான்மையானவர்களுக்கு சாத்தியமாக இருப்பது இல்லை.
இந்த நிலையில் நாம் உண்ணும் உணவு குறித்த அறிவு நமக்கு மிகவும் அவசியம் ஆகின்றது. இதனை தெரிந்து கொள்வதினால் நாம் இழக்கப்போவது ஒன்றும் இல்லை. இதனைத் தெரிந்து கொள்ள நாம் வாழ்நாள் முழுவதையும் செலவழிக்கப் போவது இல்லை. ஆகையால் ஆரோக்கிய வாழ்விற்கு இந்த அடிப்படை விசயங்களை அத்யாவசிய அறிவாய் மாற்றிக்கொள்ளுங்கள்
- See more at: http://www.spottamil.net/Healthy-foods#sthash.hDTkEk3m.dpuf
உயிர் வாழ உணவு தேவை என்பது சாதாரண வாக்கியம். வெறும் வாழ்தல் என்பதனைத் தவிர்த்து, ஆரோக்கியமாய் வாழ்தல் வேண்டும் என்றால் நமக்கு நிச்சயம் தேவை
“ஆரோக்கிய உணவு”.
ஆரோக்கிய உணவு என்றால் பெரும்பான்மையானவர்களுக்கு நினைவுக்கு வருவது, வீட்டில் அம்மா வற்புறுத்திக் கொடுத்து வேண்டாவெறுப்பாய் சாப்பிடும் பெயர் தெரியாத கீரைகள் போன்ற ஒரு சில உணவு பதார்த்தங்கள்தான்.
கட்டாயப்படுத்தலின் பேரில் உண்ணப்படும் ருசியற்ற உணவுகள் தான் ஆரோக்கிய உணவா? என்றால் நிச்சயம் இல்லை. பின் எவை தான் ஆரோக்கிய உணவு?
நாம் உண்ணும் அனைத்திலும் ஏதேனும் ஒன்று அல்லது பலச் சத்துக்கள் மலிந்துள்ளன. நம் உடல்நிலைக்கு ஏற்ற, நமக்கு தேவையான சத்துக்களைத் தரக்கூடிய உணவுகளை போதுமான அளவிற்கு உண்பதுதான் ஆரோக்கிய உணவு என்பதாகும்.
நாம் விரும்பி உண்ணும் உணவினையே, அதில் சேர்க்கப்படும் பொருட்களின் அளவினை கூட்டுதல் அல்லது குறைத்தல் மூலம் ஆரோக்கிய உணவாய் மாற்றிக் கொள்ள இயலும். ஆரோக்கிய உணவின் அடிப்படை அம்சங்கள் இந்த மூன்றுதான்,
1. நம் உடல்நிலைக்கு ஏற்றது.
2. தேவையான சத்துக்கள் நிறைந்தது.
3. அளவோடு உண்பது.
என்னுடைய உடல்நிலைக்கு ஏற்ற உணவு எது என்று யாரேனும் கேள்வி எழுப்பினால் அதற்கு பதில் அளிப்பது மிகவும் சிரமம். ஒவ்வொருவர் உடல்நிலையும் ஒவ்வொரு விதத்தில் இருக்கும்.
கீரைகள், காய்கறிகள், பழங்கள் போன்றவற்றை பொதுவில் எல்லா தரப்பினருக்கும் பரிந்துரைக்கலாம். ஆனால் குறிப்பாக இவைதான் உங்களுக்கு பொருத்தமான உணவு என்று சொல்லவேண்டும் என்றால் தங்களுடைய உடல்நிலை குறித்த முழுமையான விபரங்கள் தேவைப்படும்.
ஆகையால் ஒவ்வொருவரும் தங்களது உடல் குறித்த உண்மையான நிலையினை மருத்துவரின் உதவியோடு அறிந்து வைத்து இருத்தல் மிகவும் அவசியம்.
உங்களது எடை மற்றும் உயரத்தினை அவ்வப்போது சோதித்து நினைவில் வைத்துக் கொள்ளவும். இது மிகவும் முக்கியமானது.
பிறகு தங்களது எடை தங்களது உயரத்தினைப் பொறுத்து ஆரோக்கியமானதுதானா என்பதனை தெரிந்து கொள்ளவும். இதற்கு உடல் பருமன் சுட்டினை(Body Mass Index) பயன்படுத்துங்கள்.
உங்களது உடல்நிலை ஆரோக்கியமாக சாதாரண நிலையில் உள்ளதா என்பதனை மருத்துவரின் உதவியோடு அறிந்துகொள்ளவும். வெளியில் தெரியாத நோய்கள், பரம்பரை நோய்களின் தாக்கத்திற்கான வாய்ப்பு முதலிய விபரங்களையும் தெரிந்து வைத்திருத்தல் அவசியம்.
நோய்கள் ஏதேனும் இருப்பின் நோயின் தீவிரம், என்ன வகை, அதனால் தவிர்க்க வேண்டிய உணவுகள் எவை என்பது போன்ற கேள்விகளுக்கும் பதில் அறிந்துகொள்ளவும்.
உங்களது உடல் குறித்த விபரங்கள் தெரிந்து கொண்டபின் உணவு மற்றும் உணவுபொருட்கள் குறித்த சில அடிப்படை விசயங்களைத் தெரிந்து கொள்ளுதல் மிகவும் அவசியம்.
உணவுப்பொருட்களில் அடங்கியுள்ள சத்துக்கள், அவற்றின் பயன்கள் ஆகியவற்றைப் பற்றின தெளிந்த அறிவு, ஆரோக்கிய உணவினைத் தேர்வு செய்ய மிகவும் உதவியாய் இருக்கும்.
ஒருவர் எத்தனை முறை உண்ணவேண்டும், எவ்வளவு உண்ணவேண்டும் என்பது அவரது வயது, பால், எடை, உடல் உழைப்பு இவற்றைப் பொறுத்தது.
ஒருவருக்கு நாள் ஒன்றுக்கு எவ்வளவு சக்தி(கலோரி) தேவைப்படுகின்றது என்பதனைப் பொறுத்து அவரது உணவுப்பழக்கத்தினை அமைத்துக் கொள்ளலாம்.
கலோரிகள் குறித்த பக்கத்தில் இதற்கான விளக்கங்கள் உள்ளன. கலோரி கணிப்பானைக்(Calorie Calculator) கொண்டும் தங்களுக்கு தேவையான கலோரிகளின் உத்தேச அளவினைக் கணக்கிட்டுக் கொள்ளலாம்.
இத்தனை விசயங்களைத் தெரிந்து கொண்டுதான் சமைக்க வேண்டுமா? உண்ணவேண்டுமா? என்ற கேள்வியை எழுப்பினால் அவசியம் இல்லை என்றுதான் பதில் சொல்லவேண்டி வரும்.
காலம் காலமாக பழக்கத்தில் இருந்து வரும் ஒரே மாதிரியான உணவிற்கு உடலை பழக்கப்படுத்தி கொள்வதின் மூலம் ஆரோக்கியமாக வாழ இயலும். ஆனால் இன்றைய அவசர யுகத்தில் அது பெரும்பான்மையானவர்களுக்கு சாத்தியமாக இருப்பது இல்லை.
இந்த நிலையில் நாம் உண்ணும் உணவு குறித்த அறிவு நமக்கு மிகவும் அவசியம் ஆகின்றது. இதனை தெரிந்து கொள்வதினால் நாம் இழக்கப்போவது ஒன்றும் இல்லை. இதனைத் தெரிந்து கொள்ள நாம் வாழ்நாள் முழுவதையும் செலவழிக்கப் போவது இல்லை. ஆகையால் ஆரோக்கிய வாழ்விற்கு இந்த அடிப்படை விசயங்களை அத்யாவசிய அறிவாய் மாற்றிக்கொள்ளுங்கள்
- See more at: http://www.spottamil.net/Healthy-foods#sthash.hDTkEk3m.dpuf
வாழ்வி
சோளத்தில் உள்ள சத்துகள்:
 

சோளம் என்பது புல்வகையைச் சேர்ந்த பல இனங்களை உள்ளடக்கிய தாவரப் பேரினம் (genus) ஆகும். இவற்றுள் சில தானியங்களுக்காகவும் வேறு சில கால்நடைத் தீவனங்களுக்காகவும் பயிரிடப்படுகின்றன. சில வகைகள் மேய்ச்சல் நிலங்களில் இயற்கையாக வளர்கின்றன. இப்பயிர் உலகம் முழுதும் மிதமான வெப்பம் கொண்ட பகுதிகளில் பயிராகின்றன. இவ்வினங்கள், எல்லாக் கண்டங்களையும் சேர்ந்த வெப்ப வலய மற்றும் குறை வெப்பவலயப் பகுதிகளையும், தென்மேற்கு பசிபிக், ஆஸ்திரேலிய பகுதிகளையும் தாயகமாகக் கொண்டவை.
இந்திய மாநிலமான தமிழகத்தில் பொங்கல் திருநாளன்று வெண்சாமரச் சோளம் பயன்படுத்தப்படும். இன்றும் இது திருச்சிமாவட்டம், பெரம்பலூர் மாவட்ட கிராமங்களில் வெகு சிலரால் பயிரடப்படுகிறது. இது நாட்டுவகைச் சோளம். பெரும்பாலோர் கலப்பின ரகச் சோளங்களையே பயிரிடுகின்றனர்.

பழுப்பு நிற சோளம் மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும் உணவாகப் பயன்படுகின்றது. இது பெரும்பாலும் தென் ஆப்ரிக்காவில் விளைவிக்கப்படுகின்றது. தற்போது இது மழை குறைவாக பொழியும் அனைத்து நாடுகளிலும் விளைவிக்கப்படுகின்றது. இது நான்கு மீட்டர் உயரம் வரை வளரும். இப்பயிர் மூன்று முதல் நான்கு மில்லி மீட்டர் வரை சுற்றளவு கொண்டிருக்கும். இதன் இலைகள் மருந்து, மற்றும் எத்தனால் தயாரிக்கப் பயன்படுகிறது.

இந்தியாவில் அரிசி மற்றும் கோதுமைக்கு அடுத்தபடியாக சோளம் முக்கியமான இடத்தை பிடித்துள்ளது. முழுமையான மற்றும் உடைத்த சோளம் வேகவைத்து அரிசி போன்றும் பயன்படுத்தப்படுகிறது. முழுச்சோளத்தை அரைத்து அம் மாவிலிருந்து சப்பாத்தி போன்றும் பயன்படுத்தப்படுகிறது. சோளமானது நொதித்தல் தொழிற்சாலை மற்றும் எரிசாராயம் மற்றும் கரைப்பான் தொழிற்சாலைகளில் மாவுச்சத்துப் பொருளாகப் பயன்படுத்தப்படுகிறது.

சோளத்தில் உள்ள ஊட்டசத்து விபரம்:

ஆற்றல்-349 கி.கலோரி
புரதம்-10.4 கிராம்
கொழுப்பு-1.9 கி
மாவுச்சத்து - 72.6 கி
கால்சியம் - 25 மி.லி
இரும்புசத்து 4.1 மி.கி,
பி-கரோட்டின் – 47 மி.கி
தயமின் - 0.37 மி.கி
ரிபோப்ளோவின் 0.13 மி.லி
நயசின் - 3.1 மி.கி.

மருத்துவ பயன்கள்:

நீரிழிவு நோய் செரிமான குறைகள், ரத்தசோகை சர்க்கரை நோய் முதலியவற்றைக் குணப்படுத்துகிறது.

சிறுநீரை அதிகமாகப் பெருக்கும் சக்தி இதற்கு இருப்பதால், உடம்பில் உள்ள உப்பைக் கரைக்கும் தன்மை உண்டு.

கண் குறைபாடுகளை சீர் செய்யும் 'பீட்டா கரோட்டின்', இதில் அதிகமாக உள்ளது.

மூல நோயாளிகளுக்கு சோள உணவு ஒத்துக்கொள்ளாது.

நவதானிய தோசை: ஒரு பார்வை

தேவையானவை: பாசிப்பயறு - கால் கப், கருப்பு உளுத்தம்பருப்பு - கால் கப், கொண்டைக்கடலை - கால் கப், பச்சரிசி - கால் கப், துவரம்பருப்பு - கால் கப், கொள்ளு - கால் கப், சோயா - கால் கப், வெள்ளை சோளம் - கால் கப், எள்ளு - ஒரு டேபிள்ஸ்பூன், பச்சை மிளகாய் - 3, காய்ந்த மிளகாய் - 6, இஞ்சி - ஒரு துண்டு, தேங்காய் துருவல் - ஒரு டேபிள்ஸ்பூன், கறிவேப்பிலை - சிறிது, பெருங்காயத்தூள் - அரை டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு, எண்ணெய் - தேவையான அளவு, பொடியாக நறுக்கிய கொத்துமல்லி - சிறிதளவு.

செய்முறை: எல்லா தானியங்களையும் ஒன்றாக போட்டு நன்றாகக் களைந்து சுமார் 5 மணி நேரம் ஊறவைக்கவும். ஊறிய பிறகு தானியங்கள், தேங்காய் துருவல், பச்சை மிளகாய், காய்ந்த மிளகாய், இஞ்சி, கறிவேப்பிலை, பெருங்காயம், உப்பு இவற்றைச் சேர்த்து நன்றாக அரைக்கவும். பொடியாக அரிந்த கொத்துமல்லியை சேர்த்து மெல்லிய தோசைகளாக வார்த்து எடுக்கவும். இஞ்சி சேர்ப்பதால் எளிதில் ஜீரணமாகும்.

Saturday 23 November 2013

பூசணிக்காய் :


பூசணிக்காய் என்ன இருக்கு:
புரதம்,
கொழுப்பு

யாருக்கு வேண்டாம்:
ஆஸ்துமா, தலைவலி, சைனஸ்
நோயாளிகள், உடல்
பருமனானவர்கள்
சாப்பிடக்கூடாது

யாருக்கு நல்லது:
குழந்தைகளுக்கு.
மூலச்சூடு நோய்
உள்ளவர்களுக்கு மிகமிக நல்லது

பலன்கள்:
நரம்புகளுக்கு வலுவூட்டும்.
வயிற்றுப் புண்களை ஆற்றும்.
உடல் எடையைக் கூட்டும்.
வெண்பூச ணியே நல்லது.,
காரட் :

காரட் என்ன இருக்கு : விட்டமின்
ஏ, கார்போஹைட்ரேட்,
தாது உப்புகள்,
மெலோனிசைட்ஸ் என்ற
நிறமி அணுக்கள்.

யாருக்கு நல்லது :
அசிடிட்டி தொந்தரவு உள்ளவர்களுக்கு குழந்தைகளுக்கு.
கர்ப்பிணிப் பெண்களுக்கு.

யாருக்கு வேண்டாம்:
குழந்தை பேறு இல்லாதவர்கள்
அதிகம் சேர்க்க வேண்டாம்.
சர்க்கரை நோயாளிகள்
சாப்பிடக்கூடாது.

பலன்கள்: கண்
பார்வைக்கு உகந்தது. உடல்
பரும னாகாமல் காக்கும். காரட்
சாறுடன்
பத்து மிளகு சேர்த்து சாப்பிட்டுவர
உடல் கழிவுகள் வெளியேறும்.

யாருக்கு நல்லது: ரத்தச்
சோகை உள்ளவர்கள் தொடர்ந்து 45
நாட்கள் பீட்ரூட் சூப் சாப்பிட்டு வர
சோகை அடியோடு விலகும். வளரும்
குழந்தைகள் அடிக்கடி சாப்பிட்டால்
கண், நகம், பல் நன்கு வளரும்.

யாருக்கு வேண்டாம்:
சர்க்கரை நோயாளிகள் சாப்பிடக்
கூடாது.

பலன்கள்: ரத்தத்தை வளப் படுத்தும்.
சுறுசுறுப்பை அளிக் கும்.
மேனி நிறம் பெறும்.


Thursday 31 October 2013

கோழி :
முட்டையிலிருந்து குஞ்சு பொரித்தல்
கோழிக்குஞ்சுகளின் உருவாக்கமே அடைகாத்துக் குஞ்சு பொரித்தல் எனப்படுகிறது. முந்தைய நாட்களில் தாய்க்கோழியின் அடையில் வைத்தே குஞ்சுகள் பொரிக்கப்பட்டன. தேசிய இனக் கோழிகள் இதற்குச் சிறந்த எடுத்துக்காட்டுகள் ஆகும். இம்முறையில் கோழிகள் இதற்குச் சிறந்த எடுத்துக்காட்டுகள் ஆகும். இம்முறை 10-12 முட்டைகள் மட்டுமே 1 கோழியினால் ஒரு சமயத்தில் அடைக்காக்க முடியும்.
எனவே பெரிய பண்ணை உற்பத்தி முறைகளுக்கும் கடினமானதாக இருக்கிறது. கோழிகளைப் போன்றே சூழ்நிலையை உருவாக்கக்கூடிய அடைகாப்பான்களில் குஞ்சுபொரிப்பதில் பயன்படுத்தப்படுகின்றன.

அடைகாத்தல்
வெப்பநிலை, ஈரப்பதம், வாயுச்சூழ்நிலை மற்றும் முட்டைகளைத் திருப்பி விடுதல் போன்ற இயற்கைக் காரணிகள் ஒரு வெற்றிகரமான குஞ்சு பொரிப்பதற்கு அவசியம். அடைக்காப்பானினுள் வெப்பநிலையானது அதைத் தயாரிப்பவர் கூறும் அளவு வைத்துக் கொள்ளலாம். பொதுவாக மிதமான வெப்பநிலையே விரும்பப்படுகிறது. இது பொதுவாக 99.5 டிகிரி செல்சியஸிலிருந்து 100.5 டிகிரி செல்சியஸ் ஃபாரன்ஹீட் (37.2 டிகிரி செ - 37.8 டிகிரி செ) வரை குறைந்த வெப்பநிலை கரு வளர்ச்சியைக் குறைக்கும். (சாதகமற்ற) அசாதாரண அதாவது அதிக வெப்பநிலை நிலவும் போது வளர்ச்சியைப் பாதித்து கோழிகளில் இறப்பு வீதத்தை அதிகப்படுத்துகிறது.

ஈரப்பதம் ஒரு முக்கியக் காரணி. உலர்ந்த அல்லது ஈரப்பதமுள்ள வெப்பநிலைமானிக் கொண்டு ஈரப்பதத்தை அளக்கலாம். முட்டைப் பொரிக்க 21 நாட்கள் ஆகும். முதல் 18 நாட்களில் ஈரப்பதம் 60 சதவிகிதமும் பின்பு 3 நாட்களுக்கு 70 சதவிகிதமும் இருந்தால் தான் முட்டைகள் குஞ்சுகள் பொரிக்கும். செலுத்தப்பட்ட அடைக்காப்பான் வெப்பநிலை அதிகரிக்கும் போது ஈரப்பதம் குறையும்.

கருமுட்டைகள் அகலமான பக்கம் மேல்நோக்கியவாறு வைத்தல் வேண்டும். கூரிய முனைப்பகுதியை மேலே இருக்குமாறு வைத்தால குஞ்சுகளின் தலைக் குறுகிய முனைப்பகுதியில் உருவாக்குவதால் பொரிக்கும் திறன் குறையும். முட்டையைத் திருப்பி விடுவது பொரிக்கும் திறனை அதிகப்படுத்தும். கைகளால் திருப்பினால் நாளொன்றுக்கு 4 முறை திருப்பவேண்டும். இப்போது நவீன அடைக்காப்பான்களில் முட்டைகள் தன்னிச்சையாகவே ஒரு நாளைக்கு 8 அல்லது அதற்கு மேற்பட்ட முறைகள் திருப்பிக் கொள்ளுமாறு வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் முட்டைத்  தட்டுகள் 90 டிகிரி கோணத்தில் திருப்பிக் கொள்ளுமாறு வடிவமைக்கப்பட்டுள்ளன. 18 நாட்களுக்குப் பின் எந்த ஒரு திருப்புதலும் தேவைப்படாது.
Incubator
அடைகாத்தல்

முட்டைப் பொரிக்கும் திறனை அதிகப்படுத்த வெவ்வேறு பொரிப்பான்களைப் பயன்படுத்தலாம். தனித்தனி பொரிப்பான்களைப் பயன்படுத்தும் போது 98 டிகிரி பாரன்ஹீட் வெப்பநிலையும், ஈரப்பதம் 70-80 சதவீதமும் பின்பற்றப்படுகிறது. இவ்வாறு தனித்தனியாகப் பயன்படுத்துவதன் மூலம் சுத்தப்படுத்துதல், கிருமி நீக்கம் மற்றும் பிற முட்டைகளைப் பாதிக்காமல் புகை போடுதல் போன்றவற்றைச் செய்வது எளிது.

அடைகாக்கப்பட்ட முட்டைகளைச் சோதித்தல்
5 அல்லது 7வது நாளிலிருந்து ஒளியில் கருவளர்நிலை காணவேண்டும். அப்போது கருவுறாத முட்டைகளையும், 18வது நாளில் சிதைந்த அல்லது இறந்த முட்டைகளையும் நீக்கிவிடலாம். ஆட்கூலியைக் குறைக்கப் பெரும்பாலும் 17 அல்லது 18ம் நாளில் தான் ஒளியில் கருவளர்நிலை காணப்படுகிறது. ஒளியை உட்செலுத்தும்போது அது முட்டையினுள் ஒளி ஊடுருவிச் செல்ல இயலாமல் இருட்டாக இருந்தால் கரு நன்றாக வளர்ந்துள்ளது என்றும் சிறிதளவு ஒளி கசியக்கூடியதாக இருந்தால் கரு இறந்து விட்டது என்றும் ஒளி எளிதில் ஊடுருவக்கூடியதாக இருந்தால் அது கருவுறாத முட்டை என்றும் அறிந்து கொள்ளலாம். கரு வளர்ந்துள்ள முட்டைகளை மட்டுமே பொரிப்பகத்திற்கு மாற்றம் செய்யவேண்டும். கோழியின் வம்வாவழியைப் பாதுகாக்க ஒரு கோழியின் முட்டைகளை ஆண் பெண் தனித்தனிப் பிரிவுகளாகப் பிரித்து அடுக்கி வைக்கவேண்டும்.
(ஆதாரம்: வேளாண் அறிவியல் நிலையம், நாமக்கல்).
குஞ்சு பொரிப்பகத்தின் பராமரிப்பு
அடைகாப்பான் மற்றும் குஞ்சு பொரிப்பகத்தை முற்றிலும் முட்டையை அதில் வைப்பதற்கு முன்னரே ஒரு முறை சோதனை செய்து ஏதேனும் குறையிருந்தால் சரிசெய்யவேண்டும். நன்கு கழுவி கிருமிநாசினி கொண்டு சுத்தப்படுத்தி வைக்கவேண்டும். இது நோய்ப் பரவலின் தன்மையைக் குறைக்கும்.
Incubator_hatchery
குஞ்சு பொரிப்பகம்
40 சதவிகிதக் கரைசலில் 40 மிலி ஃபார்மால்டிஹைடு, 20 கிராம் பொட்டாசியம் ஃபர்மாங்கனேட் கரைசல் ஒவ்வொரு 2.8 மீட்டர் 3 இடைவெளிக்கும் அடைக்காப்பான் மற்றும் பொரிப்பகத்தினுள் ஊற்றவேண்டும். பொட்டாசியம் பர்மாங்கனேட்டை கண்ணாடி அல்லது மண்பாத்திரத்திலும், ஃபார்மலினை அதன் மீதும் ஊற்றிவிடலாம். புகையூட்டுதலை முட்டை வைப்பதற்கு முன் தினம் செய்து அறையைப் பூட்டிவிடவேண்டும். இது வெப்பநிலையை சரியாக நிர்வகிக்க உதவும்.

பொரிப்பகத்தில வேலை செய்பவர்கள் உள்ளே செல்லுமுன் குளித்து உடைகள், காலணிகளை மாற்றிக்கொண்டு செல்லவேண்டும். குஞ்சுகள் விற்பனை செய்யும் போது முறையாக இரசீது வழங்கி உடனுக்குடனே அனுப்பிவிடவேண்டும். மின்சார இணைப்பு துண்டிக்கப்படும் சமயங்களில் மின்சாரம் உண்டாக்கும் சாதனம் (ஜெனரேட்டர்) பயன்படுத்தலாம்.

(ஆதாரம்: டாக்டர்.ஆச்சார்யா, Handbook of Animal Husbandary)
காடை
இனப்பெருக்கம்
காடைகள் 7 வார வயதில்  முட்டையிட ஆரம்பித்து, 8வது வாரத்தில் முட்டை உற்பத்தி 50 விழுக்காடு நிலையை அடையும். பொதுவாக காடைகள் மாலை நேரத்திலேயே முட்டைகளை இடும். கோழிக்குஞ்சுப் பொரிப்பகத்தை சரியானபடி மாற்றம் செய்தால் அதிக காடை முட்டைகளை அடை வைக்கலாம். அடைவதைத 18வது நாள் காடைக்குஞ்சுகள் வெளிவரும். 500 பெண் காடைகளைக் கொண்டு வாரத்திற்கு 1500 காடைக்குஞ்சுகளை உற்பத்தி செய்யலாம்.
Icubator_Quail
காடை முட்டைகள்


கோடைக்காலத்தில் காடை அடை முட்டைகளைக் குளிர்ந்த சூழ்நிலையில் சேமித்து வைக்கவேண்டும்.
வாத்து
முட்டை வாத்துக்களின் அடைகாப்பு
அடைக்காப்புக் காலம் 28 நாட்கள் ஆகும். 6-8 வாரத்திற்குட்பட்ட வாத்துகள் இட்ட முட்டைகளையே குஞ்சு பொரிப்பதற்குப் பயன்படுத்த வேண்டும். ஆண், பெண் வாத்துகளை இனச்சேர்க்கைக்கு விட்ட 10 நாட்களுக்குப் பின்பு முட்டைகள் சேகரிக்கத் தொடங்கலாம். அழுக்கான முட்டைகளை கழுவிப் பயன்படுத்துதல் வேண்டும். இவ்வாறு கழுவுவதற்கு 27 டிகிரி செல்சியஸ் சூடான நீரில் கிருமிநாசினி உடனே உலரவைக்க வேண்டும். இல்லையெனில் முட்டை அழுகிவிட வாய்ப்புள்ளது.
Incubator_duck
அடைகாப்பு

14-16 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் 80 சதவீகிதம் ஈரப்பதமுள்ள இடத்தில் முட்டைகளை சேகரித்து வைக்க வேண்டும். முட்டைகளை செயற்கை முறையில் பொரிக்க வைக்க செலுத்தப்பட்ட அடைகாப்பானைப் பயன்படுத்தலாம். எனினும் வாத்துமுட்டைகளுக்கு ஈரப்பதம் அதிகம் தேவைப்படுகிறது. எனவே இயஞ்சூடான நீரை இரண்டாம் நாளிலிருந்து அடைக்காப்பின் 23ம் நாள் வரை தெளிக்க வேண்டும். முட்டைகளை 24ம் நாள் வரை நாளொன்றுக்கு 4 முறையாவது திருப்பிவிடுதல் வேண்டும். 24ம் நாள் முட்டைகள் அடைகாப்பகத்தில் இருந்து பொரிப்பகத்திற்கு மாற்றப்படுகிறது.
Incubator_duck_emarging
குஞ்சுபொரித்தல்


37.5 முதல் 37.2 டிகிரி செல்சியஸ் அளவு வெப்ப நிலை இருக்க வேண்டும் (99.5-99டிகிரி ஃபாரன்ஹீட்டில்) அடைக்காப்பின் முதல் 25 நாட்களுக்கு 30-31டிகிரி செல்சியஸ் வெப்பநிலையும் பொரிப்பகத்தில் கடைசி 3 நாட்களுக்கு 32.7-33.8 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையும் பராமரிக்கப்பட வேண்டும். முட்டைகளின் மீது கிருமிநாசினி கலந்த இளஞ்சூடான நீரை அரை மணி நேரம் நாளொன்றிற்கு என 25 நாட்களுக்குத் தெளிக்கலாம். 7ம் நாளில் ஒளியில் கருவளர் நிலை காணலாம்.
வெப்பமளித்தல்  (0-4 வாரங்கள்)
காக்கி கேம்பெல் குஞ்சுகளுக்கு வெப்ப மூட்டும் காலம் 3-4 வாரங்கள். இறைச்சிவகை வாத்துக்குஞ்சுகலான பெக்கின் போன்ற இனங்களுக்கு 2-3 வாரங்கள் போதுமானது. அடைப்பானுக்குள் இடவசதி 90-100 ச.செ.மீ அளவு ஒவ்வொரு குஞ்சிற்கும் அளிக்கப்படவேண்டும். 29-32 டிகிரி செல்சியஸ் அளவு வெப்பநிலை முதல் வாரத்தில் அளித்தல் அவசியம். பின்பு இது வாரத்திற்கு 3 டிகிரி செல்சிஸ் என்று 24 டிகிரி செல்சியஸ் அளவு குறைக்கப்படுகிறது (4வது வாரத்தில்).

Incubator_duck_brooding
வெப்பமளித்தல்
வாத்துக் குஞ்சுகளை கம்பி வலை அமைப்பிலோ, குளத்தின் மீதோ அல்லது பேட்டரிகளின் மீதோ வளர்க்கலாம். கம்பிவலையாக இருப்பின் 0.046 மீ2 அளவும் 3 வார வயது வரை ஒவ்வொரு குஞ்சிற்கும் அளிக்கப்படுதல் வேண்டும். 5 -7.5 செமீ (2-3 அங்குளம்) ஆழமுள்ள நீர்த்தொட்டிகள் வாத்துக் குஞ்சுகளுக்குப் போதுமானது. ஏனெனில் அதிக ஆழத்தில் குஞ்சுகள் உள்ளே விழுந்துவிட வாய்ப்புண்டு.

நோய்ப் பராமரிப்பு

வைரஸால் பரவும் நோய்கள்

ராணிக்கட்
/ வெள்ளைக்கழிச்சல் நோய்:



முறையான தடுப்பூசி மற்றும் பண்ணையை சுத்தமாகப் பராமரித்தல் மூலம் நோய் வராமல்  தடுக்கலாம். பிற மனிதர்கள் உள்ளே வராமல் தடுத்தால் ஆழ்கூள முறையில் இந்நோயைக் கட்டுப்படுத்தலாம். மேலும் இறந்த கோழிகளின் உடலை உடனே அப்புறப்படுத்தி புதைத்து விடுதல் நன்று. அப்போது  தான் அவற்றை உண்ண வரும் காக்கைகள், கழுகு போன்றவற்றிலிருந்து பண்ணையைப் பாதுகாக்க முடியும். இருவகைத் தடுப்பூசிகள் இந்தியாவில் பின்பற்றப்படுகின்றன. ஒன்று குஞ்சுகளிலும் மற்றொன்று வயதான கோழிகளிலும் போடப்படுகிறது. இத்தடுப்பூசி இந்தியக் கால்நடை ஆராய்ச்சி நிலையத்தில் தயாரிக்கப்பட்டது. 6 வார வயதான குஞ்சுகளுக்குப் போடப்படும் தடுப்பூசியானது 1லிருந்து 3 வருடங்கள் வரை நோய் எதிர்ப்புச் சக்தி கொடுக்கும். அதிகமான குடற்புழுக்கள் மற்றும் இரத்தக் கழிச்சல் நோயால் பாதிக்கப்பட்ட கோழிகளுக்கு தடுப்பு மருந்துகள் பயனளிக்கிறது. முக்தேஸ்வர் என்ற தடுப்பு மருந்து அதிகம் கொடுத்தல் கூடாது. அம்மருந்து உறுப்புக்களைப் பாதித்து சில சமயங்களில் பறவைகளில் பக்கவாதத்தினை ஏற்படுத்துகிறது. இரத்தக் கழிச்சல், சரியான ஊட்டச்சத்தற்ற, குடற்புழு, பாதிப்புக் கொண்ட கோழிகள் எளிதில் இந்நோய்க்கு உட்படுகிறது.
வயது
நோய்
தடுப்பு மருந்து
செலுத்தும் வழி
முதல் நாள்
மாரெக்ஸ்
ஹச்.வீ.டி மருந்து
தோலின் கீழ்
5-7 நாட்கள்
ராணிக்கெட், எப் தடுப்பூசி / லசோட்டா எப்
லசோட்டா எப்
கண்ணில் (சொட்டு மருந்து)
10-14 நாட்கள்
ஐபிடி
உயிருள்ள இன்டர் மீடியம் ஐபிடி
குடிதண்ணீர் மூலம்
24-28 நாட்கள்
ஐபிடி
உயிருள்ள இன்டர் மீடியம் ஐபிடி தடுப்பூசி
குடிதண்ணீர் மூலம்
8வது வாரம்
இராணிக்கெட் நோய்
இராணிக்கெட் ஆர்டிவிகே / ஆர் டுபி தடுப்பூசி
இறக்கையில் தோலின் கீழ்
15-18 நாட்களில்
இராணிக்கெட் நோய்
உயிருள்ள இராணிக்கெட் ஆர்டிவிகே / ஆர்டுபி தடுப்பூசி / உயிரற்ற இராணிக்கெட் தடுப்பூசி
இறக்கையில் தோலின் கீழ்
(ஆதாரம்: www.vuatkerala.org)

குடற்புழு நீக்கம் செய்தல்
ஆர்டுபி / ஆர்டிவிகே தடுப்பு மருந்து கொடுப்பதற்கு ஒரு வாரம் முன்பிருந்தே குடற்புழு நீக்க மருந்து அளிக்கவேண்டும். பின்பு 3 வார இடைவெளியில் 18வது வாரத்தில் 4 முறை குடற்புழு நீக்க மருந்து கொடுக்கப்பட்டிருக்கவேண்டும். உருளைப் புழுக்களுக்கு எதிராக பைப்பரசின் பொருட்கள், ஆல்பென்ஸோல், மெபென்ட்சோல் போன்றவற்றைப் பயன்படுத்தலாம். அதே போல் நிக்ளோசமைடு, பிராசிகுவின்டால், ஆல்பென்டசோல் போன்றவை நாடாப்புழுக்களுக்கு எதிராகவும் பயன்படுத்தப்படுகின்றன.
குடற்புழு மருந்தை குடிநீர் வழியே கொடுக்கும் போது குறிப்பிட்ட அளவு மருந்தை குஞ்சுகள் 4 மணி நேரத்தில் குடிக்கும் நீர் அளவில் கலந்து கொடுக்கலாம். அதாவது 6 வார வயதுள்ள 100 குஞ்சுகளுக்கு ஒரு நாளைக்கு 6 லிட்டர் நீரில் கலந்து வைக்கலாம். மருந்து கலந்த நீரை முற்றிலுமாகக் கோழிகள் அருந்திய பிறகே மீண்டும் நீர் வைக்கவேண்டும்.

வெளிப்புற ஒட்டுண்ணிகள்
ஏதேனும் வெளிப்புற ஒட்டுண்ணிகள் இருப்பது கண்டறியப்பட்டால் உடனே, கொட்டகையை புகையூட்டம் செய்து, கோழிகளுக்கு மருந்து தூவுதல் வேண்டும்.


நோய்ப் பராமரிப்பு

வைரஸால் பரவும் நோய்கள்

ராணிக்கட்
/ வெள்ளைக்கழிச்சல் நோய்:

முறையான தடுப்பூசி மற்றும் பண்ணையை சுத்தமாகப் பராமரித்தல் மூலம் நோய் வராமல்  தடுக்கலாம். பிற மனிதர்கள் உள்ளே வராமல் தடுத்தால் ஆழ்கூள முறையில் இந்நோயைக் கட்டுப்படுத்தலாம். மேலும் இறந்த கோழிகளின் உடலை உடனே அப்புறப்படுத்தி புதைத்து விடுதல் நன்று. அப்போது  தான் அவற்றை உண்ண வரும் காக்கைகள், கழுகு போன்றவற்றிலிருந்து பண்ணையைப் பாதுகாக்க முடியும். இருவகைத் தடுப்பூசிகள் இந்தியாவில் பின்பற்றப்படுகின்றன. ஒன்று குஞ்சுகளிலும் மற்றொன்று வயதான கோழிகளிலும் போடப்படுகிறது. இத்தடுப்பூசி இந்தியக் கால்நடை ஆராய்ச்சி நிலையத்தில் தயாரிக்கப்பட்டது. 6 வார வயதான குஞ்சுகளுக்குப் போடப்படும் தடுப்பூசியானது 1லிருந்து 3 வருடங்கள் வரை நோய் எதிர்ப்புச் சக்தி கொடுக்கும். அதிகமான குடற்புழுக்கள் மற்றும் இரத்தக் கழிச்சல் நோயால் பாதிக்கப்பட்ட கோழிகளுக்கு தடுப்பு மருந்துகள் பயனளிக்கிறது. முக்தேஸ்வர் என்ற தடுப்பு மருந்து அதிகம் கொடுத்தல் கூடாது. அம்மருந்து உறுப்புக்களைப் பாதித்து சில சமயங்களில் பறவைகளில் பக்கவாதத்தினை ஏற்படுத்துகிறது. இரத்தக் கழிச்சல், சரியான ஊட்டச்சத்தற்ற, குடற்புழு, பாதிப்புக் கொண்ட கோழிகள் எளிதில் இந்நோய்க்கு உட்படுகிறது.
வயது
நோய்
தடுப்பு மருந்து
செலுத்தும் வழி
முதல் நாள்
மாரெக்ஸ்
ஹச்.வீ.டி மருந்து
தோலின் கீழ்
5-7 நாட்கள்
ராணிக்கெட், எப் தடுப்பூசி / லசோட்டா எப்
லசோட்டா எப்
கண்ணில் (சொட்டு மருந்து)
10-14 நாட்கள்
ஐபிடி
உயிருள்ள இன்டர் மீடியம் ஐபிடி
குடிதண்ணீர் மூலம்
24-28 நாட்கள்
ஐபிடி
உயிருள்ள இன்டர் மீடியம் ஐபிடி தடுப்பூசி
குடிதண்ணீர் மூலம்
8வது வாரம்
இராணிக்கெட் நோய்
இராணிக்கெட் ஆர்டிவிகே / ஆர் டுபி தடுப்பூசி
இறக்கையில் தோலின் கீழ்
15-18 நாட்களில்
இராணிக்கெட் நோய்
உயிருள்ள இராணிக்கெட் ஆர்டிவிகே / ஆர்டுபி தடுப்பூசி / உயிரற்ற இராணிக்கெட் தடுப்பூசி
இறக்கையில் தோலின் கீழ்
(ஆதாரம்: www.vuatkerala.org)

குடற்புழு நீக்கம் செய்தல்
ஆர்டுபி / ஆர்டிவிகே தடுப்பு மருந்து கொடுப்பதற்கு ஒரு வாரம் முன்பிருந்தே குடற்புழு நீக்க மருந்து அளிக்கவேண்டும். பின்பு 3 வார இடைவெளியில் 18வது வாரத்தில் 4 முறை குடற்புழு நீக்க மருந்து கொடுக்கப்பட்டிருக்கவேண்டும். உருளைப் புழுக்களுக்கு எதிராக பைப்பரசின் பொருட்கள், ஆல்பென்ஸோல், மெபென்ட்சோல் போன்றவற்றைப் பயன்படுத்தலாம். அதே போல் நிக்ளோசமைடு, பிராசிகுவின்டால், ஆல்பென்டசோல் போன்றவை நாடாப்புழுக்களுக்கு எதிராகவும் பயன்படுத்தப்படுகின்றன.
குடற்புழு மருந்தை குடிநீர் வழியே கொடுக்கும் போது குறிப்பிட்ட அளவு மருந்தை குஞ்சுகள் 4 மணி நேரத்தில் குடிக்கும் நீர் அளவில் கலந்து கொடுக்கலாம். அதாவது 6 வார வயதுள்ள 100 குஞ்சுகளுக்கு ஒரு நாளைக்கு 6 லிட்டர் நீரில் கலந்து வைக்கலாம். மருந்து கலந்த நீரை முற்றிலுமாகக் கோழிகள் அருந்திய பிறகே மீண்டும் நீர் வைக்கவேண்டும்.

வெளிப்புற ஒட்டுண்ணிகள்
ஏதேனும் வெளிப்புற ஒட்டுண்ணிகள் இருப்பது கண்டறியப்பட்டால் உடனே, கொட்டகையை புகையூட்டம் செய்து, கோழிகளுக்கு மருந்து தூவுதல் வேண்டும்.