முட்டையிலிருந்து குஞ்சு பொரித்தல்
கோழிக்குஞ்சுகளின் உருவாக்கமே
அடைகாத்துக் குஞ்சு பொரித்தல் எனப்படுகிறது. முந்தைய நாட்களில்
தாய்க்கோழியின் அடையில் வைத்தே குஞ்சுகள் பொரிக்கப்பட்டன. தேசிய இனக்
கோழிகள் இதற்குச் சிறந்த எடுத்துக்காட்டுகள் ஆகும். இம்முறையில் கோழிகள்
இதற்குச் சிறந்த எடுத்துக்காட்டுகள் ஆகும். இம்முறை 10-12 முட்டைகள்
மட்டுமே 1 கோழியினால் ஒரு சமயத்தில் அடைக்காக்க முடியும்.
எனவே பெரிய பண்ணை உற்பத்தி
முறைகளுக்கும் கடினமானதாக இருக்கிறது. கோழிகளைப் போன்றே சூழ்நிலையை
உருவாக்கக்கூடிய அடைகாப்பான்களில் குஞ்சுபொரிப்பதில்
பயன்படுத்தப்படுகின்றன.
அடைகாத்தல்
அடைகாத்தல்
வெப்பநிலை, ஈரப்பதம்,
வாயுச்சூழ்நிலை மற்றும் முட்டைகளைத் திருப்பி விடுதல் போன்ற இயற்கைக்
காரணிகள் ஒரு வெற்றிகரமான குஞ்சு பொரிப்பதற்கு அவசியம்.
அடைக்காப்பானினுள் வெப்பநிலையானது அதைத் தயாரிப்பவர் கூறும் அளவு
வைத்துக் கொள்ளலாம். பொதுவாக மிதமான வெப்பநிலையே விரும்பப்படுகிறது. இது
பொதுவாக 99.5 டிகிரி செல்சியஸிலிருந்து 100.5 டிகிரி செல்சியஸ் ஃபாரன்ஹீட்
(37.2 டிகிரி செ - 37.8 டிகிரி செ) வரை குறைந்த வெப்பநிலை கரு
வளர்ச்சியைக் குறைக்கும். (சாதகமற்ற) அசாதாரண அதாவது அதிக வெப்பநிலை
நிலவும் போது வளர்ச்சியைப் பாதித்து கோழிகளில் இறப்பு வீதத்தை
அதிகப்படுத்துகிறது.
ஈரப்பதம் ஒரு முக்கியக் காரணி. உலர்ந்த அல்லது ஈரப்பதமுள்ள வெப்பநிலைமானிக் கொண்டு ஈரப்பதத்தை அளக்கலாம். முட்டைப் பொரிக்க 21 நாட்கள் ஆகும். முதல் 18 நாட்களில் ஈரப்பதம் 60 சதவிகிதமும் பின்பு 3 நாட்களுக்கு 70 சதவிகிதமும் இருந்தால் தான் முட்டைகள் குஞ்சுகள் பொரிக்கும். செலுத்தப்பட்ட அடைக்காப்பான் வெப்பநிலை அதிகரிக்கும் போது ஈரப்பதம் குறையும்.
கருமுட்டைகள் அகலமான பக்கம் மேல்நோக்கியவாறு வைத்தல் வேண்டும். கூரிய முனைப்பகுதியை மேலே இருக்குமாறு வைத்தால குஞ்சுகளின் தலைக் குறுகிய முனைப்பகுதியில் உருவாக்குவதால் பொரிக்கும் திறன் குறையும். முட்டையைத் திருப்பி விடுவது பொரிக்கும் திறனை அதிகப்படுத்தும். கைகளால் திருப்பினால் நாளொன்றுக்கு 4 முறை திருப்பவேண்டும். இப்போது நவீன அடைக்காப்பான்களில் முட்டைகள் தன்னிச்சையாகவே ஒரு நாளைக்கு 8 அல்லது அதற்கு மேற்பட்ட முறைகள் திருப்பிக் கொள்ளுமாறு வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் முட்டைத் தட்டுகள் 90 டிகிரி கோணத்தில் திருப்பிக் கொள்ளுமாறு வடிவமைக்கப்பட்டுள்ளன. 18 நாட்களுக்குப் பின் எந்த ஒரு திருப்புதலும் தேவைப்படாது.

முட்டைப் பொரிக்கும் திறனை அதிகப்படுத்த வெவ்வேறு பொரிப்பான்களைப் பயன்படுத்தலாம். தனித்தனி பொரிப்பான்களைப் பயன்படுத்தும் போது 98 டிகிரி பாரன்ஹீட் வெப்பநிலையும், ஈரப்பதம் 70-80 சதவீதமும் பின்பற்றப்படுகிறது. இவ்வாறு தனித்தனியாகப் பயன்படுத்துவதன் மூலம் சுத்தப்படுத்துதல், கிருமி நீக்கம் மற்றும் பிற முட்டைகளைப் பாதிக்காமல் புகை போடுதல் போன்றவற்றைச் செய்வது எளிது.
அடைகாக்கப்பட்ட முட்டைகளைச் சோதித்தல்
5 அல்லது 7வது நாளிலிருந்து
ஒளியில் கருவளர்நிலை காணவேண்டும். அப்போது கருவுறாத முட்டைகளையும், 18வது
நாளில் சிதைந்த அல்லது இறந்த முட்டைகளையும் நீக்கிவிடலாம். ஆட்கூலியைக்
குறைக்கப் பெரும்பாலும் 17 அல்லது 18ம் நாளில் தான் ஒளியில் கருவளர்நிலை
காணப்படுகிறது. ஒளியை உட்செலுத்தும்போது அது முட்டையினுள் ஒளி ஊடுருவிச்
செல்ல இயலாமல் இருட்டாக இருந்தால் கரு நன்றாக வளர்ந்துள்ளது என்றும்
சிறிதளவு ஒளி கசியக்கூடியதாக இருந்தால் கரு இறந்து விட்டது என்றும் ஒளி
எளிதில் ஊடுருவக்கூடியதாக இருந்தால் அது கருவுறாத முட்டை என்றும் அறிந்து
கொள்ளலாம். கரு வளர்ந்துள்ள முட்டைகளை மட்டுமே பொரிப்பகத்திற்கு மாற்றம்
செய்யவேண்டும். கோழியின் வம்வாவழியைப் பாதுகாக்க ஒரு கோழியின் முட்டைகளை
ஆண் பெண் தனித்தனிப் பிரிவுகளாகப் பிரித்து அடுக்கி வைக்கவேண்டும்.
(ஆதாரம்: வேளாண் அறிவியல் நிலையம், நாமக்கல்).
(ஆதாரம்: வேளாண் அறிவியல் நிலையம், நாமக்கல்).
குஞ்சு பொரிப்பகத்தின் பராமரிப்பு
அடைகாப்பான் மற்றும் குஞ்சு
பொரிப்பகத்தை முற்றிலும் முட்டையை அதில் வைப்பதற்கு முன்னரே ஒரு முறை
சோதனை செய்து ஏதேனும் குறையிருந்தால் சரிசெய்யவேண்டும். நன்கு கழுவி
கிருமிநாசினி கொண்டு சுத்தப்படுத்தி வைக்கவேண்டும். இது நோய்ப் பரவலின்
தன்மையைக் குறைக்கும்.
குஞ்சு பொரிப்பகம்
40 சதவிகிதக் கரைசலில் 40 மிலி
ஃபார்மால்டிஹைடு, 20 கிராம் பொட்டாசியம் ஃபர்மாங்கனேட் கரைசல் ஒவ்வொரு
2.8 மீட்டர் 3 இடைவெளிக்கும் அடைக்காப்பான் மற்றும் பொரிப்பகத்தினுள்
ஊற்றவேண்டும். பொட்டாசியம் பர்மாங்கனேட்டை கண்ணாடி அல்லது
மண்பாத்திரத்திலும், ஃபார்மலினை அதன் மீதும் ஊற்றிவிடலாம். புகையூட்டுதலை
முட்டை வைப்பதற்கு முன் தினம் செய்து அறையைப் பூட்டிவிடவேண்டும். இது
வெப்பநிலையை சரியாக நிர்வகிக்க உதவும்.
பொரிப்பகத்தில வேலை செய்பவர்கள் உள்ளே செல்லுமுன் குளித்து உடைகள், காலணிகளை மாற்றிக்கொண்டு செல்லவேண்டும். குஞ்சுகள் விற்பனை செய்யும் போது முறையாக இரசீது வழங்கி உடனுக்குடனே அனுப்பிவிடவேண்டும். மின்சார இணைப்பு துண்டிக்கப்படும் சமயங்களில் மின்சாரம் உண்டாக்கும் சாதனம் (ஜெனரேட்டர்) பயன்படுத்தலாம்.
(ஆதாரம்: டாக்டர்.ஆச்சார்யா, Handbook of Animal Husbandary)

காடை
இனப்பெருக்கம்
காடைகள் 7 வார வயதில்
முட்டையிட ஆரம்பித்து, 8வது வாரத்தில் முட்டை உற்பத்தி 50 விழுக்காடு
நிலையை அடையும். பொதுவாக காடைகள் மாலை நேரத்திலேயே முட்டைகளை இடும்.
கோழிக்குஞ்சுப் பொரிப்பகத்தை சரியானபடி மாற்றம் செய்தால் அதிக காடை
முட்டைகளை அடை வைக்கலாம். அடைவதைத 18வது நாள் காடைக்குஞ்சுகள் வெளிவரும்.
500 பெண் காடைகளைக் கொண்டு வாரத்திற்கு 1500 காடைக்குஞ்சுகளை உற்பத்தி
செய்யலாம்.
காடை முட்டைகள்
கோடைக்காலத்தில் காடை அடை முட்டைகளைக் குளிர்ந்த சூழ்நிலையில் சேமித்து வைக்கவேண்டும்.
வாத்து
முட்டை வாத்துக்களின் அடைகாப்பு
அடைக்காப்புக் காலம் 28 நாட்கள்
ஆகும். 6-8 வாரத்திற்குட்பட்ட வாத்துகள் இட்ட முட்டைகளையே குஞ்சு
பொரிப்பதற்குப் பயன்படுத்த வேண்டும். ஆண், பெண் வாத்துகளை
இனச்சேர்க்கைக்கு விட்ட 10 நாட்களுக்குப் பின்பு முட்டைகள் சேகரிக்கத்
தொடங்கலாம். அழுக்கான முட்டைகளை கழுவிப் பயன்படுத்துதல் வேண்டும்.
இவ்வாறு கழுவுவதற்கு 27 டிகிரி செல்சியஸ் சூடான நீரில் கிருமிநாசினி உடனே
உலரவைக்க வேண்டும். இல்லையெனில் முட்டை அழுகிவிட வாய்ப்புள்ளது.
அடைகாப்பு
14-16 டிகிரி செல்சியஸ்
வெப்பநிலையில் 80 சதவீகிதம் ஈரப்பதமுள்ள இடத்தில் முட்டைகளை சேகரித்து
வைக்க வேண்டும். முட்டைகளை செயற்கை முறையில் பொரிக்க வைக்க செலுத்தப்பட்ட
அடைகாப்பானைப் பயன்படுத்தலாம். எனினும் வாத்துமுட்டைகளுக்கு ஈரப்பதம்
அதிகம் தேவைப்படுகிறது. எனவே இயஞ்சூடான நீரை இரண்டாம் நாளிலிருந்து
அடைக்காப்பின் 23ம் நாள் வரை தெளிக்க வேண்டும். முட்டைகளை 24ம் நாள் வரை
நாளொன்றுக்கு 4 முறையாவது திருப்பிவிடுதல் வேண்டும். 24ம் நாள் முட்டைகள்
அடைகாப்பகத்தில் இருந்து பொரிப்பகத்திற்கு மாற்றப்படுகிறது.
குஞ்சுபொரித்தல்
37.5 முதல் 37.2 டிகிரி செல்சியஸ் அளவு வெப்ப நிலை இருக்க வேண்டும் (99.5-99டிகிரி ஃபாரன்ஹீட்டில்) அடைக்காப்பின் முதல் 25 நாட்களுக்கு 30-31டிகிரி செல்சியஸ் வெப்பநிலையும் பொரிப்பகத்தில் கடைசி 3 நாட்களுக்கு 32.7-33.8 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையும் பராமரிக்கப்பட வேண்டும். முட்டைகளின் மீது கிருமிநாசினி கலந்த இளஞ்சூடான நீரை அரை மணி நேரம் நாளொன்றிற்கு என 25 நாட்களுக்குத் தெளிக்கலாம். 7ம் நாளில் ஒளியில் கருவளர் நிலை காணலாம்.
வெப்பமளித்தல் (0-4 வாரங்கள்)
காக்கி கேம்பெல் குஞ்சுகளுக்கு
வெப்ப மூட்டும் காலம் 3-4 வாரங்கள். இறைச்சிவகை வாத்துக்குஞ்சுகலான
பெக்கின் போன்ற இனங்களுக்கு 2-3 வாரங்கள் போதுமானது. அடைப்பானுக்குள்
இடவசதி 90-100 ச.செ.மீ அளவு ஒவ்வொரு குஞ்சிற்கும் அளிக்கப்படவேண்டும்.
29-32 டிகிரி செல்சியஸ் அளவு வெப்பநிலை முதல் வாரத்தில் அளித்தல்
அவசியம். பின்பு இது வாரத்திற்கு 3 டிகிரி செல்சிஸ் என்று 24 டிகிரி
செல்சியஸ் அளவு குறைக்கப்படுகிறது (4வது வாரத்தில்).
வெப்பமளித்தல்
வாத்துக் குஞ்சுகளை கம்பி வலை
அமைப்பிலோ, குளத்தின் மீதோ அல்லது பேட்டரிகளின் மீதோ வளர்க்கலாம்.
கம்பிவலையாக இருப்பின் 0.046 மீ2 அளவும் 3 வார வயது வரை ஒவ்வொரு
குஞ்சிற்கும் அளிக்கப்படுதல் வேண்டும். 5 -7.5 செமீ (2-3 அங்குளம்) ஆழமுள்ள
நீர்த்தொட்டிகள் வாத்துக் குஞ்சுகளுக்குப் போதுமானது. ஏனெனில் அதிக
ஆழத்தில் குஞ்சுகள் உள்ளே விழுந்துவிட வாய்ப்புண்டு.
0 comments :
Post a Comment