வீடு / கொட்டகை அமைப்பு
18 வார வயதில்
சரியாக வளர்ச்சியடையாத பெட்டைக் குஞ்சுகளைப் பிரித்து நீக்கிவிடவேண்டும்.
கொட்டகைப்படுத்தும் சமயத்தில் சரியாகப் பிரித்து விடுதல் நல்லது.
பிரிக்கப்பட்ட கோழிகளை தனி அமைப்பில் வளர்த்துப் பின் முட்டையிடும்
வீட்டிற்கு எடுத்துச் செல்லலாம் அல்லது அங்கேயே வளர்க்கலாம். சரியான அளவு
இடவசதியுடன் அதிக இடம் வீணாகாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். அதாவது
முட்டையிடும் கோழி ஒன்றிற்கு 65 அடி இடம் அளிக்கப்படவேண்டும்.
முட்டையிடுவதற்கு 2 வாரம் முன்பு கூடுகள் அல்லது வலைப்பின்னல்
அமைக்கப்படவேண்டும். அப்போது தான் கோழிகள் புதிய அமைப்பிற்கு பழகிக் கொள்ள
ஏதுவாகும்.
முட்டையிடும் கோழி
பட்டைத் தீட்டிய அரிசி |
13
|
கோதுமைத் தவிடு |
4
|
மீன் துகள் / உலர்த்தியது |
6
|
உப்பற்ற மீன் |
6
|
டை கால்சியம் பாஸ்பேட் |
1
|
உப்பு |
0.25
|
தாதுக் கலவை |
1.75
|
ஓடுத்துகள் |
5
|
மொத்தம் |
100.00
|
தீவனத்தை நீளமான தீவனப்
பெட்டியிலோ அல்லது தொங்கும் அமைப்புள்ள தீவனப்பெட்டிகள் அமைத்தோ
கொடுக்கலாம். 50 செ.மீ விட்டமும் 20-25 கிலோ எடைக் கொள்ளளவுக் கொண்ட
தொங்கும் வகையில் அமைந்த தீவனப்பெட்டி 100 குஞ்சுகளுக்கு போதுமானது.
நீர்த் தொட்டியிலிருந்து 3 மீட்டர் தொலைவில் தீவனப்பெட்டிகள் இருக்குமாறு
அமைக்கவும். தீவனத்தை அவ்வப்போது நன்கு கலக்கிவிடவேண்டும்.
நீரானது 2.5
செ.மீ குறைந்த இடைவெளியில் வைக்கப்படவேண்டும். வெப்பநிலை அளவு 27 டிகிரி
செல்சியஸிற்கு மேல் செல்லும் போது நீர்த்தொட்டிகளை அதிகப்படுத்தவேண்டும்.
தீவனத் தொட்டிகளின் மேல் முனை (நுனி) யானது கோழிகளின் பின்பாத்தியை விட
சற்று உயரே இருக்குமாறு அமைக்கவேண்டும். தொட்டியின் 3ல் ஒரு பங்கு மட்டுமே
தீவனம் நிரப்பவேண்டும்.
கூண்டு முறைப் பராமரிப்பு
இம்முறையில் கோழிகளைக் கையாள்வது எளிது. குறைந்த இடத்தில் அதிக எண்ணிக்கையில் கோழிகளை வளர்க்கலாம். முட்டைச் சேகரிப்பு எளிது, ஒட்டுண்ணிகள் மற்றும் நோய்த்தொல்லை குறைவு. பயனற்ற கோழிகளைக் கண்டு நீக்குவது எளிது போன்ற பல்வேறு பயன்கள் கிடைக்கின்றன. எனினும் ஆரம்ப முதலீடு அதிகம், ஈரக்கழிவுகள், துர்நாற்றம், கொசு, ஈ போன்ற குறைபாடுகளும் உள்ளன. இவற்றில் சில பிரச்சனைகளுக்கு உயர்த்தப்பட்ட கூண்டு முறை சிறந்தது. 4 கோழிக் கூண்டு வீடுகள் பண்ணைக்குப் போதுமானது. நான்கு கூண்டு முறையின் அளவுகள் முறையே.
நீளம் 45 செ.மீ (முன்பக்கம்)
உயரம் (பின்பகுதியில்) 38 செ.மீ
உயரம் முன்பகுதியில் 42 செ.மீ
அகலம் 42 செ.மீ
எனினும் உயரத்தை அளவிட 2 முறைகள் உள்ளன. கூண்டின் தரை முன்பகுதி நோக்கி சரிந்து இருக்கும். பொதுவாக முட்டையிடும் கோழிகளுக்கான தரையமைப்பு இணைக்கப்பட்ட கம்பி வலையாக இருக்கும். சில இடங்களில் இக்கம்பிகள் பிளாஸ்டிக் உறைகளைக் கொண்டிருக்கும். தரைக் கம்பி 14 கஜமுள்ள கம்பிகளாக இருப்பது சிறந்தது. வலைச்சல்லடை அளவு 2.5x5.0 செ.மீ (1 x2”) கூண்டின் முன்பக்கம் கூண்டையும் தாண்டி வலையமைப்பு சிறிது நீண்டிருக்கும். இதன் வழியே முட்டைகளை எளிதில் சேகரித்துக் கொள்ளலாம். இந்து நீண்ட அமைப்பு 18 செ.மீ தூரம் சற்று வளைந்து காணப்படும். குறைந்த அளவு இடத்தில் அதிக எண்ணிக்கையில் கோழிகளை வளர்க்க ஏதுவாக ஒரு அடுக்கு, இரண்டு மற்றும் 3 அடுக்கு வரை அமைத்துக் கொள்ளலாம்.
கூண்டானது தரையிலிருந்து 1
மீட்டர் உயரத்தில் அமைக்கப்பட்டிருக்கவேண்டும். எச்சங்களைச் சேகரிக்கக்
கூண்டின் அளவிற்கேற்ப தரையில் 30 செ.மீ ஆழத்திற்கு குழி அமைத்தல் சிறந்தது.
நீளமான, தொடர்ச்சியான தீவனத்
தொட்டிகள் பயன்படுத்தப்படுகின்றன. நீரானது நீளவாக்கில் அமைக்கப்பட்ட
குழாய் மூலம் தொடர்ச்சியாக வழங்கப்படவேண்டும். தீவனத் தொட்டிக்கு மேலே
கூண்டிற்கு வெளிப்புறப் பகுதியில் நீர்க்குழாய்கள் செல்லுமாறு வைத்தல்
வேண்டும். ஆங்காங்கு கீழே வரும் குழாய்களில் துளையிட்டு அடைப்புடன் நீர்த்
தேவையான அளவு சொட்டுசொட்டாக வரும்படி வைத்தல் வேண்டும். 3 மாதங்களுக்கு
ஒரு முறை குடற்புழு நீக்கம் செய்தல் வேண்டும்.
இனவிருத்திக் கோழிகள் பராமரிப்பு
இக்கோழிகள்
குஞ்சு பொரிக்கும் முட்டைகள் இடுவதற்குப் பயன்படுத்தப்படுகின்றன.
பெருவாரியான முட்டைகளில் இருந்து நல்லக் குஞ்சுகளைப் பெறவேண்டுமெனில்
முறையான பராமரிப்பு அவசியம். இனச்சேர்க்கைக்கென தனியாக சேவல்கள்
வளர்க்கப்படவேண்டும். இவ்வாறு இனச்சேர்க்கை சேவல்களை எடைக் குறைந்த
இனங்களுக்கு சேவல்,பெட்டைக் கோழிகள் விகிதம் 1:10 என்றும் எடை மிகுந்த
இனங்களுக்கு 1:8 என்றும் இருக்குமாறு 20வது வாரத்தில் விடவேண்டும். 24வது
வாரத்திலிருந்து முட்டைகளை சேகரித்துக் கொள்ளலாம். புல்லோரம் கழிச்சல்
நோய் மற்றும் மைக்கோபிளாஸ்மாசிஸ் போன்ற நோய்கள் தாக்காமல் தேவையான
நடவடிக்கைகள் எடுக்கவேண்டும்.
கோழிகளின் ஆரோக்கியத்திற்கும்,
அதிகமாகக் பொரிக்கும் திறனுக்கும் நன்கு சுத்தமான உலர்ந்த கூளங்களைப்
பயன்படுத்துதல் அவசியம். அடைக்காக்க வைக்கப்படும் முட்டைகள் புதிதாக
இடப்பட்டவையாகவும், ஓடுகள் தரமாகவும் (கெட்டியாகவும்) இருக்கவேண்டும். 5
கோழிகளுக்கு ஒரு கூடு என்ற அளவில் கூடுகள் தேவைப்படும்.
இறைச்சிக் கோழிகளுக்கான உணவுக் கட்டுப்பாடு
இறைச்சிக்
கோழிகள் பொதுவாகவே விரைவில் வளரக் கூடியவையாக இருக்கும். உடல்
வளர்ச்சியும் இனப்பெருக்கத் திறனும் ஒன்றுக்கொன்று எதிரெதிராக
அமைந்திருக்கும். எனவே உடல் வளர்ச்சி அளவுக்கு மீறி மிகுந்துவிடாமல் சரியான
அளவு உணவுக் கொடுக்கவேண்டும்.
உணவுக் கட்டுப்பாட்டின் நன்மைகள்
- அனைத்துக் கோழிகளும் ஒரே அளவில் இருக்கும்.
- உணவைக் குறைக்கும் போது இடும் முட்டையின் அளவு ஆரம்பத்தில் சற்று பெரியதாக இருக்கும்.
- பருவமடையும் போது உடல் எடை (சரியாக) குறைந்து இருக்கும்.
- முட்டையிடும் காலம் அதிகமாக இருக்கும்.
- கருத்தரித்தல் மற்றும் குஞ்சு பொரிக்கும் தருணங்களில் அதிகப் பிரச்சனைகளைத் தவிர்க்கலாம்.
- அதிகத் தீவனம், உண்பதால் வரும் கால் நோய்கள், பாதிப்புகளிலிருந்து பாதுகாத்துக் கொள்ளலாம்.
- அதிக தீவனத்தால் சில சமயங்களில் கோழிகள் இறக்க நேரிடலாம்.
- சேவல்கள் அதிக எடையுடன் இருந்தால் இனச்சேர்க்கை செய்வது கடினம். இது போன்ற பல பிரச்சனைகளை உணவுக் கட்டுப்பாட்டின் மூலம் தவிர்க்கலாம்.
உணவுக் கட்டுப்பாட்டு முறைகள்
இரண்டு முறைகள் உணவுக் கட்டுப்பாட்டில் பின்பற்றப்படுகின்றன.
- ஒரு குறிப்பிட்ட இனத்தின் உடல் எடை அதிகரிப்பை அட்டவணையுடன் ஒப்பிட்டு அதை விட அதிகமாக இருப்பின் உணவின் அளவைக் குறைத்துக் கொள்ளலாம்.
- ஒரு நாள் உணவை நிறுத்தி ஒரு நாள்விட்டு, ஒரு நாள் என்று மாற்றி உணவிடலாம் அல்லது வாரத்திற்கு 2 நாட்கள் என்றவாறு குறைத்துக் கொள்ளலாம்.
- உணவுக் குறைப்புத் திட்டத்தின் முக்கிய அம்சம் வாரம் ஒரு முறை எடைச் சரிபார்த்தலே ஆகும். எனவே மாதிரிப் பறவைகளை முன்பே எடையிட்டு பிற கோழிகளும் அந்த எடையில் இருக்கின்றனவா என்று பார்த்துக் கொள்ளவேண்டும். மாதிரியாக எடுத்துக் கொள்ளும் கோழிகள் ஒப்பிட்டுப் பார்க்கும் கோழிகளின் அதே இனத்தைச் சேர்ந்தவையாக இருக்கவேண்டும்.
(ஆதாரம்: கேரள வேளாண் பல்கலைக்கழகம்)
பயனற்ற கோழிகளை நீக்குதல்
பயனற்ற கோழிகளை நீக்குதல்
பயனற்ற,
உற்பத்தியற்ற கோழிகளை வருடம் ஒரு முறை நீக்குதல் சிறந்தது. உடல்
கோளாறுகள், உடற்செயலை பாதிக்கும் அல்லது சரிப்படுத்த இயலாத நோய்கள் கொண்ட,
முட்டை உற்பத்தி பாதிக்கப்பட்ட பறவைகளை நீக்கி விடுதல் வேண்டும்.
வெளிப்புறத் தோற்றக் குறைபாடுகள் சில சமயம் முட்டை உற்பத்தியைப்
பாதிக்காது. இதைச் சோதிக்க முட்டையிடும் கொட்டகையில் வைத்துச் சோதித்துப்
பார்த்துக் கொள்ளலாம். இவற்றைப் பார்த்து இரவில் நீக்கம் செய்வத
தொந்தரவைக் குறைக்கும்.
வெளித்தோற்ற அடிப்படையில் நீக்குதல்
வெளித்தோற்ற அடிப்படையில் நீக்குதல்
வெளித்தோற்ற அமைப்பு
உற்பத்தியை அதிகம் பாதிக்காது எனினும் கோழியின் ஆரோக்கியம் மற்றும்
உடல்நலைக் குறித்துத்தெரிந்து கொள்ள இது உதவும் நல்ல முட்டை உற்பத்திச்
செய்யும் கோழிக்கும் சாதாரண கோழிக்கும் உள்ள வேறுபாடு.
பண்புகள் |
முட்டையிடும் கோழி | முட்டையிடாத கோழி |
கொண்டை மற்றும் தாடி | முழுவதும் சிவப்பு நிறமாக மெழுகு போன்ற, வெல்வெட். | வறண்ட, சுருங்கிய சற்று கடினமான. |
அலகு | நன்கு வளைந்து, சிறிது மஞ்சளாக, நல்ல தேகத்துடன், தேய்ந்து காணப்படும். | நீண்டதாக, மெல்லிய கூரிய முனையுடன், நல்ல மஞ்சள் நிறத்தில் தோற்றமளிக்கும். |
கண்கள் | பளிச்சென்று எப்போதும் விழிப்புடன் இருக்கும். | சோர்ந்து தூங்குவது போல் இருக்கும். |
காது | மெழுகு போன்று வெல்வெட் தன்மையுடன் முழுமை பெற்றிருக்கும். | சொரசொரப்பாக சுருங்கி இருக்கும். |
இடுப்புப் பகுதியைச் சூழ்ந்துள்ள எலும்பு | விரிந்த நிலையில் (இரு விரல்கள்) மெல்லிய வளையும் தன்மையுடையதாக இருக்கும். | சற்று மூடிய நிலையில் கெட்டியானதாக இருக்கும். |
வயிறு | 3-5 விரல்கள் அளவு பெரிதாக விரிந்து, குறைந்த கொழுப்புடன் மென்மையானதாக இருக்கும். | 2 விரல் அளவுக்குக் குறைவாகவே இருக்கும். அதிகக் கொழுப்புடன் கடினமானதாக இருக்கும். |
கழிவுத்துவாரம் / எச்சவாய் | பெரிதாக ஈரப்பதத்துடன் இருக்கும். | சிறியதாக உலர்ந்து சுருங்கிக் காணப்படும். |
இறகு உதிர்தலின் அடிப்படையில் நீக்கம் செய்தல்
இறகு உதிர்வது கோழி
முட்டையிடுவதன் ஒரு அறிகுறி ஆகும். நல்ல முட்டை உற்பத்தியுள்ள கோழிகள்
தாமதமாக இறகை உதிர்க்க ஆரம்பித்தாலும் விரைவில் உதிர்ந்து விடும். சில
சமயம் இறகு உதிர்ந்து கொண்டிருக்கும் போதே முட்டையிட ஆரம்பித்து விடும்.
ஆனால் முட்டை இட இயலாத கோழிகள் முன்னதாகவே ஆரம்பித்து நீண்ட நாட்களுக்கு
இறகை உதிர்த்துக் கொண்டே இருக்கும். ஆனால் முட்டை இடாது. இறக்கையில்
இருந்து உதிர ஆரம்பிக்கும் கடினமான முதல் நிலை இறகுகளை எண்ணுவதன் மூலம்
கோழியின் தன்மையை அறிந்து கொள்ள இயலும். முதலில் உள் இறகும் பின்பு மைய
இறகு உதிர ஆரம்பிக்கும். புதிய முதல் நிலை இறகுகள் 6 வாரத்திலும் பின்பு
வளர்ந்த இறகுகள் அடுத்த 2 வாரத்திலும் உதிரும். இறகு உதிரும் (சமயங்களில்)
காலத்தில் 4 புதிய முதல் நிலை இறகுகளுடன் இருந்தால் கோழியானது இறகு
உதிர்வதன் 12வத வாரத்தில் இருப்பதாகக் குறிக்கும்.
ஒரு வருட உற்பத்திக்குப் பின் முட்டை உற்பத்தி குறையத் தொடங்கிவிடும். அதன் பின் அக்கோழிகளைப் பராமரிப்பது பொருளாதார ரீதியில் இலாபகரமானதாக இருக்காது. ஏதேனும் கால்மோனைல்லா போன்ற நோய் பரவத் தொடங்கினால் உடனே அனைத்தையும் அழித்து விடுதல் நன்று.
(ஆதாரம்: டாக்டர். ஆச்சார்யா, Handbook of Animal Husbandary)
ஒரு வருட உற்பத்திக்குப் பின் முட்டை உற்பத்தி குறையத் தொடங்கிவிடும். அதன் பின் அக்கோழிகளைப் பராமரிப்பது பொருளாதார ரீதியில் இலாபகரமானதாக இருக்காது. ஏதேனும் கால்மோனைல்லா போன்ற நோய் பரவத் தொடங்கினால் உடனே அனைத்தையும் அழித்து விடுதல் நன்று.
(ஆதாரம்: டாக்டர். ஆச்சார்யா, Handbook of Animal Husbandary)
முட்டைப்பராமரிப்பு
முட்டைகள் நல்லச் சுகாதாரமான
சூழ்நிலையில் உற்பத்தி செய்யப்படவேண்டும். நல்லத் தரமான கரு முட்டைகள்
சீக்கிரம் கெட்டுவிடும். முட்டைக்கூடுகளில் நல்ல சுத்தமான கூளங்களையே
இட்டு வைக்கவேண்டும். கோழிக் கொட்டகையிலிருந்து குறைந்தது நாளொன்றுக்கு 3
முறையாவது இடப்பட்ட முட்டைகளை சேகரித்துக் குளிர்ந்த இடத்தில்
பாதுகாக்கவேண்டும். சற்று வெப்பமான சூழ்நிலைகளில் 4 அல்லது 5 முறை
முட்டைகளை சேகரிக்கவேண்டும்.
முட்டைகளைக் கவனமாகக் கையாளவேண்டும். நல்ல சுத்தம் செய்யப்பட்ட பிளாஸ்டிக்கால் ஆன வலை அமைப்புப் பெட்டிகளிலோ, முட்டைக் குழித்தட்டுக்களிலோ சேகரித்து வைக்கலாம். மாசடைந்த முட்டைகளின் எண்ணிக்கை அதிகமாக இருப்பின் பராமரிப்பு முறைகளில் ஏதேனும் குறைபாடு உள்ளதா என்று சரிபார்க்கவேண்டும்.
முட்டைகளைக் கவனமாகக் கையாளவேண்டும். நல்ல சுத்தம் செய்யப்பட்ட பிளாஸ்டிக்கால் ஆன வலை அமைப்புப் பெட்டிகளிலோ, முட்டைக் குழித்தட்டுக்களிலோ சேகரித்து வைக்கலாம். மாசடைந்த முட்டைகளின் எண்ணிக்கை அதிகமாக இருப்பின் பராமரிப்பு முறைகளில் ஏதேனும் குறைபாடு உள்ளதா என்று சரிபார்க்கவேண்டும்.
முட்டைப்பராமரிப்பு
கோடை காலப்பராமரிப்பு
முட்டையிடும் கோழிகள் 23.8
செல்சியலிருந்து 29.4 டிகிரி செல்சியஸ் வரை மட்டுமே வெப்பநிலையை
தாங்கக்கூடியது. முட்டையிடும் கொட்டகையின் வெப்பநிலை 32.3 டிகிரி
செல்சியசுக்கு அதிகமாகும் போது கோழிகளின் உணவு உட்கொள்வது குறைந்து முட்டை
உற்பத்திக் குறையும். 37.8 டிகிரி செல்சியசுக்கு மேல் போகும் போது இறப்பு
வீதம் அதிகரிக்கும். மேலும் இடும் முட்டைகளின் தரமும் குறையும். எனவே
கோடைக்காலங்களில் முறையான நடவடிக்கைகள் எடுக்கப்படவேண்டும். அவையாவன.
- குளிர்ந்த சுத்தமான குடிநீர் தாராளமாக வழங்கப்படவேண்டும். முடிந்தால் குடிநீரில் ஐஸ்கட்டிகளை உடைத்துப் போட்டு குளிர்ந்த நீராகக் கொடுக்கலாம்.
- கோழிப்பண்ணை முழுவதும் ஆங்காங்கு நிழல் தரும் மரங்கள் இருக்கவேண்டும்.
- கூரைமீது அவ்வப்போது நீரைத் தூவுமாறு குழாய் அமைக்கலாம். இவ்வாறு கூரையின் மேல் நீர்த்தெளிப்பது வெப்பத்தைக் குறைக்க உதவும்.
- கம்பிவலை அமைப்புத் தேவைப்படும்போது சுத்தம் செய்யவேண்டும். அப்போது தான் நல்ல காற்றோட்டம் இருக்கும்.
- பழையக் கூளங்களின் அடர்த்தியைக் குறைக்கவேண்டும். பழையக் கூளங்கள் நீக்கப்பட்ட இடத்தில் 2 அளவிற்குப் புதிய கூளங்களைப் பரப்பவேண்டும்.
- அதிகாலை நேரத்தில் செயற்கை ஒளிவிளக்குகளைப் போட்டு வெளிச்சம் அளிப்பதன் மூலம் கோழிகள் குளிர்ச்சியான நேரத்தில் அதிகத் தீவனம் எடுத்துக்கொள்ளும்.
- தீவனத்தில் அதிகக் குருணை சேர்ப்பதன் மூலம் கோழிகளுக்குக் கால்சியம் சத்துக் கிடைக்கும். இதனால் முட்டையின் ஓடுகள் சற்று கடினமாக எளிதில் உடையாததாகக் கிடைக்கும்.
- எலைக்டிரோலைட், விட்டமின் சி, நுண்ம உயிரிக்கலவைகள் போன்றவற்றை நீரில் கலந்து கொடுப்பதால் வெப்பத்தாக்கம் சற்றுக் குறையும்.
- மின்விசிறி வசதி அமைத்தல் சிறந்தது.
- நாளின் குளிர்ந்த காலை, மாலை வேளைகளில் விட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்த தீவனங்களை அளிக்கவேண்டும்.
- கொட்டகையின் பக்கங்களில் ஈரமான சாக்குப் பைகளைத் தொங்கவிடுதல் குளிர்ச்சியை ஏற்படுத்தும்.
- மண் பானைகளில் நீரை வைத்தால் எப்போதும் குளிர்ந்து இருக்கும்.
- தெளிப்பான்களை கொட்டகையினுள் ஆங்காங்கு அமைக்கவேண்டும்.
(ஆதாரம்: www.vuatkerala.org)
0 comments :
Post a Comment