Thursday 31 October 2013

வெள்ளாடு மற்றும் செம்மறி ஆடுகளில் பூச்சி மேலாண்மை:

புற ஒட்டுண்ணிகள்


கணுக்கால் பூச்சிகள் வெள்ளாடு மற்றும் செம்மறியாடு வளர்ப்பில் பல வழிகளில் உற்பத்தியைப் பாதிக்கின்றன. புற ஒட்டுண்ணிகள் ஆடுகளின் உடல் திசுக்களான இரத்தம், தோல் மற்றும் உரோமங்களை உட்கொள்கின்றன. இவை கடிக்கும்போது ஏற்படும் வலி, ஆடுகளில் எரிச்சலை ஏற்படுத்தி விரும்பத்தகாத விளைவுகளை உண்டு பண்ணுகின்றன. இவை கடிப்பதால் எடை இழப்பு மற்றும் பால் உற்பத்திக் குறைவு போன்ற விளைவுகள் ஏற்படுகின்றன. இப்பூச்சிகளின் தாக்கம் அதிகரித்தால் மந்தைகளில் எதிர்பார்த்த இலாபம் கிடைக்காது.
பேன்கள்

பேன்கள் தமது வாழ்நாள் முழுவதிலும் மற்றோர் உயிரியைச் சார்ந்து வாழ்கின்றன. இவை இளநிலையிலிருந்து முதிர்நிலைவரை ஆடுகளின் இரத்தத்தை உறிஞ்சியே வாழ்கின்றன. வெள்ளாடுகளில் வாழும் பேன்கள் ஆடுகளை மட்டுமே தாக்கக் கூடியவை.
பேன்களால் பாதிக்கப்பட்ட விலங்குகள் சோர்ந்து அதிக சிராய்ப்புகளுடன் காணப்படும். இரத்தம் உறிஞ்சும் பேன்கள் தோலில் துளையிட்டு இரத்தத்தை உறிஞ்சும். இவை துளையிட ஏற்றவாறு வாய்ப்பகுதிகளைக் கொண்டும், உரோமங்களிடையேயும், தோல் கசிவுகளையும் உண்ணக்கூடியவை. பாதிக்கப்பட்ட ஆடுகள் சரியாக உணவு தீவனம் உட்கொள்ளாது. ஆகவே பால் உற்பத்தி 25 சதவீதம் வரை குறையும். அதிக இரத்த இழப்பு ஏற்படுவதால் பேன்கள் பாதிக்கப்பட்ட ஆட்டிலிருந்து மற்ற ஆடுகளுக்கு எளிதில் பரவும். சில பேன்கள் பறவைகளில் தொற்றிக் கொண்டும் ஒரிடத்திலிருந்த மற்றோர் இடத்திற்கு பரவுகிறது. பேன்கள் வசந்த காலங்களில் அதிகமாக பெருக்கமடைகின்றன. கோடை காலங்களில் இதன் எண்ணிக்கை குறைவாகவே காணப்படுகிறது.
பூச்சிக் கொல்லிகள் பேனின் முட்டைகளைக் கொல்வது இல்லை. ஆகவே கட்டுப்படுத்துதல் கடினம், முட்டையிட்டு 8-12 நாட்கள் கழித்தே குஞ்சு பொரிப்பதால் முதல் பூச்சிக்கொல்லி அடித்த பிறகு, சில நாட்கள் இடைவெளி விட்டு இரண்டாவது முறை அடிப்பதும் அவசியம்.
கடிக்கும் பேன்கள்

அங்கோரா, (வெள்ளாட்டைக்கடிக்கும் பேன்கள்) ஹாலோ கார்டிகோஸ் போன்றவை முக்கியமான கடிக்கும் வகை பேன்கள் இவ்வகை பேன்கள் தோலின் மேற்பகுதியில் வாழ்பவை. இவை ரோமங்கள், தோல் உரிவுகளை உட்கொள்ளும், முட்டைகள் பொரிப்பதற்கு 9-12 நாட்கள் தேவைப்படுகின்றன. வாழ்க்கைச் சுழற்சி முடிய 1 மாத காலம் ஆகும்.
இவற்றைக் கட்டுப்படுத்த முதல் முறை பூச்சிக்கொல்லி மருந்து தெளித்த 2 வாரங்களில் மீண்டும் ஒரு முறை தெளிக்க வேண்டும்.
Biting louse
படம் 1. கடிக்கும் பேன்கள்
இரத்தம் உறிஞ்சும் பேன்கள்

5 வகை உறிஞ்சும் பேன்கள் உள்ளன. அவற்றுள் முக்கியமானவை.

Sucking Louse
படம் 2. இரத்தம் உறிஞ்சும் பேன்கள்

1.ஆப்பிரிக்க நீலப் பேன்கள்


இவை இந்திய, அமெரிக்கா போன்ற மிதவெப்ப நாடுகளில் காணப்படுகின்றன. ஆடுகளின் கழுத்து, உடல், தலை போன்ற பாகங்களில் காணப்படுகின்றன. அதிக எண்ணிக்கையில் இருந்தால் விலங்குகள் இறந்துவிட வாய்ப்புண்டு.

2.பாத பேன்கள்


வெள்ளாடு மற்றும் செம்மறியாடுகளின் கால்களில் காணப்படுகின்றன. வசந்த காலங்களில் இவற்றின் எண்ணிக்கை அதிகமாகும்போது அடிவயிற்றுப் பகுதியிலும் காணப்படும். செம்மறியாட்டுக் குட்டிகள் அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளன.

3.வெள்ளாடுகளில் உறிஞ்சும் பேன்கள்


இது ஆடுகளில் உடல் முழுவதும் பரவிக் காணப்படும்
படம் 2. வெள்ளாடுகளில் உறிஞ்சும் பேன்கள்.

4.முகப்பேன்கள் மற்றும் நீண்ட மூக்கு கொண்ட பேன்கள்
இவை குறைந்த அளவில் காணப்படும்
நாசி மூக்கு ஈக்கள்
ஆடுகளின் நாசிகளை இவை அதிகம் பாதிக்கின்றன. பாதிக்கப்பட்ட ஆடுகளின் நாசியிலிருந்து திரவம் வழியும். தலையை அடிக்கடி ஆட்டும். பசியின்மை, பற்களை நரநரவென கடித்தல் போன்ற அறிகுறிகள் இருக்கும்.

Nose bot flies
படம் 3. நாசி ஈக்கள்
கெட் ஒட்டுண்ணி

கெட் ஒட்டுண்ணி பேன் ஈ எனவும் அழைக்கப்படுகிறது. பெரிய, தட்டையான, இறகற்ற ஒட்டுண்ணிகள் இவை. வெள்ளாடுகளில் இருவகை ஒட்டுண்ணிகள் காணப்படும். மான்களில் இனப்பெருக்கம் செய்யும் சில ஒட்டுண்ணிகள் செம்மறி ஆடுகளில் உணவை எடுத்துக்கொள்ளும். இவ்வொட்டுண்ணிகள் பாதித்த ஆடுகள் கடியைத்தாங்க முடியாமல் பிய்த்துக்கொள்ளும். இதன் கடியிலிருந்து விடுபட ஆடுகள் தரையில் விழுந்து புரளும்.

Ked Insect
படம் 4. கெட் ஒட்டுண்ணி

இப்பூச்சிகள் சரியான தீவனம் அளிக்கப்பட்டால், அதிக பாதிப்பை ஏற்படுத்தாது.
ஈப்புழுக்களின் தாக்கம்

புழுக்கள், (ஈக்கள்) அனைத்து வகை ஆடுகளைத் தாக்குகின்றன. இதில் திருகுப்புழுக்கள் முக்கியமானவை. உயிருள்ள ஆடுகளின் இரத்தத்தை உறிஞ்சும் இவை மிகுந்த சேதத்தை உண்டுபன்னுகின்றன. இனப்பெருக்கத் தன்மை அற்ற ஆண் ஆடுகளில் (கிடாக்களில்) இவை அதிகம் காணப்படுகின்றன.

பிற வகை ஈப்புழுக்கள் இறந்த உயிரிகளின் உடலில் முட்டையிட்டு வளர்கின்றன. இவை உயிருள்ள சதை பாகங்களை உட்கொள்வதில்லை. எனவே அதிக சேதத்தை ஏற்படுத்துவதில்லை. கால்நடைகளில் ஏதேனும் காயம் ஏற்பட்டு  கவனிக்காமல் விடப்பட்டால் அதன் வழியே இப்புழுக்கள் மற்றும் பாக்டீரியாக்கள் உட்புக ஏதுவாகிறது. இதற்கு இடமளித்தல் கூடாது.
இந்தத் திருகுப்புழுக்களை பிற புழுக்களிலிருந்து வேறுபடுத்திப் பார்ப்பதற்குத் தனி வழிமுறை ஏதுமில்லை. எனவே வித்தியாசமான, சந்தேகப்படும்படி ஏதேனும் புழுக்கள் தென்பட்டால் உடனே கால்நடை மருத்துவரை அணுகுதல் நலம்.

சிறு பூச்சிகள்


இவ்வகை பூச்சிகள் தோலின் மேல் அல்லது அடிப்புறத்தில் இருந்து உணவைப் பெறுகின்றன. இப்பூச்சிகள் கடிக்கும்போது உண்டாகும் புண்களிலிருந்தும் வழியும் நீர் உலர்ந்து கட்டிபோல் ஆகும். பூச்சியிலிருந்து சுரக்கும் விஷப்பொருட்களால் அரிப்பும், எரிச்சலும் ஏற்படுகின்றன. பாதிக்கப்பட்ட ஆடுகள் அடிக்கடி சொரிந்து கொள்ளும். இதன் பாதிப்பு எளிதில் பரவக்கூடியதாகையால், அனைத்து ஆடுகளுக்கும் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். முதல் பூச்சிக்கொல்லி பயன்படுத்திய 10 நாட்களில் மீண்டும் ஒருமுறை பயன்படுத்துதல் அவசியம்.

Itch mite
படம் 5. சிறு பூச்சிகள்

ஆடுகளில் சொரோப்டிக் காது பூச்சிகள் என்பவை உடல்களில் காணப்படுகிறது.

தெள்ளுப்பூச்சி


இவை இறகற்ற, சிறிய பூச்சிகள் 1.0-8.5மி.மீ. அளவு மட்டுமே உடை சிறு பூச்சிகள் இவை உடல்பகுதி பாகங்களில் தட்டையாக அமுக்கப்பட்டதுபோல் இருக்கும். பெரும்பாலான பூச்சிகள் ஆடுகளில் குறிப்பிட்ட காலம் வரை மட்டுமே, அதன் இரத்தத்தை உறிஞ்சுவதற்காக வாழ்கின்றன. இப்பூச்சிகளின் கால்கள் வலுவானவை. நன்கு வளர்ச்சியடைந்தவை. இவை 7-8 அங்குளம் அளவு தாவக்கூடியவை.

Sticktight flea
படம் 6. தெள்ளுப்பூச்சி

ஆடுகளின் காதுகள் மற்றும் முகத்தில் ஒருவகை தெள்ளுப்பூச்சிகள் காணப்படுகின்றன. இவை அவ்வினங்களில் 2லிருந்து 3வாரங்கள் வரை மட்டுமே இருக்கும். அச்சமயத்தில் இவை முட்டையிடும். அவ தரையில் விழுந்து புழுக்களாக வெளிவரும். தெள்ளுப்பூச்சிகள் அதிகளவு இருந்தால் தலை மற்றும் காதுகளில் புண்களை ஏற்படுத்தும். இத்தெள்ளுப்பூச்சிகள் பிறகால்நடைகளுக்கும் ஏன் மனிதனுக்கும் கூட எளிதில் பரவும்.
வெள்ளாடுகளில் புற ஒட்டுண்ணிக் கட்டுப்பாடு

கறவை ஆடுகளில் பூச்சிகளைக் கட்டுப்படுத்த ஒரு சில பூச்சிகளே பரிந்துரைக்கப்பட்டுள்ளன.
பூச்சிக்கொல்லி பயன்படுத்தும்போது கவனிக்க வேண்டியவை
  • பூச்சிக்கொல்லியை உபயோகிக்கும்முன், அதில் கொடுக்கப்பட்டுள்ள முன்னெச்சரிக்கைகளை படித்து தெரிந்துகொள்ள வேண்டும்.
  • ஒவ்வொரு முறைபயன்படுத்தும்போதும் பயன்படுத்தும் முறையைப் படித்து பின்புதான் செய்ய வேண்டும்.
  • பூச்சிக்கொல்லிகளைப் பயன்படுத்திய பின்பு அதை முறையாக தீவனங்களில் படாமல் பாதுகாப்பான இடத்தில் வைக்கவேண்டும்
  • குழந்தைகள், செல்லப்பிராணிகள், கால்நடைகளுக்கு எட்டாத இடத்தில் வைக்கவும்.
  • அதன் வரைமுறைப்படி பயன்படுத்தவேண்டும்
  • தீர்ந்துபோன டப்பாக்களை அகற்றி விட வேண்டும்
உணவு மற்றும் மருந்து நிர்வாகம் சில கால்நடைகளில் பால் மற்றும் மாமிசத்தில் பூச்சிக்கொல்லி எதிர்ப்புத்திறனை ஏற்படுத்தி உள்ளது. இவ்வகை பூச்சிக்கொல்லிகளைப் பயன்படுத்தும்போது பூச்சிகளை நன்கு கட்டுப்படுத்துவதோடு, கால்நடைகளுக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படுத்துவதில்லை.

பூச்சிக்கொல்லிகளைத் தகாத முறையில் பன்படுத்துவதால் அதன் விஷத்தன்மை பால் மற்றும் மாமிசங்களில் தங்கிவிட வாய்ப்புள்ளது. இவ்வகை பூச்சிக்கொல்லிகளைத் தவிர்த்துவிடுதல் வேண்டும். மேலும் இவற்றை சரியான தருணத்தில் பரிந்துரைக்கப்பட்ட அளவு மட்டுமே பயன்படுத்த வேண்டும். ஆடுகள் கால்நடைகளை விட அளவில் சிறியவை, எனவே அவற்றிற்கு குறைந்த அளவு பூச்சிக்கொல்லிகளே போதுமானது. தோல் மற்றும் மயிர்க்கால்களை நனைக்கும் அளவு தெளிப்பான் மூலம் அளிப்பதே சிறந்தது.

0 comments :

Post a Comment