Thursday, 31 October 2013


பால் உற்பத்திப் பராமரிப்பு :

பால் கறக்கும் முறைகள்
  • கையால் கறப்பது
  • இயந்திரம் கொண்டு கறப்பது
என்பதே பால் கறத்தலின் இரு முறைகள் ஆகும்.

கையினால் பால் கறத்தல்


பசுக்கள் இடப்பக்கத்திலிருந்தே பால் தரும் இயல்புடையது. நாம் பால் கறக்கும்போது முன்னிரு, பின்னிரு காம்புகளிலோ அல்லது பக்கங்களில் உள்ள காம்புகளிலோ இரண்டு கைகளையும் பயன்படுத்திக் கறக்கலாம். முதல் சில துளிகளை பாத்திரத்தில் விடாமல் பீய்ச்சிக் கீழே விட்டுவிடுதல் நல்லது. ஏனெனில் இவற்றில் பாக்டீரியாக்கல் அதிகம் உள்ளது. கையில் கறக்கும் போது இரு முறைகளைப் பயன்படுத்தலாம்.
cattle_handmilking
இரு விரல்களை உபயோகித்தல்
இம்முறையில் கட்டை விரலுக்கும், ஆள்காட்டி / நடுவிரலுக்கும் இடையில் காம்புகளைப் பிடித்து சிறிது அழுத்தம் கொடுத்துக் கீழே இழுப்பதன் மூலம் பால் கறக்க முடியும்.
முழு விரல்களை உபயோகித்தல்
ஒரு கை விரல்களால் காம்பினைப்படித்து உள்ளங்கையின் மீது அழுத்துவதால் பால் கறக்க முடியும். இம்முறை கன்று ஊட்டுவது போல் எல்லாப்பங்கங்களிலும் ஒரே அளவான அழுத்தத்தை ஏற்படுத்தும்.
ஆனால் இருவிரல் முறையிலோ ஒரே அளவான அழுத்தம் கிடையாது. மேலும் காம்பின் மேல்பாகம் பாதிக்கப்பட்டு சிறு காயங்கள் ஏற்பட வாய்ப்புண்டு. எனவே காம்புகள் மிகச்சிறியனவாக இருந்தால் தவிர இருவிரல் முறையைத் தவிர்ப்பதே நல்லது.

இயந்திரம் கொண்டு கறத்தல்


முறையாகப் பொருத்தி சரியாகப் பயன்படுத்தினால் இவ்வியந்திரம் அதிக பாலை எளிதில் காம்பில் வளியின்றி கறக்கும் தன்மை கொண்டது. இது இரு வேலைகளைச் செய்கிறது.
cattle_machinemilking
  • இது ஒரு பகுதி வெற்றிடத்தை ஏற்படுத்தி இதன் பாதை வழியே பாலை சுரக்கச் செய்து பாத்திரத்தில் சேர்க்கிறது.
  • இது இரத்தம், நாளங்கள் (lymph) உடன் கலப்பதைத் தடுத்து மடியின் காம்பை மசாஜ் (massage) செய்கிறது.
பயன்கள்
  • குறைந்த நேரத்தில் (1.5லி - 2.0லி நிமிடத்திற்கு) அதிக பால் கறக்க முடியும்
  • கையாள்வது எளிது விலை குறைவு, சுகாதாரமான முறை
  • மின்சாரம் தேவைப்பட்டதால் ஆற்றலை சேமிக்க முடியும்
  • மடியிலிருக்கும் எல்லா பாலையும் எந்த வலியுமின்றி எளிதில் கறந்து விடுகிறது
(ஆதாரம்: டாக்டர்.சி.பால் பிரின்ஸ்ஸி ராஜ்குமார், வே.க, மதுரை)

சுத்தமான பால் உற்பத்தி


தூசி, அழுக்கு, மற்ற கிருமிகள் கலந்த பால் அசுத்தமான பாலாகும். பாலானது, பசுவின் மடி அழுக்கு, உடல் ரோமங்கள், பால் கறக்கும் இடம், பாத்திரங்கள், ஈக்கள், கறப்பவர் போன்றவற்றால் அசுத்தமடைகிறது.

மடி


சுகாதாரமற்ற படுக்கைகள், பாழிடம் போன்றவற்றால் பசுவின் மடி அசுத்தமடைகிறது. மேலும் பாக்டீரியாக்கள் பசுவின் காம்புத்துளை வழியே உட்செல்கின்றன. இவ்வாறு பாக்டீரியாக்கள் கலந்த பால் அசுத்தமானதாகும். இது பல்வேறு வியாதிகளை அருந்துபவர்க்கு உண்டாக்குகிறது. மேலும் கறக்காமல் மடியிலேயே விடப்பட்ட பாலும் மடியினை பாதிக்கிறது.

பசுவின் உடல்


பசுவின் உடலில் மாசுக்கள், பால் கறக்கும்போது பாலில் கலந்து விட வாய்ப்புண்டு. எப்போதும் மாட்டைக்கழுவி சுத்தமாக வைக்க வேண்டும். உரோமங்கள் சானினளை அவ்வப்போது அகற்றிவிட வேண்டும்.

பால் கறக்கும் இடம்


பால் கறக்கும் இடம் நன்கு கழுவி சுத்தாமாய் இருத்தல் வேண்டும். பால் கறக்க முற்படுவதற்கு முன், கொட்டகையைக் கூட்டுதல், மாடுகளைத் தேய்த்தல், காய்ந்த தீவன வகைகளைக் கொடுத்தலால் கொட்டகைக் காற்று அசுத்தமடைந்து பாலில் சேர வாய்ப்புண்டு. எனவே இச்செயல்களைப் பால் கறக்க முன்பு செய்தல் கூடாது.

ஈக்கள் மற்றும் பிற வெர்மின்கள்


ஈ, கொசு, பேண் போன்ற புற ஒட்டுண்ணிகள் பாலில் ஒட்டுவதால் அதை அசுத்தமாக்குகிறது. மருந்துகள் தெளிப்பதன் மூலமோ, பொறிகள் மூலமோ இவைகளை அழிக்கலாம். மேலும் நீர்த்தேக்கங்களை அகற்றி இதன் பெருக்கத்தைத் தடுக்கலாம்.

பால் கறப்பவர்


பால் கறப்பவர் காசநோய், டைஃபாய’டு, டிப்தீரியா போன்ற வியாதிகளால் பாதிக்கப்பட்டிருந்தால் அவர் தும்முவதாலும், பேசுவதாலும், அவர் உடலில் கிருமிகள் பாலில் சேர வாய்ப்புண்டு. பால் கறப்பவரின் கைகள், உடைகள் சுத்தமாக இருக்க வேண்டும். பால் கறக்கும் முன்பு நகங்களை வெட்டி நன்கு கழுவி சுத்தமான துணியில் துடைத்துவிட்டு கறப்பது சிறந்தது.

பாத்திரங்கள்


பாத்திரங்கள் மூலமாக அதிக அசுத்தங்கள் சேருகின்றன. பாலை கறப்பதற்கும் சேகரிக்கவும், உபயோகப் படுத்தும் பாத்திங்களின் மடிப்பு, விளிம்பு, பள்ளங்கள் இல்லாமல் சுத்தம் செய்ய எளிதாக இருத்தல் வேண்டும். அயோட்போர் போன்ற இரசாயனக் கலவை மூலம் பாத்திரத்தைச் சுத்தம் செய்யலாம்.

கறக்கும் முறை


ஈரமான கையால் பால் கறக்கும்போது மடி கடினமாக இருப்பதுபோல் தோன்றும் எனவே அதிக அழுத்தம் தேவைப்படுவதால் காம்பில் வலி புண் ஏற்படும். எனவே ஈர கையினால் பால் கறத்தல் கூடாது. பாக்டீரியா தொற்றை பாலை அசுத்தப் படுத்தும். மக்கியக் காரணம் எனவே மேற்கொண்ட முறைகளை முறையாகக் கையாளுதல் சுத்தமான பால் உற்பத்திக்கு உதவும்.

சுத்தமான பால் உற்பத்திக்கான முறைகள்
  • பால் கறக்கும் முன்பு மாடுகளை நன்கு கழுவ வேண்டும். அதுவே பாக்டீரியாக்களைக் குறைக்க சிறந்த வழி
  • கன்று பால் ஊட்டியபின் காம்புகள் ஈரமாக இருக்கும். ஏதேனும் தொற்று நீக்கி கொண்டு கழுவி, தூய நீரினால் கழுவி பின் சுத்தமான துணியில் துடைத்தல் நலம்
  • பால் கறப்பவரின் கைகள் சுத்தமாக இருத்தல் அவசியம்
  • கறப்பவருக்கு எந்த நோயும் இருத்தல் கூடாது. நகங்கள் வெட்டப்பட்டு தூயதாக இருக்க வேண்டும்
  • நெல்உமி போன்ற தூசியான தீவனங்களை பால் கறக்கும் தருணங்களில் அளித்தல் கூடாது
  • பால் கறக்கும் இடம் ஈ, கொசு இல்லாமல் நல்ல காற்றுடன் இருக்க வேண்டும்.
  • வாசனையுள்ள தீவனங்கள் பால் கறந்த பின்பே பசுக்களுக்கு அளிக்கப்பட வேண்டும் அப்போதுதான் அந்த வாடை பாலில் கலவாமல் இருக்கும்
  • கறந்த பாரை குளிர்ந்த இடத்தில் வைத்துப் பாதுகாக்க வேண்டும்.
  • பால் பாத்திரத்தில் உள்ள பாலை கறந்து முடித்தவுடன் மூடி வைக்க வேண்டும்
  • 200000 எண்ணிக்கையுள்ள பச்சை பால் தூய பச்சைப் பால் எனப்படுவது.
(ஆதாரம்: http://bieap.gov.in/DairyAnimalManagementTheory.pdf)

சுகாதாரமான பால்


சுத்தமான பால் உற்பத்திக்கு பசுவையம் மடியையும் சுத்தமாக வைக்க வேண்டும். பால் கறக்கும் போதும் கறந்த பின்புமே மாசுபடுகிறது. சரியான பராமரிப்பு முறைகளை மேற்கொண்டு பால் மாசுபடுவதைத் தவிர்க்கலாம். கண்ணுக்குத் தெரியும் மடியில் உள்ள மாசுக்களை நீரில் கழுவி சத்தப்படுத்தலாம். கழுவிய பின்பு தூய துணியினால் மடியை துடைக்க வேண்டும்.

மேலும் பாலை கறத்தல், சேமித்தல் பதப்படுத்தலின் போது தேவையான முறைகளைக் கையாள வேண்டும். பாலானது பாக்டீரியா, ஈஸ்ட் மற்றும் பூஞ்சைகளுக்கு நல்ல வளர்தளம் ஆகையால் பாலை மிதமான வெப்பநிலையில் வைக்க வேண்டும். இல்லாவிடில் இவை எளிதில் வளர்த்துவிடும்.

மடி வீக்கம்

பொதுவாக பாலை கெட்டபிறகு சரிசெய்தல் இயலாது. எனவே கெடாமல் இருக்கத் தேவையான எல்லா முயற்சிகளையும் செய்தல் நலம் இல்லையெனில் அது பொருளாதார அளவில் பெரிய பாதிப்பை ஏற்படுத்தும். மடிய எந்தத் தொற்றும் ஏற்படாவண்ணம் பாதுகாத்தல் வேண்டும். பாலின் பாக்டீரியா எண்ணிக்கையானது 50000 /மிலி என்றளவு இருக்குமாறு பதப்படுத்தும் முறைகள் மூலம் செய்தல் நலம்.
cattle_udderinfection
மடி வீக்கம்

மடிவீங்குவதை முற்றிலும் தடுக்க முடியாது. எனினும் ஒரு அளவுள்ள வைத்திருக்க வேண்டும். சாராதண அளவு மடியில் பாக்டீரியா எண்ணிக்கை 50000 /மிலி தாண்டாது. ஆனால் இது மிக அதிகமாக சுகாதார நிலையைத் தாண்டும்போது பாக்டீரியா எண்ணிக்கை ஒரு மில்லியனைத் தாண்டிவிடும். பின்பு அதிலிருந்து பெறப்படும் பால் முழுவதும் தூய்மையற்றதாகிறது. எனவே மடி வீக்கம் சுகாதார அளவைத் தாண்டும் முன்பே கவனித்தல் நலம்.

பிற பராமரிப்பு முறைகள்


மடியை சுத்தப்படுத்த நீரை, பயன்படுத்திய பின்பு அதை நல்ல சுத்தமான துணியினால் துடைத்தல் வேண்டும். அவ்வாறு துணி பயன்படுத்தினால் ஒவ்வொரு மாட்டிற்கும் தனினத்தனி துணியைப் பயன்படுத்த வேண்டும். அதை எளிதில் பயன்படுத்தித் தூக்கி எறியக்கூடிய காகிதங்களைப் பயன்படுத்துதல் சிறந்தது. துணியை பயன்படுத்தியவுடன் ஒவ்வொரு முனையும் நன்கு துவைத்து சோடியம் ஹைப்போ குளோரைட் 300ppm போன்ற தொற்று நீக்கியை உபயோகப் படுத்த வேண்டும் எப்போதும் மடியை கழுவியவுடன் அதை உலரவைத்தல் வேண்டும்.

சுத்தமான பால் உற்பத்தி இயந்திரம்


நீரின் தன்மை


நல்ல அங்கீகரிக்கப்பட்ட குழாய்களின் மூலம் வழங்கப்படவில்லை எனில் அந்த நீர் தூயநீராக இருக்காது. அதில் ஹைப்போ குளோரைட் போன்றவை 50ppm அளவில் கலந்திருக்கும். கடின நீரானது அதனால் சுத்தம் செய்யப்பட்ட பொருட்களில் பல உப்புக்களை (கால்சியம் போன்ற) படியச் செய்யும். எனவே இவ்வாறு சுத்தம் செய்யப்பட்ட எந்தப் பொருளும் தூய்மையானதாக இருக்காது. இவ்வாறு இருக்கும் நீரில் சல்பியூரிக் அல்லது பாஸ்பாரிக் அமிலம் மூலம் சுத்தப்படுத்தலாம்.

சோப்புகள் மற்றும் தொற்று நீக்கிகள்


சோப்புகள் மாசை நீக்கி, ஈரப்பதத்தை அதிகப்படுத்தி பாலின் புரதத்தை கரைப்பதையும். கொழுப்புச் சத்து குறைவதையும் தடுக்கிறது. சோப்புகளின் திறன் வெப்ப நிலை, பயன்படுத்தும் அடர்வு மற்றும் நேரத்தைப் பொறுத்து மாறுபடுகிறது. கனிமப் பொருட்கள் கொண்ட சோப்புகளான சோடியம் கார்பனேட், சிலிகேட் மற்றும் டிரை சோடியம் பாஸ்பேட் போன்ற வினைக்காரணிகள், நீரின் கடினத்தன்மையைப் போக்கவும் சில பாலிபாஸ்பேட் மற்றும் உப்புகள் பயன்படுகின்றன. பல இதற்காக வென தயாரிக்கப்பட்ட சோப்புகள் உள்ளன அல்லது 0.25% சலவை சோடா 0.05% பாலிபாஸ்பேட் பயன்படுத்தலாம். தொற்று நீக்கிகள் மீதமுள்ள பாக்டீரியாவை அழிக்கப் பயன்படுகிறது. இதற்காக சுடுநீர் அல்லது இரசாயனங்களைப் பயன்படுத்தலாம். இந்த சூடானது பாத்திரங்களின் இடுக்குகளில் சென்று சுத்தம் செய்கிறது. இரசாயன பொருட்களும் இவ்வாறு சுத்தம் செய்யும் எனினும் இந்த சுடு நீரளவு திறனுடையது அல்ல சுடுதண்ணீர் உபயோகிக்கும்போது 85டிகிரி செல்சியஸ்க்கு குறையாமல் வெப்பம் இருக்க வேண்டும். அப்போது தான் 77டிகிரி செல்சியஸ் வெப்பம் 2 நிமிடங்கள் பாத்திரத்தில் இருந்து கிருமிகளைக் கொல்லும்.

பண்ணையில் இரசாயனப் பொருட்களைப் பயன்படுத்தும்போது மிக எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இதை சரியான அளவு அடர்த்தியில் விதிமுறைப்படி உபயோகப்படுத்த வேண்டும். எக்காரணம் கொண்டும் பயன்படுத்துபவர் அல்லது கால்நடைகளின் கண்ணிலோ தோலிலோ படுமாறு உபயோகிக்கக் கூடாது. குழந்தைகளுக்கு எட்டாமல் மிதமான வெப்பநிலையில் வைத்தல் வேண்டும். அதனுடன் நீரோ வேறு பொருட்களோ கலந்து விடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். இதைப் பயன்படுத்தி பாத்திரங்கள் மடிதுடைக்கும் துணிகள் குளிர்விப்பான்கள் போன்றவற்றைச் சுத்தம் செய்யலாம்.

தேவையான உபகரணங்கள்


பால் கறக்கும் இடத்தில் தூய இடம், குழாயில் வழங்கும் குளிர்ந்த மற்றும் வெந்நீர் தனித்தனியே அலசும் தொட்டி, பிரஷ் நல்ல தரை, சேமிப்பு அறைகள் தேவைப்படின் வெற்றிடக்குழாய் வசதியும் அளிக்கலாம். அதோடு ஒரு (தெர்மா மீடடர்) வெப்பநிலை மானி (0டிகிரி - 100 டிகிரி செ) இரப்பர் உறைகள் போன்றவையும் வைத்து பயன்படுத்துதல் நலம்.

தினசரி பின்பற்ற வேண்டியவை


தொற்று நீக்கிகளை தேவைக்கேற்ப நாம் பயன்படுத்தலாம். ஆனால் தினசரி பால் சுத்தமானதாக இருக்க வேண்டும். கறக்கும் முறைகளில் கைகளால் கறக்கும்போது குறுகிய வாய்ப்பகுதியும் அகண்ட உள்பகுதியும் இருக்குமாறு உள்ள பாத்திரங்களையும் இயந்திரம் கொண்டு கறக்கும்போது மூடிய (கேன்) வாயுடன் கூடிய பாத்திரங்களையும் பயன்படுத்தலாம். ஆனால் எதுவாயினும் எப்போதும் நன்கு கழுவி சுத்தமாகப் பராமரிக்கப்பட வேண்டும்.

பால் கறக்கப் பயன்படுத்தும் பாத்திரங்கள் மூலம் பாக்டீரியாக்கல் நிறையப் பெருக வாய்ப்புள்ளது. குளிர்விப்பான்கள் மற்றும் பெரிய பால் சேமிக்கும் கேன்கள். சாதாரண முறையில் குளிர்ந்த / வெப்பமான தொற்றுநீக்கிகள் மூலமாகவோ சில தானியங்கி இயந்திரம் மூலமாகவோ சுத்தப்படுத்தலாம். எந்த முறையாகினும் குளோரின் கலந்து குளிர்ந்த 50 ppm நீரில் அலசி பின்பு இதர கரைசல்களை உபயோகிக்கலாம். கழுவிய பின்பு ஈரம் போகுமளவு உலர வைத்தல் அவசியம்.

காலை, மாலை இருவேலையும் பால் கறக்கும் முன்பு பாத்திரங்கள் நன்கு கழுவி உலரவைக்கப்பட்டிருக்க வேண்டும். உலர்ந்த ஈரமற்ற பாத்திரத்தில் பாக்டீரியா வளர இயலாது. அதுவே சிறிது ஈரப்பதம் இருப்பினும் மிதமான வெப்ப நிலையில் நன்கு வளரும். அதேபோல் பாத்திரங்களில் நிறைய பள்ளங்கள் விளிம்புகள் இருந்தால் அவற்றில் நிறைய கிருமிகள் படிந்து வளர்வதற்குச் சாதகமாக அமைந்து விடுகிறது. எனவே பாலை கறப்பதற்கும் சேகரிக்கவும் உபயோகப் படுத்தப்படும். எனவே கறப்பதற்கும் சேகரிக்கவும் உபயோகப்படுத்தப்படும் பாத்திரங்கள் அதிக மடிப்பு, விளிம்பு, பள்ளங்கள் இல்லாமல் ஒரே சீரான அமைப்புள்ளதாக இருத்தல் வேண்டும். இதனால் சுத்தம் செய்வது எளிதாக இருக்கும்.

0 comments :

Post a Comment