Thursday, 31 October 2013


கொல்லைப்புற கோழி வளர்ப்பு:

 
எல்லாக்  கோழிப் பண்ணைகளுக்கும் இந்தியாவின் கொல்லைப்புற கோழி வளர்ப்பே முன்னுதாரணமாகத் திகழ்கிறது. இது கொல்லைப்புற முறையில கலிங்கா ப்ரெளன், மும்பை தேசி, ரோட் ஐலேன் ரெட், காரி நிர்பீக் போன்ற இனங்களைப் பயன்படுத்தலாம். கொல்லைப்புற வளர்ப்பு முறையில் பல வகை உண்டு. இடவசதி போதுமானதாக இருந்தாலும், தீவனப் பராமரிப்பு முறையாக இருப்பதில்லை. மேலும் அதிக உற்பத்தித் திறனுக்கு அயல் நாட்டு இரகங்களை உள்ளூர் இனங்களுடன் கலந்து விடலாம். கீழ்க்கண்ட வழிமுறைகளைப்  பின்பற்றுவதன் மூலம் கொல்லைப்புறத்தில் கோழிகளை சிறந்த முறையில் வளர்க்கலாம்.
Backyard Poultry
  • அயல்நாட்டு இனங்களை கொல்லைப்புறத்தில் நம்நாட்டு இனங்களுடன் கலந்து விடலாம்.
  • கிராமலட்சுமி, கிராமப்பிரியா போன்ற கலப்பினங்களை வளர்க்கலாம்.
  • இரவுக் கோழிகள் அடையும் இடத்தில் சரியான காற்றோட்டம் இருக்கும்படி அமைத்தல்.
  • சரியான நேரத்தில் குடற்புழு நீக்க மருந்து மற்றும் தடுப்பூசிகளை அளித்தல்.
  • கழிவுகளை மட்டுமே தீவனமாகத் தின்னக் கொடுக்காமல் சிறிது சிரிவிகித கலப்புத் தீவனமும் வழங்குதல் அவசியம்.
  • ஒரு சரியான அளவில் தயாரிக்கப்பட்ட கலவையை கொல்லைப்புற கோழிகளுக்கு 50 சதவிகிதம் அளவு கொடுத்தால் நல்ல முட்டை மற்றும் இறைச்சி உற்பத்தி இருக்கும்.
கொல்லைப்புற கோழி வளர்ப்பிற்குப் பயன்படுத்தும் அடர்தீவனக் கலவை

பொருட்கள்
கலவை 1 (சதவிகிதம்)
கலவை 11 (சதவிகிதம்)
கடலைப்புண்ணாக்கு
52
60
எள்ளுப் புண்ணாக்கு
20
-
உப்பின்றி உலர்த்திய மீன் (கருவாடு)
20
32
அரிசி / கோதுமை / மரவள்ளிக்கிழங்கு குருணை
4
4
கோழிகளுக்கான தாதுக்கள்
4
4
மொத்தம்
100
100
(ஆதாரம்:www.vuatherbal.org)

0 comments :

Post a Comment