Thursday, 31 October 2013






கோழிக்குஞ்சு பராமரிப்பு:

 
புதிதாக பொரிக்கப்பட்ட அல்லது வாங்கப்பட்ட குஞ்சுகளின் பராமரிப்பு
  • குஞ்சுகளை வெளியிலிருந்து வாங்கும் போது முன்கூட்டியே கொட்டகைகளைத் தயார் செய்து விடவேண்டும்.
  • குஞ்சுகள் வந்தவுடன் வாகனத்தை உள்ளே செல்ல அனுமதிக்காமல் நுழைவாயிலேயே நிறுத்தி குஞ்சுகளை எடுத்துக் கொள்ளுதல் நலம்.
  • கொதிக்க வைத்து ஆற வைக்கப்பட்ட தண்ணீர் தயாராக இருக்கவேண்டும். 8 கிராம் குளுக்கோஸ், 0.51 எதிர் உயிர்ப்பொருள் அல்லது பாக்டீரிய எதிர்ப்பொருளை ஒரு லிட்டர் நீரில் கலந்து எலக்ரோலைட் விட்டமின் கலவை போன்றவற்றையும் சிறிதளவு சேர்த்து முதல் நாள் குஞ்சுகளுக்குக் குடிக்கக் கொடுக்கவேண்டும்.
  • எதிர்ப்பொருள்களும், விட்டமின்களும் 3-5 நாட்களுக்கு தொடரலாம்.
  • வெப்பக் கூட்டினுள் குஞ்சுகளை அனுப்புமுன் மருந்து கலந்த நீரை அளிக்கவேண்டும்.
  • ஏதேனும் விரிப்பைப் போட்டு அதில் சிறிது தீனியைப் போட்டு குஞ்சுகளை பொறுக்கவிடுவேண்டும். அப்போது குஞ்சுகள் ஒவ்வொன்றும் சரியான அளவு 40-48 கிராம் எடை இருக்கிறதா என்பதைக் கவனித்துக் கொள்ளவேண்டும்.
  • குஞ்சுகளை எண்ணிக் கொள்ளவேண்டும். அவற்றின் அலகை நீரில் நனைத்துப் பின் வெப்ப அடைப்பானுக்குள் விடவேண்டும்.
  • குஞ்சுகள் சுறுசுறுப்புடன் நல்ல ஆரோக்கியமாக தீவனம் எடுக்கிறதா என்பதை அடிக்கடிப் பார்த்துக் கொள்ளவேண்டும்.
  • ஆரோக்கியமற்ற, சரியான தீவனம் உட்கொள்ளாத, குறைபாடு உடையக் குஞ்சுகளை வாங்கியவரிடம் தந்து விட்டு அவற்றுக்குப் பதில் புதிய குஞ்சுகளை வாங்கிக் கொள்ளவேண்டும்.
  • சீமெண்ணெய் அல்லது நிலக்கரி அடுப்பில் பாத்திரம் வைத்து அதில் மணல் போட்டு சூடாக்கி அதக் கூண்டிற்குள் பரப்புவதன் மூலமும் வெப்பத்தை உருவாக்கலாம்.
  • சூடான சுருள் மூலமாகவும் வெப்பத்தை வழங்கலாம். கோழிக்குஞ்சுகளுக்கு எட்டாமல் சற்று உயரத்தில் வைக்கவேண்டும்.
  • குஞ்சுகளுக்கு அளிக்கப்பட்டுள்ள வெப்பம் போதுமானதா என்று அவ்வப்போது சரி பார்த்துக் கொள்ளவேண்டும். முதல் வாரத்தில் 35 டிகிரி செல்சியஸ் அளவு வெப்பம் அளிக்கப்படவேண்டும். வாரத்தில் 35 டிகிரி செல்சியஸ் அளவு வெப்பம் அளிக்கப்படவேண்டும். பின்பு வாரத்திற்கு 5 டிகிரி செல்சியஸ் எனக் குறைத்துக் கொள்ளலாம்.
  • ஒரு தெர்மாமீட்டரை கூண்டுக்குள் பொருத்தி வைப்பதன் மூலம் வெப்பத்தை சரிபார்த்துக் கொள்ளலாம்.
  • குஞ்சுகளை வெப்பக்கூண்டிற்குள் அவ்வப்போது மேற்பார்வையிடவேண்டும். அவை விளக்குகளுக்கு அருகாமையில்  ஒன்றையொன்று நெருக்கிக் கொண்டு இருந்தால் அளிக்கப்பட்ட வெப்பம் போதுமானதாக இல்லை என்று அர்த்தம். மேலும் விளக்குகளைப் பொருத்தவேண்டும்.
  • குஞ்சுகள் விளக்கு எல்லையை விட்டுத் தள்ளிச் சென்றால் வெப்பம் அதிகமாக இருக்கலாம். எனவே வெப்பக் கூண்டைப் பரிசோதித்து வெப்பம் அதிகமாக இருந்தால் விளக்குகளை நீக்கலாம் அல்லது சற்று உயர்த்தி வைக்கலாம்.
  • கொடுக்கப்பட்ட வெப்பநிலை சரியாக இருந்தால் குஞ்சுகள் சுறுசுறுப்பாக அங்குமிங்கும் நகர்ந்து தீவனமுன்னும்.
  •  மேலும் சில குஞ்சுகள் தலையை ஒரு புறம் சாயத்துக் கொண்டு ஓய்வு எடுக்கும். இவ்வாறு இருந்தால் அது நல்ல ஆரோக்கியமான சூழ்நிலை எனத் தெரிந்து கொள்ளலாம்.
  • ஆரம்பத்தில் வெளிச்சமானது 22 மணி நேரம் விளக்கு எரியவிடப்படும். இரவில் ஒரு அல்லது அரை மணி நேரம் மட்டுமே அணைக்கப்படுகிறது. பிறகு 3வது வாரத்தில் இரவில் மட்டுமே விளக்குகள் எரியவிடப்படுகின்றன. கோடைக்காலமாக இருந்தால் 1 வாரமும் குளிர்க்காலங்களில் 3 வாரம் வரையிலும் நீட்டிக்கப்படும்.
poultry_chicks
புதிதாக பொரிக்கப்பட்ட குஞ்சுகள்
(ஆதாரம்: டாக்டர். பால்பிரின்ஸ்லி ராஜ்குமார்வேளாண் கல்லூரி, மதுரை.)

வளரும் குஞ்சுகள் பராமரிப்பு
6 வார வயதிற்குப் பின் செயற்கை வெப்பமும் வெப்பக்கூடுகளையும் நீக்கி விடலாம். பயன்படாத குஞ்சுகளை நீக்கி விடவேண்டும். ஒரு குஞ்சுக்கு 0.095-0.19 மீ 2 என்ற அளவு இடவசதி இருக்கவேண்டும். 8 வார வயதில் இருந்து வளரும் கோழிகளுக்கு கலப்புத் தீவனம் அளிக்கவேண்டும். கலப்புத் தீவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டிய முக்கிய (பொருட்கள்) தீவனங்களாவன.
தீவனப் பொருட்கள்
அளவு (சதவிகிதம்)
மஞ்சள் சோளம்
43
கடலைப்புண்ணாக்கு
8
எள்ளுப் புண்ணாக்கு
5
மீன் துகள் உப்பின்றி உலர்த்தப்பட்ட மீன்
6
அரிசி (பாலிஸ் செய்யப்பட்டது)
16
கோதுமைத் தவிடு
20
உப்பு
0.25
தாதுக் கலவை
1.75
மொத்தம்
100.00
வளரும் முட்டைக்கோழிகளின் சராசரி உணவுத் தேவை

வயது (வாரங்களில்)
உணவுத் தேவை (கிராம் / கோழி / நாள்)
10
53.0
11
58.0
12
60
13
60
14
60
15
62
16
62
17
65
18
70
19
75
20
75
நீர் மற்றும் தீவனம்
தீவனத் தொட்டிகள் அதிக எண்ணிக்கையிலும், தரையிலிருந்து சற்று உயரத்திலும் வைக்கவேண்டும். வளரும் குஞ்சுகளுக்கான தீவனத் தொட்டி 10 செ.மீ உயரத்தில் வைக்கவேண்டும். குழாய் முறையில் அளிப்பதாக இருந்தால் 25 கிலோ  எடையுள்ள 50 குஞ்சுகளுக்கு ஒரு குழாய் என்ற அளவில் வழங்கலாம். தண்ணீர் எந்த நேரமும் கிடைக்கும்படி இருக்கவேண்டும். 2.25 செ.மீ ஒரு குஞ்சுக்கு என்ற வீதத்தில் நீர் அளிக்கவேண்டும்.
poultry chicks feeding
நீர் மற்றும் தீவனம்
நோய்க்கட்டுப்பாடு
பரிந்துரைக்கப்பட்ட அட்டவணைப்படி தடுப்பூசிகளும், குடற்புழுநீக்க மருந்துகளும் அளிக்கவேண்டும்.
அலகு நீக்கம் செய்தல்
அலகை நீக்குவதால் தீவன விரயம் மற்றும் தன் இனத்தைத்  தானே உண்ணுதல் போன்ற பிரச்சனைகளைத் தடுக்கலாம். மின்சார அலகு நீக்கி கொண்டு நீக்குவது நல்லது. மேல் அலகில் மூன்றில் ஒருபங்கும் கீடை அலகில் சிறிதளவு மட்டும் நீக்கவேண்டும். இது குஞ்சு பொரித்து, ஒரு வாரக் காலத்திற்குள் செய்து விடவேண்டும். மீண்டும் ஒரு முறை முட்டியிடுவதற்கு முட்டையிடும் கூண்டிற்குள் விடுமுன் 16 வார வயதில் அலகு நீக்கம் செய்யவேண்டும். கொல்லைப்புற முறையில் வளர்க்கப்படும் கோழிகளுக்கு அலகு நீக்கம் செய்தல் கூடாது. நன்கு தெரிந்த பயிற்சி பெற்ற ஒருவர் மட்டுமே இதைச் செய்யவேண்டும்.
poultry_debeaking
அலகு நீக்கம்
கொண்டை நீக்கம்
கொண்டையானது தொங்கிக் கொண்டோ, பெரியதாகவோ இருக்கும் இனமாக இருந்தால் ஒரு நாள் வயதிற்குள் கொண்டை நீக்கம் செய்து விடவேண்டும்.

ஒளி
முட்டை உற்பத்திக்கென வளர்க்கப்படும் கோழிகளுக்கு இரவில் வெளிச்சம் தேவைப்படுவதில்லை.

(ஆதாரம் : www.vuatkerala.org)

0 comments :

Post a Comment