Thursday, 31 October 2013

பால் கறக்கும் இயந்திரம்:நவீன பால் கறக்கும் இயந்திரத்தின் மூலம் விரைவாகவும் திறமையாகவும் கறக்கலாம். முறையாகப் பொருத்த சரியாக பயன்படுத்தினால் மடியில் காயம் ஏதுமின்றி குறைந்த நேரத்தில் அதிக பல் கறக்கலாம். பால் கறக்கும் இயந்திரம் இரண்டு முக்கிய செயல்களைச் செய்கிறது.

இது பகுதி வெற்றிடத்தைப் பயன்படத்தி சிறிய கோடு போன்ற கால்வாய்வழியே, காம்பிலிருந்து பாலை சுரக்கச் செய்து, சேகரிக்கும் பாத்திரத்தில் சேர்த்துவிடுகிறது.
மேலும் இது காம்புகளை மசாஜ் செய்வதால் பால் மற்றும் இரத்தம் ஒரிடத்தில் குவியாமல் சீராகப் பரவியிருக்கச் செய்கிறது.


பயன்கள்

இதன் பயன்பாடு எளிது எளிதாக எங்கு வேண்டுமானாலும் எடுத்துச் செல்லலாம். விலை குறைவு, நேர விரயம் குறைக்கப்படுகிறது. ஏனெனில் இவ்வியந்திரம் நிமிடத்திற்க 1.5 லிருந்து 2 லிட்டர் வரை கறைக்கிறது. மேலும் இது சுகாதாரமான முறையாகும். அதிக அளவில் மின் சாரத்தைப் பயன்படுத்துவதில்லை. கையாள்வது எளிது மடியில் உள்ள பால் முழுவதையும் கறக்கக்கூடியது. அதோடு இவ்வியந்திரத்தில் கறக்கும்போது கன்று ஊட்டுவதைப் போலவே இருப்பதோடு வலியும் ஏற்படுத்துவதில்லை. பால் வீணாகாமல் தடுக்கப்படுகிறது.

பால் கறக்கும் இயந்திரம் என்பது


கன்று ஊட்டுவதைப் போன்ற செயல்முறை
மாடுகளுக்கான காம்பில் கருவியின் அளவீடு 352 மி.மீ. மெர்குரி
எருமைகளுக்கு 400 மி.மீ. மெர்குரி
பால் கறக்கும் இயந்திர பயன்பாடு பற்றிய  வீடியோ (குறும்படம்)
எருமையில் பால் கறக்கும் இயந்திரம்
 • மாட்டுடன் ஒப்பிடும் போது எருமையில் காம்புகள் சற்று வித்தியாசமானவை. எனவே எருமையில் பால் கறக்க கொத்தாக உள்ள அதிக விசையுடன் கூடிய இயந்திரம் தேவை. இதன் எடை அதிகம். இந்தியாவில் இதன் தொகுப்பு எடையைக் குறைக்க ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
 • அதன் தொகுப்பு எடை மட்டுமல்லாமல் ஒவ்வொரு காம்பிலும் செயல்படும். எடை மற்றும் அழுத்த அளவு ஒரே அளவாக இருக்கவேண்டும். அப்போது தான் கறக்கும் பாலின் அளவு சீராக இருக்கும். எனவே காம்புகளில் பொருத்தும் போது எல்லாவற்றிலும் எடை மற்றும் பிடிப்பு சரியாக உள்ளதா என்று பார்த்துக் கொள்ளவேண்டும்.
 • பால் இயந்திரத்தின் கடிக்கும் திறன், அதன் வெற்றிட அளவு மற்றும் துடிப்பு அளவைப் பொறுத்தது. எகிப்தியன் எருமைகளில் நடத்திய ஆய்வின்படி 51 கிலோ பாஸ்கல் வெற்றிடமும், ஒரு நிமிடத்திற்கு 55 சுற்று துடிப்புகள் என்ற அளவு 56 கி பாஸ்கல், நிமிடத்திற்கு 65 சுற்று துடிப்புகள் என்ற அளவை விட குறைவாகவே பால் தருகிறது என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.  மேற்கண்ட ஆய்வுகள் 50:50 துடிப்பு வைத்து மேற்கொள்ளப்பட்டன.
 • இத்தாலி நாட்டில் எருமை மற்றும் மாடு இரண்டிற்கும் ஒரே இயந்திரத்தைப் பால் கறக்கப் பயன்படுத்துகின்றனர். இது ஒரு வெற்றிடம், 40 செ.மீ மெர்க்குரி கொண்ட எளிய மாட்டில் பால் பீய்ச்சும் இயந்திரம் ஆகும்.
 • இந்தியாவில் ஆல்ஃபா லாவல் அக்ரி (Alfa Laval Agri) டியூவாக் மூலம் சில ஆய்வுகள் மேற்கொள்ளப்படுகின்றன. வெற்றிட அளவு 55 கி பாஸ்கல், 70 சுற்றுக்கள் நிமிடத்திற்கு என்ற அளவில் துடிப்பு 65:35 விகிதமும் நல்ல பால் உற்பத்தி கிடைப்பதாகக் கூறப்பட்டுள்ளன. இதில் கறக்கும் பாலின் அளவு நிமிடத்திற்கு 0.2 கி.கி ஆகும்.
 • மேலும் இயந்திரத்தைப் பயன்படுத்தும் போது அது எருமைக்கும் பயன்படுத்துபவருக்கும் எளிதாக இருக்கவேண்டும். எனவே எருமையை நன்கு பழக்கப்படுத்த வேண்டும். எருமை பயந்தாலோ, சரியாகப் பொருத்தாமல் விட்டாலோ, வலி ஏற்பட்டாலோ எருமையானது பாலை விடாமல் அடக்கி வைத்துக் கொள்வதால், உற்பத்திக் குறைய வாய்ப்புள்ளது.
பால் கறக்கும் இயந்திரத்தின் பயன்பாடு
 • இந்த இயந்திரமானது அதிக அளவு கால்நடைகள் வளர்க்கப்படும் பண்ணைகளில், பால் கறத்தலை எளிதாக்க வடிவமைக்கப்பட்டது. இதுஅதிக அளவில் பயன்படுத்தப் படாவிடிலும் சரியான கீழ்க்காணும் வழிமுறைகளைக் கையாண்டால் இதலிருந்து முழுமையான பயனை அடையலாம்.
 • பால் கறப்பவர்க்கு அந்த இயந்திரம் பற்றி அறிந்துகொள்ள அதைப் பற்றி  அறிந்த (அ) அதைத் தயாரிக்கும் நிறுவனத்திடமிருந்து பயிற்சி அளித்தல் அவசியம். பயிற்சி அளிப்பவர் பால் உருவாகும் முறை, இயந்திரத்தைக் கையாளுதல், அதன் அமைப்பு, பராமரிப்பு, பால் கறத்தல் ஆகிய அனைத்தையும் நன்கு தெரிந்தவராக இருத்தல்வேண்டும்.
 • இயந்திரம் மூலம் கறப்பதற்கு ஏற்றவாறு பண்ணையின் பால் கறக்கும் கொட்டில் அமைப்பை மாற்றி அமைக்கவேண்டும்.
 • எருமையின் காம்பு, மடிகள் எந்த பாதிப்போ, காயமோ இன்றி இருக்கவேண்டும்.
 • சில வயது முதிர்ந்த எருமைகள் கையினால் கறப்பதில் பழக்கப்படுத்தப்பட்டவை. புதிய முறையை ஏற்றுக் கொள்ளாது. மேலும் சில இளம் எருமைகளைப் பால் கறக்கப் பழக்கப்படுத்தவே சில நாட்கள் ஆகும். இந்த எருமைகளில் கையினால் கறப்பதே சிறந்தது
 • மிகச் சிறிய அல்லது பெரிய காம்புடைய எருமைகளிலும் கையினால் மட்டுமே கறக்கவேண்டும். சினை மாடுகள் வெப்பமான இயந்திரம் கொண்டு கறப்பதை விரும்புவதில்லை.
 • இயந்திரம் பயன்படுத்துவதன் மூலம் வரும் சிறு இரைச்சல் ஒரு சில கால்நடைகளுக்குப் பிடிக்காமல் போகலாம். இது போன்ற எருமைகளில் முதலில் கையினால் பீய்ச்சவேண்டும். ஆனாலும் இயந்திரத்தை அருகில் வைத்துக் கொள்ள வேண்டும்.  சில நாட்களில் எருமைகள் அந்த சப்தத்திற்குப் பழகி விடும். பின்னர் இயந்திரத்தைப் பயன்படுத்தலாம்.
 • எருமையை கட்டி வைத்த பின்னரே இயந்திரத்தைக் காம்பில் மாட்டவேண்டும். இல்லையெனில் அது கட்டுப்படாமல் அங்குமிங்கும் ஓடித் தாவி விடக்கூடும் .
 • முதலில் பீய்ச்சும் போது அந்த இயந்திரத்தை ஒவ்வொரு எருமையாக எடுத்துச் சென்று அது முகர்ந்து பார்த்த பின்னரே பால் பீய்ச்ச அனுமதிக்கவேண்டும். அப்போது தான் எருமைகள் இயந்திரங்களைப் பயமின்றி ஏற்றுக் கொள்ளும்.
 • மேற்கூறிய முறைகளைக் கையாண்ட பின்னரும் இயந்திரத்தை ஏற்றுக்கொள்ளாத எருமைகளை கையினால் கறக்கும் முறைக்கே பழக்கிவிடவேண்டும். இல்லையெனில் இந்த ஒரு சில எருமைகள் மொத்த மந்தையிலும் குழப்பத்தை ஏற்படுத்தி விடும்.
 • மேலும் பால் கறப்பவர் இயந்திரத்தைப் பொருத்திவிட்டு அங்கேயே நின்று எருமை ஏற்றுக்கொள்கிறதோ, பயப்படுகிறதா என்பதைக் கவனிக்கவேண்டும். சில நாட்களுக்கு இயந்திரத்தைப் பழக்கப்படுத்தும் வரை எருமையின் அருகிலேயே நின்று மென்மையாகத் தடவுதலும், மெதுவாகப் பேசுதலும் வேண்டும். கால்நடைகள் இயந்திர கறத்தலுக்குப் பழகுவதற்கு சிறிது காலம் பிடிக்கும்.
Buffalo_milking
(ஆதாரம் : www.milkproduction.com)

0 comments :

Post a Comment