Thursday, 31 October 2013

பராமரிப்பு முறைகள்:


வயதைக் கண்டறிதல்


பொதுவாகப் பல் வரிசையைக் கொண்டு ஆடுகளின் வயதை நிர்ணயம் செய்யலாம். பற்களில் தற்காலிகப்பற்கள்,  நிரந்தரப் பற்கள், பால் பற்கள் எனப் பலவகை உண்டு. ஆடுகளில் மேல் தாடையில் பற்கள் காணப்படுவதில்லை. எனவே கீழ்த்தாடைக் பற்களின் எண்ணிக்கையை வைத்து வயதைக் கணிக்கலாம். கீழ்க்கண்ட அட்டவணை ஆடுகளின் வயதை பற்களின் எண்ணிக்கையை வைத்து அறிய உதவும்.
வயது
பற்களின் அமைப்பும், எண்ணிக்கையும்
பிறந்தவுடன் 0-2 ஜோடி பால் பற்கள்
6-10 மாதம் கீழ்த்தாடையின் முன்புறம் 8 முன்பற்கள் இவை அனைத்தும் பால் பற்கள்
ஒன்றரை வயது நடுவில் உள்ள இரண்டு முன் பற்கள் விழுந்து நிரந்தரப் பற்கள் முளைக்கும்.
இரண்டரை வயது நான்கு நிரந்தரப் பற்கள் காணப்படும்.
மூன்றரை வயது ஆறு நிரந்தரப் பற்கள் காணப்படும்.
4 வயது எட்டு நிரந்தரப் பற்கள் காணப்படும்.
6-7 வயது பற்கள் விழுந்துவிடும்
அடையாளம் இடுதல்

ஆடுகளை அதிக எண்ணிக்கையில் வளர்க்கும் போது சரியான பராமரிப்பு முறைகளைக் கையாளுவதற்கு அடையாளம் இடுவது அவசியம் ஆகும். இவற்றை 3 முறைகளில் செய்யலாம்.
  1. காதுகளில் பச்சைக் குத்தி எழுத்துக்களைப் பொறித்தல்
  2. வாலில் பச்சை குத்துதல்
  3. காதுகளில் உலோகம் அல்லது பிளாஸ்டிக்குளால் ஆன அடையாள அட்டைகளை மாட்டுதல்
போன்ற முறைகளைக் கையாளலாம். இவை ஒவ்வொரு ஆடு பற்றி விபரப் பதிவேடுகளை பராமரிக்க மிகவும் உதவியாக இருக்கும்.
Goat_taggingGoat_tagTypes
கொம்பு நீக்கம் செய்தல்

கொம்பு நீக்கம் செய்வதால் ஆடுகள் ஒன்றை ஒன்று முட்டிக் காயப்படுத்திக் கொள்வதைத் தடுக்க இயலும். கொம்பு உடைதல், கொம்புகளினால் ஏற்படும் புற்றுநோய் போன்ற நோய்களைத் தடுக்க இயலும்.
Goat_disbudding
கிடாக்குட்டிகள் பிறந்து 2-5 நாட்களுக்குள்ளும், பெட்டைக்குட்டிகளுக்கு 12 நாட்களுக்குள்ளும் கொம்பு நீக்கம் செய்தல் வேண்டும். நீக்கம் செய்யப்படவேண்டிய பகுதியைச் சுற்றியு்ள முடிகளை நீக்கிவிட்டு பெட்ரோலியம் ஜெல்லியைத் தடவவேண்டும். காஸ்டிக் சோடா அல்லது பொட்டாஷ் கொண்டு கொம்பு வளரும் பகுதி புண்ணாகும் வரை நன்கு தேய்க்கவேண்டும். எக்காரணம் கொண்டும் காஸ்டிக் சோடா அல்லது பொட்டாஸ் கண்களில் படக்கூடாது. மின்சார கொம்பு நீக்கியைப் பயன்படுத்துதல் சிறந்தது. குட்டியின் வாயை அடைக்கும் போது, அது மூச்சு விட ஏற்றவாறு அடைக்கவேண்டும். அல்லது மூச்சுத் திணறல் ஏற்படலாம். வயது முதிர்ந்த ஆடுகளில் செய்யும் போது வளர்ந்து விட்ட கொம்புகளை இரம்பம் கொண்டு அறுத்துவிடவேண்டும். இவ்வாறு செய்யும் போதே ஈக்கள் போன்றவற்றால் பாதிப்பு ஏற்படாமலிருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கவேண்டும்.
காயடித்தல்

இனப்பெருக்கத்திற்குத் தேவையில்லாத கிடாக்களை காயடித்து விடலாம். கிடாக்களை காயடிக்கும் சரியான வயது 4-6 மாதங்கள் ஆகும். பர்டிஸோ கருவி என்ற கருவி மூலம் காயடித்தால் நோய்த் தொற்று அபாயங்கள் குறையும்.
Goat_castration
பயன்கள்
  1. இறைச்சியின் சுவை அதிகமாக இருக்கும்.
  2. உடல் எடை விரைவாக அதிகரிக்கும்.
  3. ஆட்டுத் தோலின் தரம் உயர் மதிப்புக் கொண்டதாக இருக்கும்.
  4. அமைதியாக இருக்கும்.
பயிற்சி

ஆடுகள் ஆரோக்கியமாக வளர அவைகளுக்குப் பயிற்சி அவசியம். கொட்டிலில் அடைத்து அல்லது கட்டி வளர்க்கப்படும் ஆடுகள் ஒரு நாளைக்கு 3-4 மணி நேரமாவது திறந்த வெளியில் திரிய அனுமதிக்கவேண்டும். திறந்த வெளி எந்த அளவு பெரிதாக இருக்கிறதோ அந்த அளவு பயிற்சிக்கு ஏற்றது. பனித்துளி இருக்கும் போதும், சூரியன் மறைந்து இரண்டு மணி நேரத்திற்குப் பின்பும் மேய விடுதல் கூடாது. ஈரமான புற்களில் மேயும் போது குடல் அழற்சி ஏற்பட வாய்ப்புண்டு.
நகங்களை வெட்டுதல்

ஆடுகளின் சிறந்த பராமரிப்பிற்கு நகங்களை நன்கு வெட்டுதல் வேண்டும். இல்லையெனில் நகம் பெரிதாக வளர்ந்து, காலை பலகீனப்படுத்தும். 30 நாட்கள் இடைவெளியில் கூரிய கத்தி, அல்லது கத்தரிக்கோல் வைத்து நறுக்கி விடுதல் வேண்டும்.
பெட்டை ஆடுகளை தெரிவு செய்தல்

நல்ல இலாபம் தரக்கூடிய மந்தையில் இனப்பெருக்கத்திற்கு பெட்டையத் தேர்வு செய்தல் அவசியம். பெட்டை ஆடுகளின் நல்ல பால் மற்றும் இறைச்சி உற்பத்திக்கு அவை நல்ல உடல் அமைப்பு பெற்றிருக்கவேண்டும். உடல் நல்ல வளர்ச்சியுடன் தோற்றத்திற்கு ஆரோக்கியமானதாகவும் நான்கு கால்களையும் நன்கு ஊனி நிற்கக்கூடியதாகவும் இருத்தல் வேண்டும். பக்கவாட்டில் உடல் நீள முக்கோண வடிவமாகவும் கால்கள் வளையாமல் நேராகவும் தோள் கூர்மையாகவும் இருத்தல் வேண்டும். இடுப்புக்குழி எந்தளவு குழிந்துள்ளதோ அந்தளவுக்கு தீவனம் அதிகமாக உட்கொள்ளும். உடல் எடைக்குத் தகுந்தவாறு, மடி அதிகம் தொங்காமல் அடிவயிற்றின் பின்பகுதியில் நன்கு இணைந்திருக்கவேண்டும்.
Goat_doe
ஆட்டின் தோல் நன்கு தளர்ச்சியாக, வழவழப்பாக, மிருதுவாக இருக்கவேண்டும். சில இனங்களில் நல்ல பால் உற்பத்தி செய்யும் மாடுகளில் சதைப்பற்று குறைவாக இருக்கும். கழுத்து மெலிந்து தலையுடன் நேர்க்கோட்டில் இருக்கவேண்டும். கண்கள் தெளிவாக பளிச்சென்று இருக்கவேண்டும். பெட்டை ஆடுகள் சாதுவாகவும் பெண்மைத் தோற்றத்துடனும், இருக்க வேண்டும். மடி சதைப்பற்றின்றி மென்மையாக நல்ல வளைந்து கொடுக்கும் தன்மையுடன் இருத்தல் வேண்டும். காம்புகள் முன்னோக்கி சற்று கூர்மையானதாகவும் இருக்கும்.
கிடா ஆடுகள் தேர்வு செய்தல்

கிடாக்கள் நல்ல உடல் அமைப்பும் வலுவும் பெற்றிருக்கும். நாம் தெரிவு செய்யும் கிடா நல்ல இனப்பெருக்கத் திறனுடையதாக இருக்கவேண்டும். விலா எலும்புகள் நல்ல ஆழத்துடனும் கால்கள் நேராக உடலை நன்கு தாங்கக்கூடியதாக இருத்தல்வேண்டும். பொதுவாக கிடா ஆடுகள் கொம்பு நீக்கப்பட்டவையாக இருத்தல் நலம். மேலும் நல்ல ஆரோக்கியத்துடனும் எந்த ஒட்டுண்ணிகள் பாதிப்புமின்றி இருத்தல்வேண்டும். கிடாவனாது நல்ல பால்தரக்கூடிய இனத்திலிருந்து தேர்வு செய்தல் அவசியம். கிடாக்கள் அதிக சதைப்பற்றுடன் இருக்கவேண்டிய அவசியம் இல்லை. ஆனால் அதன் இனப்பெருக்கத் திறன் அதிகமாக இருத்தல் வேண்டும். நன்கு பராமரிக்கப்பட்ட கிடாவை அதன் முதல் இனச்சேர்க்கை காலத்தில் 5-6 பெட்டை ஆடுகளுடன் சேர்க்கலாம் (6 மாத வயதில்) 18-24 மாதக் காலத்தில் 25-30 பெட்டைகள் வரை சினைப்படுத்தும் திறனும், நன்கு முதிர்ந்த, நல்ல இனப்பெருக்க காலத்தில், 50-60 ஆடுகளுடன் இனச்சேர்க்கை செய்யும் திறனும் பெற்றது.
Goat_buck
இனச்சேர்க்கை காலம்

ஆடுகள் பொதுவாக சூட்டிற்கு வரும் போது அவைகளிடம் கீழ்க்காணும் அறிகுறிகள் தென்படும்.
வாலை அடிக்கடி ஆட்டுதல், பாலுறுப்புகள் சிவந்து காணப்படுதல், சிறிது மியூகஸ் திரவம் வழிதல், ஆடு அமைதியின்றிக் காணப்படுதல், அடிக்கடி சிறுநீர் கழித்தல், அலறுதல் . சூட்டில் இருக்கும் காலம் 18-21 வரை நாட்கள் வேறுபடும். பெட்டை ஆடு சூட்டிற்கு வந்த இரண்டாவது நாளில் இனச்சேர்க்கை செய்தல் நலம். ஏனெனில் சூட்டிற்கு வந்தபின் 22-48 மணி நேரம் வரை தான் அணுக்கள் உயிருடன் இருக்கும். நல்ல தீவனம் அளித்து முறையாகப் பராமரித்தால் இறப்பு விகிதம் குறைந்து, சினைப்பிடித்தல் அதிகரிக்கும். இனச்சேர்க்கை அல்லது கருவூட்டல் நேரமானது தட்பவெப்பநிலை, இடம், இனம் போன்ற காரணிகளைப் பொறுத்து மாறுபடும்.
Goat_matting
பெட்டை ஆடுகள் கருவூட்டம்

பெட்டை ஆடுகள் 1 வயதிலிருந்தே கருவூட்டலுக்குத் தயாராகிவிடும். பொதுவாக 10-15 மாதத்தில் கருவூட்டல் செய்தால் 15-20 வது மாதத்தில் முதல் குட்டி ஈனும் சினைக்காலம் 151+3 நாட்கள் வருடத்திற்கு ஒரு முறை கருவூட்டல் செய்தல் நலம். சில இனங்கள் 2 வருடத்திற்கு 3 முறை அதாவது 18 மாதங்களுக்கொரு முறை குட்டி ஈனும் 5-7 வருடங்களில் அதிகக் குட்டிகள் ஈனும். சில இனங்கள் 12 வயது வரை கூட நிறையக்குட்டிகள் ஈனும் திறன் பெற்றுள்ளன. நன்கு பராமரிக்கப்பட்ட ஆடானது அடுத்த குட்டி ஈனுவதற்கு முந்தைய மாதம் வரை பால் கறக்கக்கூடியதாக இருக்கும். சினை ஆட்டை சரியான தீவனமளித்து, நன்கு பாதுகாக்கவேண்டும். மழை, வெயிலிருந்தும் ஒட்டுண்ணிகளிடமிருந்தும் முறையாகப் பராமரித்தால் சிறப்பான கன்றுகளைப் பெற முடியும்.
சினைப் பருவம்

பால் சுரத்தல் தற்காலிகமாக அதிகரிப்பதே ஆடு சினை அடைந்ததன் முதல் அறிகுறியாகும். ஓஸ்டிரஸ் திரவம் வழிவது நின்று விடும். சினைப் பிடித்த முதல் 3 மாதங்களில் குட்டியின் உடல் உருவாகத் தொடங்கும். 6-8 வாரங்களில் குட்டியின் தலைப் பாகம் உருவாகும். கன்று ஈனும் பெட்டை ஆடானது உருவத்தில் மாற்றம் பெற்றுக் காணப்படும். சில சமயங்களில் வயிறு புடைப்பதும் தெரியாது. குட்டி ஈனுவதற்கு முன் 6-8 வாரங்களில் மடி உப்பிக் காணப்படும். ஆனால் இதை மட்டும் வைத்து ஆடு சினைப்பிடித்துள்ளதாக எண்ணிவிட முடியாது. சில சமயங்களில் சினைப் பிடிக்காத போதும் மடியிலிருந்து பால் சுரக்கும்.
Goat_pregnant Dow
ஒரு சாதாரண ஆடு 2 குட்டிகள் ஈனும், நன்கு பராமரிக்கப்பட்ட ஆடு 5 குட்டிகள் வரை ஒரே நேரத்தில் ஈனும். ஆனால் குட்டிகள் எந்தளவு குறைவாக ஈனுகிறதோ அந்த அளவுக்கு ஆரோக்கியமான குட்டிகளாக இருக்கும். குட்டிகளின் எண்ணிக்கை ஆட்டு இனம். தட்பவெப்பநிலை, சினைப் பிடிக்கும் முறை ஆகியவற்றைப் பொறுத்தது. ஹிசார் பண்ணையில் பீட்டல் இனமானது 35 சதவிகிதம் ஒரு குட்டியும் 54 சதவிகிதம் இரு குட்டிகளும், 6.3 சதவிகிதம் 3 குட்டிகளும் 0.4 சதவிகிதம் 4 குட்டிகளும் போடும் திறன் பெற்றது. ஜமுனாபுரியியல் இரட்டைக் குட்டி ஈனும் சதவீதம் 19-50 சதவிகிதம் 19-50 சதவிகிதம் அளவு வேறுபடுகிறது. இதுவே பார்பரியில் 47-70 சதவிகிதம் அளவு வேறுபடுகிறது.
(ஆதாரம்: Handbook of agricultural Dr.Achariya)

0 comments :

Post a Comment