Thursday, 31 October 2013


இனப்பெருக்கம்:


பெட்டை ஆடுகளின் நிகழ்வுகள்
பருவமடையும் காலம் 7 மாதத்திலிருந்து 1 வயது
முதல் இனச்சேர்க்கை செய்யும்போது இருக்க வேண்டிய எடை 15-18 கிலோ
முதல் இனச்சேர்க்கை செய்யும் வயது 8-12 மாதங்கள்
ஓஸ்டிரஸ் சுழற்சி ஒவ்வொரு 18-21 நாட்கள்
சூட்டிற்கு வரும் காலம் 14-48 மணி நேரம்
சினைக்காலம் 145-156 நாட்கள்
முதல் குட்டி ஈனும் வயது 13-17 மாதங்கள்
குட்டி ஈனும் எண்ணிக்கைக்கு 3 முறை 2 வருடங்கள்
பயிற்சி காலம் 45 நாட்கள்
குறைந்த வறட்சி காலம் 30 நாட்கள்
சினைத்தருண அறிகுறிகள்
 • அமைதியிழந்து, நிலை கொள்ளாமல் அலைந்து கொண்டிருக்கும்.
 • அடித்தொண்டையில் கத்தும்.
 • அடுத்த ஆடுகள் மீது தாவுவதுடன், மற்ற ஆடுகள் தன் மேல் தாவ அனுமதிக்கும்.
 • வாலைத் தொடர்ந்து அசைத்துக் கொண்டே இருக்கும்.
 • வெளிப்புற பிறப்பு உறுப்பு சிவந்தும், வீங்கியும் காணப்படும்.
 • பிறப்பு உறுப்பிலிருந்து கண்ணாடி போன்ற திரவ ஒழுக்கு காணப்படும்.
 • பால் உற்பத்தி குறையும்.
கிடா ஆடு தெரிவு

கிடா ஆட்டைத் தெரிவு செய்யும் போது அவ்வினத்தின் பெட்டை ஆடுகளின் பால் உற்பத்தித் திறனை அறிந்து தேர்வு செய்யவேண்டும். பால் உற்பத்தி நாளொன்றுக்குக் குறைந்தது 1.5 கி.கி ஆவது இருக்கவேண்டும். ஆடு கால்கள் நேராகவும் ஆண்மைத் தனத்துடனும் நீளமாகவும் இருத்தல் வேண்டும்.
இரண்டு அல்லது 3 குட்டிகளில் ஒன்றாக இருக்கலாம். கிடா நன்கு விந்தணு வளர்ச்சியுடன் இனச்சேர்க்கைக்குத் தயாராக இருக்கவேண்டும். 10-12 மாதங்கள் வயது இருக்கவேண்டும்.
பருவத்திற்கு வரும் வயது : 5-7 மாதங்கள்
 • கிடா மற்றும் பெட்டைக் குட்டிகளைப் பிரிக்கும் வயது - 3-5 மாதங்கள்
 • விந்தணு சேகரிக்க பயிற்சியளிக்கும் வயது - 9 மாதங்கள்
 • கிடாவை கலப்பிற்கு பயன்படுத்தும் அதிகபட்ச வயது - 6-8 வருடங்கள்.

ஆடுகளில் செயற்கைக் கருவூட்டல்

வெள்ளாடுகளில் கிடாக்கள் மலட்டுத்தன்மை அடைவதால் செயற்கைக் கருவூட்டல் அவசியமாகிறது. ஜெர்மனி மற்றும் நெதர்லேண்ட் நாடுகளில் 1950களில் இருந்தே இம்முறை பின்பற்றப்படுகிறது. நடுத்தர வயது ஆடானது 1-3 மி.லிருந்து 6 மி.லி. திரவத்தில் இருக்கும் விந்தணுக்களே போதுமானது. விந்தணுவானது வெள்ளையிலிருந்து எலுமிச்சை நிறம் வரை நிறத்திலும் அடர்த்தியிலும் வேறுபடுகிறது. விந்தணுக்களின் திறனுக்கேற்ப நேரடிக் கலப்பை விட செயற்கைக் கருவூட்டலே சிறந்தது. ஒரு மி.லி திரவத்தில் உள்ள விந்தணுக்களின் எண்ணிக்கையை அறிவது அவசியம். ஒரு சிறந்த கருவூட்டலுக்கு ஒரு மில்லி திரவத்தில் 2000x106 விந்தணுக்கள் (ஸ்பெர்மட்டோசோவா) இருத்தல் நலம்.
Goat_AI


ஆடுகளில் விந்தணுக்கள் நகராமல் ஆண் உறுப்பிலேயே தங்கி விடுவதால் மலட்டுத் தன்மை ஏற்படுகிறது. இப்பிரச்சனை அதிக தீவனம் அளிப்பதால் ஏற்படுகிறது. அதிக வெப்பமும், பனியும் கூட விந்தணுவைப் பாதிக்கலாம். விந்தணுவின் செயல்படும் நேரம் 63-160 நொடிகள். இது காலத்தைப் பொருத்து மாறுபடலாம். செயற்கை சினைப்பை மூலம் அதிகமாக விந்தணு பெறப்பட்டாலும் மின்சாரத்தூண்டல் முறையே சிறந்ததாகும். கிடாவின் விந்தணு குளிரால் அதிகம் பாதிப்படையும். 1:10 அல்லது 1:15 என்ற விகிதத்தில் விந்தணு திரவங்களின் எண்ணிக்கை இருக்கவேண்டும். மேலும் சல்ஃபர் கூட்டுப்பொருள்கள் போன்ற நோய் எதிர்ப்பொருட்களைப் பயன்படுத்தி விந்துக்களை நீண்டகாலம் பாதுகாக்கலாம். பொதுவாக 4 முறை உட்செலுத்தலாம். இது இடம் மற்றும் இனத்தைப் பொறுத்து வேறுபடுகிறது. தற்போது உறைய வைத்துப் பாதுகாக்கும் முறை பின்பற்றப்படுகிறது. எடுத்துக் கொள்ளும் விகிதம் 93 சதவிகிதம் ஆகும். சரியாகப் பாதுகாக்கப்படாத விந்தணுக்கள் நல்ல வெற்றியைத் தராது.

(ஆதாரம்: Dr. Acharya, Handbook of Animal Husbandary)
பாதுகாப்பு நடவடிக்கைகள்

ஒவ்வொரு கால்நடை வளர்ப்பாளரும் கால்நடை வளர்ப்பின் தடுப்பு நடவடிக்கைகள் பற்றித் தெரிந்து வைத்திருக்கவேண்டும். இவ்வாறு சரியான நேரத்தில் மேற்கொள்ளப்படும் தடுப்பு நடவடிக்கைகளினால் ஆட்கூலி, இழப்பு, மருத்துவ செலவுகள் குறையும்.  கீழ்க்காணும் காரணங்களைப் பொறுத்து தடுப்பு நடவடிக்கைகள் வேறுபடும்.
 • வளர்க்கும் வெள்ளாடுகளின் வகை
 • ஆடு வளர்ப்பு மேற்கொண்டுள்ள பூகோள இடம்
 • தட்பவெப்பநிலை
 • மேய்ச்சல்  நில அளவு
 • வளர்ப்பாளர் ஆடு வளர்ப்பில் செலவிடும் நேரம்
நாம் செய்யவேண்டிய தடுப்பு நடவடிக்கைகள்
 1. வருடாந்திர தடுப்பூசி தொடர்பினால் பரவும் நோய் + பார்1
சினை ஆட்டைத் தயார் செய்தல்
 1. சினைக்காலம் முழுவதும் நல்ல தீவனமும் பராமரிப்பும் அளிக்கப்பட்டு ஆரோக்கியத்துடன் இருக்கவேண்டும்.
 2. குட்டிகள் வயிற்றுக்குள் நன்கு வளருமாறு அதற்கு கவனம் அளித்தல் அவசியம்.
Goat_Prepared dow
பயிற்சி

சாதாரணமாக செய்வதைப்போலவே சினைக்காலத்திலும் ஆடுகளுக்கு பயிற்சி அவசியம். ஆனால் கிடா போன்ற பிற ஆடுகளுடன் உலவ அனுமதித்தல் கூடாது. கடைசி இரு மாத சினைக் காலத்தில் ஆடுகளுக்குக் குட்டியைத் தாங்கி நிற்க அதிக வலு தேவைப்படும். அதற்கேற்ப பயிற்சியும், தீவனமும் அவசியம்.
ஊட்டச்சத்து

சினை ஆடுகளுக்கு கடைசி இரு மாதத்தில் தான் குட்டிகள் 70 சதவிகிதம் எடை பெறுகின்றன. எனவே இந்த சமயத்தில் முறையான தீவன கவனிப்பு அவசியம். இல்லையெனில் குட்டிகள் குறைந்த எடையுடனோ அல்லது இறந்தோ பிறக்க வாய்ப்புள்ளது. எனவே இச்சமயத்தில் நன்கு அடர் தீவனம் அளிக்கவேண்டும். மேலும் கருப்பை விரிந்து வயிறு முழுவதும் அடைத்துக் கொள்வதால் நிறையத் தீவனமும் ஆட்டினால் எடுத்துக் கொள்ள முடியாது. எனவே சரியாக கவனித்து நன்றாக தீவனம் அளிக்கவேண்டும்.

சினையாக இருக்கும் போது ஆடுகள் உள்ளே சேகரித்து வைத்துள்ள கொழுப்பு, கார்போஹைட்ரேட் முழுவதும் குட்டிகளுக்கு கொடுத்து விடும். எனவே அதற்குத் தேவையான அளவு உணவைக் குறிப்பாக நல்ல தரமுள்ள உலர் தீவனம் அளித்தல் அவசியம். சினைக்காலத்தில் நல்ல உலர் தீவனம் அளித்தால் தான் குட்டி ஈன்றபின் பால் உற்பத்தி அதிகமாக இருக்கும்.
அதே போல், புரதம் கலந்த அடர் தீவனம் கொடுக்கவேண்டும். அடர் தீவனம் அதிகமாகக் கொடுத்தாலும் கன்று ஈனுதல் மெதுவாகவும், செரிப்பதற்குக் கடினமானதாகவும் இருக்கும். எனவே 16-17 சதவிகிதம் புரதம், சிறிது உப்பு மற்றும் தாதுக்கள் கலந்த கலப்பு உணவு அளிப்பதே சிறந்ததாகும்.
தடுப்பு முறைகள்
 • குட்டி ஈனுவதற்கு 1 மாதம் முன்பு குடற்புழு நீக்கம் செய்தல் வேண்டும்.
 • கிளாஸ்டிரிடியம் பரீஃபிரிஞ்ஜென்ஸ் ‘சி’ மற்றும் ‘டி’ தடுப்பூசி அளித்தல் வேண்டும். டெட்டானஸ் ஊசி குட்டி ஈனுவதற்கு 2 வாரங்கள் முன்பே அளித்துவிடவேண்டும்.
 • இரத்த விஷத்தன்மை ஏதேனும் ஏற்பட்டுள்ளதா என சோதித்துக் கொள்ளவேண்டும்.
குட்டி ஈனும்போது

ஆடுகள் குட்டி ஈனும் போது கண்டிப்பாக நாம் அருகில் இருத்தல் வேண்டும். சில ஆடுகள் நடு இரவில் நாம் அறியாத போது குட்டி போட வாய்ப்புள்ளது. இதைத் தடுக்க சரியாக அறிகுறிகளைக் கவனித்தால், இரவிலும் நாம் அருகில் இருந்து கவனிக்க முடியும்.

கீழ்க்காணும் அறிகுறிகள் மூலம் குட்டி ஈனும் தருணத்தைத் தெளிவாக அறியலாம்.
நாட்காட்டி

நமது ஆடுகளை மந்தையில் உள்ள கிடாக்களுடன் விட்டு நாமே கலப்புச் செய்வதன் மூலம் கன்று ஈனும் நாளைக் கணிக்கலாம். சூட்டிற்கு வந்த ஆடுகளை கிடாவுடன் விட்டு ஓரிரு நாட்கள் கழித்து அதன் அறிகுறிகளை அறியலாம். பின்பு சினை ஆனதை உறுதிப்படுத்திக் கொண்டு அன்றிலிருந்து 150 நாட்கள் அதைக் கவனமாகக் கவனித்தல் வேண்டும்.
வாலை ஆட்டுதல்

சினை ஆன ஆடுகள் குட்டி ஈனும் நாள் நெருங்க நெருங்க அதன் உடல் அமைப்பில் சில மாறுதல்கள் ஏற்படும். விலா எலும்புகள் சற்று விரிய ஆரம்பிக்கும். பின் பக்க எலும்புகள் வாலின் பின்புறம் இரண்டு பக்கமும் இணைந்து குட்டி ஈனுவதற்கு தகுந்தவாறு மாற ஆரம்பிக்கும். கீழேயுள்ள படமானது குட்டி ஈனுவதற்கு 8 நாட்கள் முன்பு எடுக்கப்பட்டது. எனினும் இது ஒரு முக்கியமான அறிகுறியாக எடுத்துக்கொள்ள முடியாது. சில சமயங்களில் வாலை சாய்க்கும் அறிகுறி தெரியாமல் கூட போகலாம்.
Goat_Tail Dropping

திரவம் கசிதல்

கால்நடை மருத்துவர்கள் இதனை ‘திரவம் இழத்தல்’ என்பர். வெளிர் மஞ்சள் நிற ஜெல் போன்ற திரவம் சிறிதளவு மலப்புழை வழியே வெளியே கசியும். இது குட்டி ஈனுவதற்கு 2 வாரங்களுக்கு முன்பிருந்தே கசியத் துவங்கும். கீழ்க்காணும் படம் குட்டி போடுவதற்கு 8 நாட்களுக்கு முன் எடுக்கப்பட்டது.
Goat_losing Plug
மடி முட்டிக் கொண்டிருத்தல்

இந்த அறிகுறி குட்டி ஈனுதலை அறிய முக்கியமான ஒன்றாகும். முதல் படமானது குட்டி ஈனுவதற்கு 8 நாட்கள் முன்பு எடுக்கப்பட்டது. இது அவ்வளவாக பளபளப்பாக இருக்காது. இதில் கருப்பாக இருக்கும் பகுதி ஒரு வகைத் திரவம் வழிவதால் ஏற்பட்டது. இரண்டாவது படத்தில் மடி நன்கு பெரிதாக பளபளப்புடன் காணப்படும். இது குட்டி ஈனுவதற்கு 3 மணி நேரம் முன்பு எடுக்கப்பட்டது. குட்டி ஈன்ற பின்பும் பெருத்து இருக்கும். சில ஆடுகளில் மடி சாதாரணமாகவே இருக்கும். மடி பெருத்தால் குட்டி விரைவில் ஈனப் போவதாகவே அர்த்தம்.

Goat_strutted
Full but nt strutted

திரவம் வழிதல்

இது திரவக்கசிதலின் நீட்சி ஆகும். இதில் அதிக அளவு திரவம் தொடர்ச்சியாக வழிந்துகொண்டிருக்கும். இது குட்டி ஈனுவதற்கு 3 மணி நேரத்திலிருந்து தான் தொடங்கும். எப்படியும் இத்திரவ ஒழுக்கு ஆரம்பித்து 4-5 மணி நேரத்தில் குட்டிகள் பிறந்த விடும். ஆனால் அதற்கு மேலும் திரவ ஒழுக்கு மட்டுமே அதிக நேரம் இருந்தாலோ அல்லது வழியும் திரவத்தின் நிறம் சிவப்பாக இருந்தாலோ குட்டி ஈனுதலின் பிரச்சனை இருக்கலாம். எனவே இதை சரியாகக் கவனித்தல் அவசியம்.

Goat_streaming
தனிமையை விரும்புதல்

மடி பெருத்து திரவம் வழியத் தொடங்கியவுடன் ஆடு தனியெ செய்னால நாம் குட்டி போடும்போது தேவைப்படும் உபகரணங்களைத் தயார் செய்து கொள்ளவேண்டும். 4-5 மணி நேரங்களில் குட்டி ஈன்றுவிடும்.
மெதுவாகக் கத்துதல்

ஆட்டின் கத்தல் ஒலியானது சற்று மாறுபாடு மிருதுவாக இருக்கும். வழக்கமாகக் கத்துவது போலில்லாமல் சற்று ஒலி அளவு குறைவாக இருக்கும். ஆடு ஓரிடத்தில் நிற்கவோ, படுக்கவோ முடியாமல் அடிக்கடி வயிற்றைத் திருப்பிப் பார்த்துக் கொண்டும், மெதுவாகக் கத்திக்கொண்டும் இருக்கும்.
பாதத்தைத் தரையில் சுரண்டுதல்

ஆடு குட்டி ஈனும் முன்பு தனது பாதத்தால் தரையை உதைத்துக் கொண்டே இருக்கும். அதாவது குட்டி போடுவதற்கு அது தரையை சுத்தப்படுத்துவது போல் சுரண்டிக்கொண்டே இருக்கும்.
Goat_Problems
குட்டி ஈனுதல்

மேற்கண்ட அறிகுறிகள் அனைத்தும் சரியாகப் பொருந்தினால் ஆடு குட்டி ஈனத் தயாராகிவிட்டதாகக் கொள்ளலாம். ஆடு தானே குட்டி ஈனுவதற்கு கீழ்க்காணும் நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டியது அவசியம்.
குட்டி ஈனுதல் தொடங்கியவுடன் ஆடு அடிக்கடி வயிற்றைத்தள்ள ஆரம்பிக்கும். தொடங்கும் நேரம் தொட்டே அதனைக் கவனித்து வந்தால் முறையாக எந்தப் பிரச்சனையுமின்றி குட்டி ஈனுகிறதா என்பதை உறுதி செய்து கொள்ளலாம். மலப்புழை ஆனது உள்ளே சுருங்கி விரிந்து அடிக்கடி மூடித்திறக்கும். அப்போது 3-5 அளவு குமிழ் போன்ற அவ்வப்போது வெளிவரும். சில ஆடுகளில் இது வராமலும் போகலாம்.

இரண்டு மணி நேரங்களுக்கும் மேலாக இவ்வாறு வெளித்தள்ளும் முயற்சி தொடர்ந்தும், குட்டி வெளிவரவில்லையெனில் ஏதேனும் சிரமம் இருக்கலாம். குட்டி அமைந்திருக்கும் விதம் மாறி இருக்கலாம் அல்லது கருப்பை சரியாக திறக்காமல் குட்டி பிறக்கும் பாதையை அடையாமல் இருக்கலாம். இவ்வாறு இருந்தால் ஒரு கால்நடை மருத்துவரோ அல்லது நன்றாகத் தெரிந்திருந்தால் நாமோ கூட கையை உள்ளே விட்டு குட்டி வெளிவர உதவி செய்யலாம்.
வெளிவரும் திரவம் இளஞ்சிவப்பு நிறமாக இருந்தல் குட்டியில் எதேனும் பிரச்சனை இருக்கும். பொதுவாக இம்மாதிரி பிரச்சனைகளில் குட்டி இறந்தே பிறக்கும்.

நீர்க்குமிழ்
 • குட்டி வெளிவரும்போது அதைச் சுற்றிலும் ஒரு கண்ணாடி போன்ற தெளிந்த நீர்க்குமிழ் இருக்கும். குட்டி கீழே விழும்போது இது உடைந்து திரவம் வெளிக்கொட்டி விடும். இது தவிர குட்டியுடன் சேர்ந்து நஞ்சுக்கொடி வெளிவரும். இது உடைந்து விடாமல் பார்த்து வெளிவந்தவுடன் அப்புறப்படுத்தி விடவேண்டும். இல்லையெனில் அதை சாப்பிட்டால் இறக்க நேரிடலாம்.
 • முதலில் ஒரு நீர்க்குமிழ் வெளிவந்த உடன் ஆட்டுக்குட்டியை வேகமாக வெளித்தள்ள முயற்சிக்கும். அப்போது அக்குமிழிக்குள் காலோ, வாலோ தென்படும். பின்பு குட்டி முழுவதும் வெளிவரும். அவ்வாறின்றி அதிக நேரம் வெளித்தள்ள முயற்சித்தும் குட்டி வரவில்லை எனில், கீழ்க்காணும் பிரச்சனைகள் இருக்கலாம்.
 • குட்டி இறந்திருக்கலாம். இறந்த குட்டியை வெளித்தள்ள நீண்ட நேரம் ஆகும்.
 • ஒன்று அல்லது இரண்டு குட்டிகள் இடம் மாறி இருக்கலாம்.
Goat_kidding_WaterPubble
இந்த இரண்டில் எதுவாக இருந்தாலும் கால்நடை மருத்துவர் உதவியுடன் கையை விட்டு வெளிவர உதவவேண்டும். முதல் நீர்க்குமிழ் வெளியேற 2.5 மணி நேரம் ஆகலாம். பின்பு ஒரு மணி நேரத்தில் மீத நீருடன் குட்டி வெளிவந்துவிடும். கையுறைகளை கிருமி நீக்கம் செய்தபின் பயன்படுத்தலாம்.
 • ஒரு பண்ணையில் இவ்வாறு குட்டிகள் இடம் மாறி அமைந்திருந்த போது கால்நடை மருத்துவர் ஒருவர் கையுறை அணிந்து மலப்புழை வழியே கையை உட்செலுத்தியபோது, ஒரு குட்டியுடன் கூடிய பை அகப்பட்டது. அதை வெளியே இழுத்த போது குட்டி உயிருடன் இருந்தது. பின்பு மீண்டும் முயற்சித்த போது அடுத்தக் குட்டியின் கால் அகப்பட்டது. அதை மெதுவாக வெளியே எடுத்த போது உயிருடன் வெளிவந்தது. அதே போல் மீண்டும் மூன்றாவது குட்டியும் உயிருடன் வெளிக்கொண்டு வரப்பட்டது. மருத்துவர் கூற்றுப்படி முதல் இரண்டு குட்டிகள் சரியாக அமையாமல் குறுக்கும் நெடுக்குமாக அமைந்திருக்கலாம் என்று அறியப்பட்டது. பின்பு ஆட்டிற்கும் குட்டிகளுக்கும் 4 நாட்களுக்கு நோய்த் தொற்றுத் தடுப்பான் அளிக்கப்பட்டது. அதன் பிறகு தாய் ஆகும் குட்டிகளும் நல்ல ஆரோக்கியத்துடன் இருக்கின்றன.
குட்டி வெளிவருவதன் முதல் அறிகுறி
 • மலப்புழை சுருங்கி விரியும் போது வெளிவரும் நீர்க்குமிழிக்குள் முதலில் கால் மட்டுமே பொதுவாக வெளிவரும். கீழ்க்காணும் படத்தில் முதலில் கால் வெளிவருவதைக் காணலாம். இதை உற்றுக் கவனித்தால் முன்பாகம் முதலில் வரப்போகிறதா அல்லது குட்டியின் பின்பாகம் வருகிறதா என்பதை அறியலாம். கால் நகத்தின் மேல் பாகம் வெளிவந்தால் தலை முதலில் வரும் என்றும் நகத்தின் கீழ் (அடி) பாகம் தெரிந்தால் பின்பகுதி வெளிவரும் என்றும் அறியலாம். இவ்விரண்டில் எம்முறையாக இருந்தாலும் சரி, குட்டி சரியாக வெளிவருகிறதா என்று பார்க்கவேண்டும். மிக நீண்ட நேரமாகியும் வெளிவர முடியாமல் கஷ்டப்படும் போது தேவைப்பட்டால் மட்டுமே ஒழிய குட்டியை இழுத்தல் கூடாது.
 • இவ்வாறு சிறிது குட்டியின் கால்பாகம் வெளிவந்தவுடன் ஆடு அதைத்தள்ள முயற்சிக்கும் அப்போது மட்டும் கால்நடை மருத்துவரோ அல்லது தெரிந்தவரோ கையினால் அதை மெதுவாக இழுக்கலாம். அப்போதும் வெளிவரவில்லை எனில் உள்ளே கையைவிட்டு அடைத்துக் கொண்டுள்ளதா என்பதைச் சரிபார்த்துக் குட்டியை வெளிக்கொணர உதவலாம்.
Goat_Kidding
இரு கால்களும் வாயும்
 • சில சமயம் இரு முன்னங்கால்களுடன் வாயும் சேர்ந்து வெளிவரும். அவ்வாறு வரும்போது சரியாக அமைந்து இருந்தால் பிரச்சனை இருக்காது. தலைப்பாகமோ, மூக்குப் பகுதியோ வெளிவரும் போது கவனமாக இருத்தல் வேண்டும். ஏனெனில் குட்டி வெளியில் விழுந்தவுடன் அது மூச்சுவிட எளிதாக இருக்குமாறு திரவங்களை அகற்றி மூக்குப் பகுதியைச் சுத்தம் செய்யவேண்டும்.
 • ஒரு முறை ஒரு ஆட்டுக்குட்டி போடும் போது முதலில் இரு கால்கள் தெரிந்தன. ஒன்று முன்னங்கால் மற்றொன்று பின்னங்கால் அது இரட்டைக்குட்டி. எனவே முதல் குட்டியின் முன்னங்காலும் 2வது குட்டியின் பின்னங்காலும் முதலில் வெளியில் தெரிந்தன. இதை அறிந்த உடனே இரண்டாவது குட்டியின் பின்னங்காலை உள்ளே தள்ளி விட்டபோது முதல் குட்டி எளிதில் வெளியே வந்தது.
 • சில சமயம் இரண்டு முன்னங்கால்களிலும் தெரியும் போது தலை தெரியவில்லை எனில் குட்டி வெளிவருதல் சிரமம். அப்போது தலை அமைப்பைச் சரிசெய்தால் எளிதில் வெளிவரும்.
Goat_Kidding_2
முடியும் தருவாயில்

தலை வெளிவந்து விட்டால் மற்ற பாகங்கள் எளிதில் வெளிவந்துவிடும். பின்பு அதன் மூக்கு மற்றும் வாய்ப்பாகத்தைச் சுத்தம் செய்யவேண்டும். குட்டி நடுங்கிக்கொண்டு இருந்தால் அதற்கு முறையான படுக்கை வசதி அமைத்துத் தரவேண்டும்.

அவ்வாறு வெளிவரவில்லையெனில் கால்நடை மருத்துவரை அழைத்தல் அவசியம். சில சமயங்களில் குட்டியின் தோள்பட்டை சரியாக அமையவில்லை எனில் குட்டி கருப்பையை விட்டு வெளியே வராது. அத்தருணங்களில் மருத்துவர் மட்டுமே கருப்பை வரை கை விட்டு குட்டியை சிறிது பின்தள்ளிப் பின் வெளி வர வைப்பார்.
Goat_kidding_3
சுத்தம் செய்தல்
 • குட்டி பிறந்தவுடன் தாயானது குட்டியை நாக்கினால் தடவி சுத்தம் செய்யவேண்டும். இது பின்னர் அதன் குட்டியை அடையாளங்காண உதவும். குட்டியின் மேலுள்ள மியூகஸ் உறையை தாய் ஆடே நக்கி சுத்தம் செய்து விடும். ஒன்றுக்கும் மேற்பட்ட குட்டிகள் ஈனும் போது தாய் ஆடு சரியாகச் சுத்தம் செய்ய முடியாது. முதல் குட்டி பிறந்த உடன் அதை ஆட்டின் தலைப்பாகம் முன்பு வைக்கவேண்டும். இல்லாவிடில் அடுத்த குட்டி அதன் மேலேயே விழுந்துவிட வாய்ப்புள்ளது.
Goat_Cleaning_Kid
கவனிக்க வேண்டிய பிரச்சனைகள்
 • குட்டி பிறந்தவுடன் தாய் ஆட்டைவிட்டு நகர்ந்து சென்று விடலாம். ஆடு இரண்டாவது குட்டி ஈனும் போது முதல் குட்டி தொலைவில் சென்றுவிட்டாலோ அல்லது தாய் ஆடு அதை சுத்தப்படுத்தாவிட்டாலோ பின்பு அக்குட்டியைத் தாயானது அடையாளம் காண முடியாமல் போய் விடும். மீண்டும் அக்குட்டி பாலூட்ட தாயிடம் வரும் போது ஆடு முட்டித் தள்ளிவிடும்.
 • சரியாகத் தாயாடானது குட்டியைச் சுத்தப்படுத்தாவிடில் குட்டிக்கு மூச்சுத் திணறல் ஏற்பட வாய்ப்புண்டு.
 • முதல் முறை குட்டி ஈனும் ஆட்டிற்கு எவ்வாறு சுத்தம் செய்வதெனச் சரியாகத் தெரியாது. அவ்வாறு இருக்கையில் துணி அல்லது வைக்கோல் கொண்டு குட்டியை, நாம் சுத்தப்படுத்த வேண்டும்.
 • சில குட்டிகளில் கால் சரியாக முடியாது. வளைந்து காணப்படும். அவை தானாகவே சரியாகி விடலாம் அல்லது ஓரிரு நாட்கள் அக்குட்டிகளின் காலை நீவி விட்டு நடக்கப் பயிற்சி அளித்தால் சரியாகிவிடும்.
Goat Wit Kid
முதல் இரண்டு மணி நேரத்தில் செய்ய வேண்டியவை
 • வெள்ளாடு கொட்டிலுக்கு வெளியே குட்டியை ஈன்று இருந்தால் ஆட்டையும் குட்டிகளையும் சுத்தப்படுத்திய கொட்டிலுக்குள் எடுத்து வரவேண்டும். பின்பு தூய குளிர்ந்த நீரையும், தட்டு வைக்கோல் போன்ற உலர் தீவனத்தை ஆட்டிற்கு அளிக்கவேண்டும்.
 • தாய் ஆட்டுக் குட்டியை சுத்தப்படுத்தியவுடன் குட்டியை எடுத்து அதன் தொப்புள் கொடியை 1 அங்குலம் விட்டு நறுக்கி விட்டுப் பின் 7 சதவிகிதம் அயோடின் தொற்று நீக்கியை தடவி விடவேண்டும்.
 • ஆட்டின் காம்பில் மெழுகு போன்ற பொருள் பால் வராமல் அடைத்துக் கொண்டிருக்கலாம். அதைக் கவனித்து நீக்கிப் பால் சீராக வருமாறு செய்யவேண்டும்.
 • குட்டி சரியாக பாலூட்டுகிறதா, சீம்பால் வீணாகாமல் குடிக்கிறதாவென்பதைப் பார்த்துக் கொள்ள வேண்டும். எந்த அளவு சீம்பாலை ஒழுங்காகக் குடிக்கிறதோ அந்த அளவுக்கு அதன் உடல் ஆரோக்கியத்துடன் இருக்கும்.
 • குட்டிக்கு பால் ஊட்டத் தெரியவில்லை எனில் காம்பை எடுத்துக் குட்டியின் வாயில் வைத்துச் சப்பிப் பழக்கவேண்டும். சிறிது சீம்பால் குடித்தவுடன் 2 சிசி அளவு பார் கார்டு 99 என்ற தடுப்பூசி அளிக்கலாம்.
 • இவ்வாறு அத்தியாவசிய ஊட்டங்கள் முடிந்தபின் குட்டிகளை தாயுடன் சேர்த்தோ அல்லது தனியே ஒரு நாய்க்குடில் போன்ற கூடையில் அது சுதந்திரமாக உலவுமாறு விட்டு வைத்தல்  வேண்டும்.
Goat_kids
குட்டி ஈன்றபின் வெளிவரும் கழிவுகள்

குட்டி ஈன்றபின் குறைந்தது ஒரு மணி நேரத்திற்குள்ளோ அல்லது அதிகபட்சமாக 24 மணி நேரத்திற்குள் மீதமுள்ள குமிழ் / கழிவு நீர் வெளிவந்து விடும். தானாக விழாவிட்டால் சிறிது தொங்கிக் கொண்டிருக்கும் நீர்ப்பையை இழுத்தாலும் எளிதில் விழுந்துவிடும். இல்லையெனில் சிறிது ஆக்ஸிடோசின் மருந்தை அளித்தால் நீா்க்குடம் உடைந்து வெளியில் கொட்டி விடும்.

பொதுவாக நீர்க்குடம் மற்றும் நஞ்சுக்கொடி வெளிவருவது கடைசியாகத்தான். ஏதேனும் ஒரு முறை அரிதாக நீர்க்குடம் வெளிவந்தபின் குட்டி பிறந்தாலும் அது உயிரோடு இருக்க வாய்ப்பில்லை.
வெள்ளாடுகளுக்கான ஊட்டச்சத்துக்கள்

புரதம்


நைட்ரஜன் அதிகமுள்ள ஊட்டச்சத்து புரதம் ஆகும். இந்தப் புரதமானது இரைப்பையிலுள்ள நுண்ணுயிரிகளால் தேவையான அளவு அமினோ அமிலமாக உற்பத்தி செய்யப்படுகிறது. இதுவே நல்ல பால் உற்பத்திக்கு அத்தியாவசியம்.
மேலும் புரதமானது கால்நடைகளின் உடல் வளர்ச்சிக்கு தேவையான திசுக்களை உற்பத்தி செய்கிறது. அதோடு பால் உற்பத்தி, நோய் எதிர்ப்பு, இனப்பெருக்கம் மற்றும் பராமரிப்பிற்கு அவசியமாகிறது. மீதமுள்ள நைட்ரஜன் ஆற்றலாக மாற்றப்படுகிறது. இது சற்று விலை உயர்ந்ததாகையால், தேவைக்கதிகமாகக் கொடுத்து வீணாக்குதல் கூடாது. 12-16 சதவிகிதம் புரோட்டின் ஒரு ஆட்டிற்குத் தேவைப்படுகிறது.

புரோட்டீனை உற்பத்தி செய்ய யூரியா போன்ற புரோட்டீனற்ற நைட்ரஜன் பொருட்களை இரைப்பையிலுள்ள நுண்ணுயிரிகள் பயன்படுத்திக் கொள்ளும். ஆனால் இது கால்நடைகளுக்கு மட்டுமே. ஆடுகள் சிலவகைப் பயிர்களை மட்டுமே தேர்ந்தெடுத்து உண்ணும்.
ஆற்றல்

எல்லா ஊட்டச்சத்துக்களும் ஆற்றலை உருவாக்கவே பயன்படுகின்றன. பெரும்பாலான ஆற்றல், நார்ப்பொருட்கள், பசுந்தீவனங்களிலிருந்தும் பெறப்படுகிறது. ஆற்றல் அடர் தீவனம் ஸ்டார்ச், கொழுப்பு போன்றவற்றிலிருந்தும் பெறப்படுகிறது. சரியாக தேவைப்படும் ஆற்றல் கிடைக்காவிடில் பருவமடைதல் தள்ளிப் போதல், குறைபாட்டுடன் கூடிய உடல், வளர்ச்சி தடைபடுதல், இனப்பெருக்கத் திறன் குறைதல் போன்ற விளைவுகள் ஆட்டில் ஏற்படுகின்றன.
ஆற்றல் இரு வழிகளில் அளக்கப்படுகிறது. ஒன்று மொத்த செரிக்கக்கூடிய ஊட்டச்சத்துக்கள். பெயருக்கேற்றாற்போல் இம்முறையில் செரிக்கக்கூடிய கார்போஹைட்ரேட், புரதம் மற்றும் கொழுப்பு போன்றவை அளவிடப்படும். இம்முறையில் கழிவுகளில் வீணாகும் ஊட்டசத்துக்கள் எடுத்துக் கொள்ளப்பட்டு உடல் பராமரிப்பு, எடை அதிகரிப்பு, பால் உற்பத்திக்குப் பயன்படுத்தப்பட்ட அளவு கணக்கிடப்படுகிறது.
தாது உப்புக்கள்

கால்சியம், பாஸ்பரஸ் உப்பு போன்ற பல தாதுக்கள் வெள்ளாடுகளின் வளர்ச்சிக்குத் தேவைப்படுகின்றன. இவை தினசரி பசுந்தீவனம் மற்றும் அடர் தீவனம் அளித்தலின் மூலம் பெறப்படுகிறது. ஆடுகள் தாதுக்களைத் தாமாகத் தயாரிக்க இயலாது. எனவே அடர் தீவனத்தில் தேவையான தாதுக்களின் கலவையைச் சேர்த்துக் கலப்புத் தீவனமாக வழங்கலாம். கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் சேர்த்துக் கலப்புத் தீவனமாக வழங்கலாம். கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் தாதுக்கள் ஆடுகளுக்கு மிக முக்கியம். எனவே 2:1 என்ற விகிதத்தில் அளித்தல் அவசியம்.
விட்டமின்கள்

விட்டமின்கள் ஆடுகளுக்குச் சிறிதளவே தேவைப்படும். எனினும்  விட்டமின் பி.கே போன்றவை இரைப்பையிலும் விட்டமின் சி உடல் திசுக்களிலும் தயாரித்துக் கொள்ளப்படுகிறது. விட்டமின் ஏ, டி, ஈ போன்றவை கோடைக்காலங்களில் சூரிய ஒளியில் தயாரிக்கப்பட்டு குளிர்காலங்களுக்கும், சேமித்து வைக்கப்படுகிறது.
இருந்தாலும் தானியத் தீவனங்களுடன் 6 மில்லியன் அலகு விட்டமின் ஏவும் 3 மில்லியன் அலகு விட்டமின் டியும் கலந்து கொடுத்தல் குளிர்காலங்களில் சிறந்தது.
கொழுப்பு

அசைபோடும் கால்நடைகளுக்கு கொழுப்பு குறைவாகவே தேவைப்படும். 1.5-2.5 சதவிகிதம் வகையுடன் கொழுப்பு சிறிது சேர்த்தல் நல்லது.
நீர்

இது மிகக் குறைவாகவே ஆடுகளில் எடுத்துக்கொள்ளப்பட்டாலும், பற்றாக்குறை ஏற்பட்டால் பால் உற்பத்தி பாதிக்கப்படும். விலங்குகளின் உடல் செல்களில் நிர் மிகக் குறைந்தளவே இருந்தாலும் உடற்செயல்களுக்கு அது மிக அத்தியாவசியம். கழிவுகளை வெளியேற்றுதல், உடல் வெப்பநிலையைக் கட்டுப்படுத்துதல், ஊட்டச்சத்துக்களைக் கடத்துதல், செரிமானம் போன்றவற்றிற்கு நீர் மிக அவசியம். நாளொன்றுக்கு இரு முறை நீர் வைத்தல் நல்ல பால் உற்பத்திக்கு உதவும்.

(ஆதாரம்: www.jackmauldin.com)

0 comments :

Post a Comment