Thursday, 31 October 2013

கோழிப்பண்ணை மேலாண்மை :

 
கோழிப்பண்ணை மேலாண்மை என்பது நல்ல உற்பத்தியைப் பெறக் கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகளைப் பற்றிக் கூறுவதாகும். உற்பத்தித் திறனை அதிகரிக்க நல்லப் பராமரிப்பு முறைகளைக் குறைந்த செலவில் செய்தல் வேண்டும். இதுவே அறிவியல் பூர்வமான கோழிப்பண்ணை மேலாண்மையாகும்.
அடைக்காக்கும் வீடு
அடைக்காக்கும் இடம் அதிகத்தூசுகள் இன்றி, மழை மற்றும் ஒட்டுண்ணிகளிடமிருந்து குஞ்சுகளுக்குப் பாதுகாப்புத்  தருமாறு இருக்கவேண்டும். அடைகாப்புக் கொட்டிலில் கம்பி வலை பொருத்தப்பட்ட ஜன்னல்கள் அமைப்பது நல்ல காற்றோட்டத்திற்கு உதவும். அதிகத் தூசுகள் குஞ்சுகளுக்கு தூசுகளற்ற மூச்சு விடுவதில் சிரமம் ஏற்படுத்தும். அதே போல் அதிக ஈரப்பதமும், கண் மற்றும் மூக்குக்குழலை பாதிக்கும் அம்மோனியா வாயு உற்பத்திக்கு வழி வகுக்கும். எனவே நல்ல தூசுகளற்ற காற்றோட்டத்துடன் கூடிய கொட்டகையை அடைகாக்கும் இடமாகப் பயன்படுத்தவேண்டும்.

சுகாதாரம்
கொட்டகையிலிருந்து அகற்றக்கூடிய தீவன, நீர்த்தொட்டிகள், கருவிகள், கூளங்கள் போன்றவைகளை நீக்கிவிட்டு ஒரு நல்ல கிருமி நாசினியைப் பரிந்துரைக்கப்பட்ட அளவில் பயன்படுத்தி கொட்டகையை நன்கு சுத்தம் செய்ய வேண்டும். ஒட்டுண்ணி மற்றும் பூச்சித்தாக்குதலைக் கட்டுப்படுத்த பூச்சி மருந்து தெளிக்கவேண்டும். பழைய கூளங்களை நீக்கிவிட்டபின் மீண்டும் பயன்படுத்தக்கூடாது. தேவைப்படின் சிறிய அளவில் பூச்சிக்கொல்லியைப் புதிய கூளங்களுடன் கலந்து பயன்படுத்தலாம். மாலத்தியான் போன்ற மருந்தை தெளித்தோ, தூவிவிடுவதன் மூலமோ பேன், உண்ணி போன்ற ஒட்டுண்ணிகளைக் கட்டுப்படுத்தலாம்.

கூளங்கள்
மரத்தூள், நெல் உமி போன்ற கிடைக்கக்கூடிய பொருட்களைப் பயன்படுத்தி 5 செ.மீ அளவிற்குக் கூளங்களை உருவாக்கவேண்டும். பூஞ்சாண் எளிதில் வளரும் பொருட்களைப் பயன்படுத்துதல் கூடாது. கூளங்கள் கட்டி பிடிக்காமல் இருக்க அவ்வப்போது கிளறிவிடவேண்டும். அம்மோனியா வாயு உருவாகாமல் தடுக்க ஈரமடைந்த கூளங்களை உடனுக்குடன் அகற்றிப் புதிய கூளங்களை அவ்விடத்தில் போடவேண்டும்.
அடைகாப்பு வெப்பநிலை
அடைக்காப்பானில் வெப்பநிலை சரியாக இருக்க சூடுபடுத்துதல் வேண்டும். மிக அதிக அல்லது மிகக்குறைந்த வெப்பநிலை குஞ்சுகளின் வளர்ச்சியைப் பாதிக்கும் அடைகாக்கும் முதல் வாரத்தில் 95 டிகிரி ஃபாரன்ஹீட் (35 டி செ) இருக்கவேண்டும். பின்னர் இது வாரத்திற்கு 5 டிகிரி ஃபாரன்ஹீட் குறைக்கப்பட்டு 70 டிகிரி ஃபாரன்ஹீட் வரை கொண்டு வரப்படுகிறது. குஞ்சு பொரிக்கும் நிலையில் அடைக்காப்பான் 24 மணிநேரமாகும்.
poultry_brooder
அடைகாப்பு

தம்ப் விதியின் படி அடைகாப்பானின் வெப்பநிலை 20 டிகிரி செ ஆக இருக்கவேண்டும். ஒரு வெப்பநிலைமாயி அடை (-6.7 டி செ) காப்பானில் தொங்கவிடப்பட்டிருக்க வேண்டும். மேலும் குஞ்சுகளின் செயல்களைக் கொண்டும் வெப்பநிலை சரியானதாக உள்ளதா என்பதைத் தெரிந்து கொள்ளலாம். அதாவது வெப்பநிலை மிகவும் குறைவாக இருந்தால் குஞ்சுகள் அனைத்தும் ஒன்றையொன்று நெருக்கிக் கொண்டு சூடாக்கி (விளக்கு) யின் கீழ் வந்து நிற்கும். வெப்பநிலை மிக அதிகமாக இருந்தால் அவை சூடாக்கியின் அருகில் வராமல் விலகியே இருக்கும். இவ்வாறின்றி குஞ்சகள் சமமாக எல்லா இடத்திலும் பரவிக் காணப்பட்டால் வெப்பநிலை குஞ்சுகளுக்கு ஏற்ற அளவு உள்ளது என்று கணிக்கலாம். வெப்பக் காலங்களில் 3 வாரங்களுக்கு மேல் உள்ள குஞ்சுகளுக்கு சூடாக்கிகள் தேவைப்படுவதில்லை. செயற்கையாக வெப்பநிலையை அளிக்கப் பல சூடாக்கிகள் பயன்படுத்தப்படுகின்றன. வட்ட வடிவ முன்னும் பின்னும் நகரக் கூடிய மின்சார அடைக்காப்பான்கள் அதிகம் பயன்படுத்தப்படுகின்றன. இதனும் வெப்பநிலையானது தானாகவே சரி செய்து கொள்ளப்படுகிறது. மின்சார விளக்குகளையும் சூடாக்கியாகக் பயன்படுத்தலாம். ஆனால இம்முறையில் வெப்பநிலையைக் கட்டுப்படுத்துவது கடினம். அகச்சிவப்பு விளக்குகளும் பயன்படுத்தலாம். அடைக்காக்கும் வீட்டிற்கு தேவையான வெப்பநிலைக்கேற்ப அகச்சிவப்பு விளக்குகளின் உயரத்தையும் எண்ணிக்கையையும் மாற்றி அமைத்துக் கொள்ளலாம்.
அடைக்காப்பான் இடவசதி     
ஒரு குஞ்சுக்கு 7-10 சதுர அங்குலம் (45-65 செ.மீ 2) என்ற அளவில் இடம் தேவைப்படுகிறது. 1.80 மீ அளவுள்ள அடைக்காப்பானில் 500 குஞ்சுகள் வரை அடைக்கலாம். சிறிய வெப்பக்கூடு அல்லது அடைப்பான் பயன்படுத்தும் போது அதற்கேற்றவாறு குஞ்சுகளைக் குறைத்துக் கொள்ளவேண்டும்.  அதிகக் குஞ்சுகளைக் குறைவான இடத்தில் போட்டு அடைத்தால் அவை மூச்சுத்திணறி, ஒன்றையொன்று மிதித்துக் கொண்டு இறக்க நேரிடலாம்.

அடைக்காப்பான் தடுப்பு
வெப்பக்கூண்டிலிருந்து குஞ்சுகள் அதிகத்தூரம் விலகி ஓடாமல் இருக்க 1.05-1.50 மீட்டர் தூரம் இடைவெளி கொண்டு தடுப்புகள் பயன்படுத்தப்படுகின்றன. வாரத்திற்குப் பிறகு இத்தடுப்புகள் தேவைப்படாது.

தரை இடஅளவு
ஆரம்பத்தில ஒரு குஞ்சுக்கு 0.05 மீ 2 அளவு இடமும் பின்பு 20 வார வயது வரை 4 வாரங்களுக்கு ஒரு முறை 0.05 மீ 2 அளவு அதிகப்படுத்திக் கொண்டே போகவேண்டும். பிராய்லர் இரகக் கோழிகளுக்கு 0.1 மீட்டர் பெட்டைக் கோழிகளுக்கும், சேவல் கோழிகளுக்கு 0.15 மீ 2 இடமும் 8 வார வயது வரை வழங்கப்படவேண்டும். பெட்டைக்குஞ்சுகளுக்கும், சேவல் குஞ்சுகளுக்கும் தனித்தனியே கொட்டில் அமைத்துப் பராமரித்தல் சிறந்தது.

நீர்த்தொட்டி அமைக்கும் இடைவெளி
கோழிகளுக்கு சுத்தமான தண்ணீர் தாராளமாகக் கிடைக்கச்செய்யவேண்டும். முதல் 2 வார வயதுள்ள 100 குஞ்சுகளுக்கு 50 செ.மீ இடைவெளியில் நீர்த்தொட்டிகள் வைக்கப்படவேண்டும். 6-8 வார வயதுடைய கோழிக்குஞ்சுகளுக்கு இடைவெளியானது 150-190 செ.மீ ஆக அதிகரிக்கப்படவேண்டும். சிறிய குஞ்சுகளுக்கு குடிநீர் நீருற்றுப் போல் வழங்கவேண்டும். இந்நீரூற்றானது பின் குஞ்சுகள் வளரும் போது நீக்கிவிட்டு நீர்த் தொட்டிகள் வைக்கப்படுகின்றன. நீர்த்தொட்டிகள் கோழியின் பின்பாகத்திலிருந்து 2.5 செ.மீ உயரத்தில் வைக்கப்படவேண்டும். எதிர் உயிர்ப்பொருள்கள் அல்லது பிற மருந்துகள் பரிந்துரைப்படி தேவைப்படின் குடிநீரில் கலந்து கொடுக்கலாம். சிலக் குஞ்சுகளை  ஒன்றாகப் பிடித்து நீரை அருந்த வைத்துப் பழக்கலாம். நீர்த் தொட்டில்கள் தினந்தோறும் சுத்தம் செய்யப்படவேண்டும்.

0 comments :

Post a Comment